
Chandrayaan 3 will land on the moon this evening
இன்று மாலை நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டெர் முக்கியமான விஷயங்கள்..!
நேரடியாக இதனை நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கலாம் எப்படி பார்க்க முடியும் எந்த தொலைக்காட்சி, எந்த இணையதளத்தில்.
நிலவின் தென் துருவத்தில் இன்று மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ள நிலையில்.
இந்த காட்சியை உலகம் முழுவதோடு காண ஆவலுடன் இந்தியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள், இன்று மாலை 5.20 மணி முதல் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
பூமியின் துணைக்கோள் நிலாவை இதுவரை சந்திரயான்-1,சந்திரயான்-2 ஆகிய இரண்டு விண்கலங்களை அனுப்பி இந்தியா ஆய்வு செய்துள்ளது.
இதன் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பதை இந்தியா உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14ஆம் தேதி சந்திரயான்-3 என்ற புதிய அதிநவீன விக்ரம் லேண்டெர் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் கடந்த 40 நாட்களாக பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதையில் பயணித்து நிலவை நெருங்கி வருகிறது.
முதலில் புவி வட்டப் பாதையில் சுற்றிய விண்கலம் தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக சுற்றிக்கொண்டு இருக்கிறது.
இன்று மாலை 6.04நிமிடத்திற்கு நிலவின் தென் துருவத்தில் தரை இறக்க திட்டமிடப்பட்டுள்ளது,ஏற்கனவே சந்திரயான்-2 விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் கருவியுடன் தற்போது அனுப்பி வைக்கப்பட்ட லேண்டெர் கருவியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
ரேடியோ அலை வரிசையில் இரண்டும் இயங்குவதால் எளிதாக தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டது,இது இந்தியாவின் ஆராய்ச்சிக்கு மிக சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தி உள்ளது.
லேண்டரும் ஆர்பிட்டரும் தங்களுக்கு இடையே தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளதால் லேண்டெர் நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரை இறங்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
இந்த நிலையில் இது இறுதி கட்ட நிகழ்வுகளுக்கு திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும் லேண்டர்
நேற்று நிலவின் மேலே 70 கிலோமீட்டர் உயரத்தில் இருந்த லேண்டெர் எடுத்த துல்லியமான நிலவின் தரைப்பகுதி புகைப்படத்தை விஞ்ஞானிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.
கடைசி கட்டத்தில் லேண்டரின் செயல்பாடு இயல்பு நிலையில் இருந்து வேறுபட்டால் நிலவில் தரையிறங்கும் திட்டத்தை வருகிற 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கவும் விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளார்கள்.
லேண்டை தரையிறங்கும் கடைசி 15 நிமிடத்திற்கு முன்பு விக்ரம் லேண்டெர் கருவி நிலவுக்கு மேலே குறைந்தபட்சம் 30 கிலோமீட்டர் தொலைவிலும் அதிகபட்சம் 100 கிலோமீட்டர் தொலைவிலும் சுற்றிவரும் வகையில் செயல்முறை செய்யப்பட்டுள்ளது.
விக்ரம் லேண்டெர் கருவியின் அடியில் உள்ள நான்கு கால்களும் கீழ்நோக்கி இருக்காது பக்கவாட்டில் இருக்கும்படி செய்யப்பட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் இறங்கும்போது ராக்கெட் தொழில்நுட்பத்தை செயல்படுத்தி விக்ரம் லேண்டைரை தரையிறங்க முடிவு செய்துள்ளார்கள்.
முதலில் பூமிக்கு வெளியே சந்திரயான்-3 ராக்கெட் கொண்டு சென்றது,அதேபோல் நிறைவாக லேண்டர் கருவியை நிலவில் தரையிறங்க செய்யும்போது அதை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்