
Chandrayaan 3 Rocket Launch Date time 2023
விண்ணில் பாய தயாராகும் சந்திராயன் -3 26 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடங்கிவிட்டது..!
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுத்தளத்தில் இருந்து நாளை மதியம் 2 மணி 37 நிமிடம் 17 வினாடிகளில் சந்திரன் 3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது.
இதற்காக இன்று பகல் 1 மணிக்கு 26 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்க உள்ளதாக.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இஸ்ரேதரப்பிலிருந்து ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரே விண்வெளி ஆய்வு நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்கு சந்திராயன் 2 என்ற விண்கலத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு விண்வெளியில் செலுத்தியது.
பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்பு சந்திராயன்-2 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவில் சுற்றுப்பாதையை சென்றடைந்தது.
எனினும் அப்பொழுது தொழில்நுட்ப கோளாறால் திட்டமிட்டபடி அதனுள் இருந்த சிறிய லேண்டெர் தரையிறங்காமல் நிலவில் மோதி செயல்யிழந்தது.
அதேநேரம் மின்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது,அதன் பிறகு ரூபாய் 615 கோடியில் சந்திராயன் 3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது.
இந்த விண்கலம் எல்.வி.எம் மூன்று எம் 4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள 2ம் ஏவுத்தளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகள் அதன் இறுதி கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள் சந்திராயன்-3 விண்கலத்தை ஏவுவதற்கு திட்ட ஒத்திகை நிகழ்வும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
தொடர்ந்து ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடைந்து இன்று பகல் 1 மணிக்கு சந்திராயன்-3 26 மணிநேர கவுண்ட்டவுன் தொடங்குகிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுத்தளத்தில் இருந்து நாளை மதியம் 2 மணி 37 நிமிடம் 17 வினாடிகளில் சந்திராயன்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் பய உள்ளது.
இதற்காக இன்று பகல் 1 மணிக்கு 26 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்க உள்ளது.
இஸ்ரே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது சந்திராயன்-3 விண்கலத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் 4வது நாடு என்ற பெருமையை இந்திய பெறும் என மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
விண்வெளி துறையில் சாதிக்கும் இந்தியா
இந்தியா சுதந்திரம் பெற்று சுமார் 75 ஆண்டுகள் நிறைவடையும் சூழ்நிலையில் இப்பொழுது பொருளாதாரம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், விண்வெளி ஆராய்ச்சி.
விவசாயம்,மென்பொருள் உற்பத்தி,என பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குகிறது.
இந்தியாவின் முன்னணி கல்லூரிகளில் படிக்கும் சிறந்த பொறியியல் மாணவர்கள் உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் மேலாளராகவும் முதன்மை நிர்வாகியாகவும் பணியாற்றுகிறார்கள்.
குறிப்பாக அமெரிக்கா,கனடா,இங்கிலாந்து,ஆஸ்திரேலியா,ஜப்பான், போன்ற நாடுகளில் உள்ள விண்வெளி நிலையங்களில் இந்தியர்களின் பணி என்பது மிக அதிகம்.
இந்தியா ஆண்டுதோறும் புதிய சாதனை படைத்து வருகிறது இந்த ஆண்டும் சந்திரனின்-3 என்ற விண்கலத்தை செலுத்த உள்ளது, மேலும் செவ்வாய் கிரகத்திற்கும் விண்கலத்தை செலுத்துவதற்கும் பல்வேறு பணிகளை இந்திய தொடங்கியுள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to protect pan card aadhar card 2023
How to get token for magalir urimai thogai..!