
Chandrayaan 3 lander after 14 days on the moon
சந்திரயான்-3 14 நாட்கள் கழித்து ரோவரின் செயல்பாடு என்ன? நிலவில் எத்தனை நாட்கள் இது செயல்படும்..!
விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் நிலவில் தொடர்ந்து 14 நாட்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.
இந்த 14 நாட்கள் முடிந்த பிறகு இந்த லேண்டர் மற்றும் ரோவரின் நிலை என்ன என்பது குறித்து கேள்விக்குறியாக இருக்கிறது?
ஏனென்றால் நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த ஒரு நாடும் ஆய்வு செய்ய செயற்கைக்கோள்களை அனுப்பியது கிடையாது.
இந்தியா மட்டுமே முதன் முதலில் அனுப்பி உள்ளது இப்பொழுது நிலவில் இருக்கும் சிறிய ரோவர் 14 நாட்களுக்குப் பிறகு என்ன ஆகும் என்பதை கேள்விக்குறியாக இருக்கிறது.
பூமியின் துணைக்கோள் நிலா இதில் என்னதான் இருக்கிறது,அதில் உயிர்கள் வாழ சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து பல்வேறு ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்துவிட்டாலும் அங்கு இதுவரை முழுமையாக ஆராய்ச்சி முடியவில்லை.
நிலவு குறித்து ஆராய்ச்சியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் இப்பொழுது இருக்கிறது.
அந்த வகையில் சந்திராயன் திட்டங்களில் மூலம் நிலவு குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்தியா கடந்த ஜூலை 14ஆம் தேதி சந்திராயன்-3 விண்கலத்தை நிலவில் செலுத்தியது.
இந்த விண்கலம் 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு கடந்த 23ஆம் தேதி நிலவில் கால் பதித்தது,தற்போது விக்ரம் லேண்டரிலிருந்து வெளியே வந்த பிரக்கையான் ரோவர்,நிலவில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.
நிலவில் ஒரு நாள் என்பது எத்தனை மணி நேரம்
நிலவில் தொடர்ந்து 14 நாட்கள் ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது இந்த சிறிய ரோவர்.
நிலவின் மேற்பரப்பில் நிலவும் சூழல், அங்குள்ள தன்மை, உள்ளிட்டவற்றை குறித்து ஆய்வு மேற்கொள்கிறது.
நிலவைப் பொறுத்தவரை 14 நாட்கள் தொடர்ந்து பகலாகவும் அதன்பிறகு 14 நாட்கள் தொடர்ந்து இரவாகவும் இருக்கும்.
நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாட்களைக் குறிக்கும் லேண்டெர் கருவி சூரிய வெப்பத்தை பயன்படுத்தி செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிலவில் மேற்பரப்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆய்வுகளும் நிலவில் பகல் பொழுதில் நடைபெறும் 14 நாட்கள் தனது ஆய்வை ரோவர் முடித்து விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு நிலவில் இரவு தொடங்கிவிடும் தொடர்ந்து 14 நாட்கள் இருளாகவே இருக்கும் என்பதால் லேண்டெர் கருவிக்கு சூரிய ஒளி கிடைக்காது.
இன்னும் சொல்லப்போனால் நிலவின் வெப்பநிலை -113 டிகிரி செல்சியஸ்க்கு மேலே இருக்கும்.
விக்ரம் லேண்டெர்,பிரக்யான் லேண்டெர் பூமிக்கு மறுபடியும் திரும்பாது நிலவியிலே இருக்கும் லேண்டெர் மற்றும் ரோவர் இரவு நேரத்தில் செயல்படாது.
14 நாட்கள் கழித்து அதனை செயல்பட வைக்கும் திட்டம் எதுவும் இல்லை என இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
எனினும் 14 நாட்கள் இரவு முடிந்த பிறகு விக்ரம் லெண்டர் மற்றும் ரோவர் தாங்கி நின்று மீண்டும் செயல்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
சந்திரயான் 3 லேண்டர் வெற்றிகரமாக நிலவை அடைந்தது
லிட்டருக்கு 40 கிலோமீட்டர் மைலேஜ் தரும் மாருதியின் புதிய கார்..!