
Chettinad muttai gravy masala recipe in tamil
மண் மணக்கும் செட்டிநாடு முட்டை கிரேவி மசாலா செய்வது எப்படி..!
அசைவ உணவு பிரியர்கள் இன்றைய காலகட்டங்களில் அதிகமாகி விட்டார்கள் அதிலும் குறிப்பாக விதவிதமான அசைவ உணவு செய்யப்படுகிறது.
இவை அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது மீன், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழி இறைச்சி, போன்றவைகளில் பல்வேறு விதமான உணவுகள் தயாரிக்கப்படுகிறது.
செட்டிநாடு மண் மணக்கும் அசைவ உணவுகளில் முட்டை கிரேவி மசாலாவுக்கு எப்பொழுதும் தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்
ஏனென்றால் அந்த அளவிற்கு இதனுடைய சுவை இருக்கும்.
இந்த கட்டுரையில் செட்டிநாடு கிரேவி முட்டை மசாலா செய்வது எப்படி அதனை எந்த மாதிரியான உணவுகளுக்கு பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
சப்பாத்தி, பூரி, வெள்ளை சாதம், களி,பரோட்டா, போன்ற உணவுகளுக்கு செட்டிநாடு முட்டை கிரேவி மசாலா பயன்படுத்தினால் தனி சுவையாக இருக்கும்.
தேவையான மூலப்பொருட்கள் என்ன
முட்டை – 10 வேக வைத்தது இரண்டாக வெட்டியது
பெரிய வெங்காயம் -(1 கப்) சிறிதாக நறுக்கியது
தக்காளி – (1 கப்) பொடி பொடியாக நறுக்கியது
மல்லி தூள் -2டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் -1/2 டீஸ்பூன்
பட்டை – சிறிதளவு
கிராம்பு – 3
கடலை எண்ணெய் -3டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
பூண்டு -5 பல்
இஞ்சி – சிறிய துண்டு
துருவிய தேங்காய் -3 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 2டீஸ்பூன்
மிளகு – 1டீஸ்பூன்
கசகசா -2டீஸ்பூன்
சீரகம் – 1டீஸ்பூன்
வரமிளகாய் – 3
செட்டிநாடு முட்டை குருமா மசாலா செய்முறை
முதலில் முட்டைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றி வைத்து நன்றாக முட்டைகளை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு முட்டைகளை குளிர்ந்த நீரில் போட்டு குளிர்வித்து ஓடுகளை நீக்கி தனித்தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் செட்டிநாடு மசாலாவிற்கு தேவையான தேங்காய், சோம்பு, மிளகு, பூண்டு, இஞ்சி, மல்லி, சீரகம், வரமிளகாய், கசகசா ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வெண் நிறமாக வரும் வரை வருகை இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிய அளவில் நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும், அல்லது அம்மிக்கல்லில் நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் இந்த மசாலாவை.
இன்று ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வெண்ணிறமாக வதக்கி பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வரும் வரை தொடர்ந்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் அரைத்த செட்டிநாடு மசாலாவை சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் நன்றாக வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் மிளகாய் தூள், கார மசாலா, மல்லி தூள் சேர்த்து கிளறி கடலை எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது எப்படி
அடுத்து அதில் அரை கப் நீரூற்றி சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
பின்பு நீங்கள் வேகவைத்து இரண்டாக வெட்டிய முட்டையை கிரேவில் சேர்த்து சுமார் 5 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து இறக்கினால் இப்பொழுது சுவையான செட்டிநாடு முட்டை கிரேவி தயாராகிவிட்டது.
இதனுடன் மேலும் சுவை கூட்டுவதற்கு மல்லி தூள் அல்லது புதினா இலைகளை சேர்த்தால் நன்றாக இருக்கும்.
சுவையான ரவா குலோப்ஜாம் செய்வது எப்படி..!
மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி..!
சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..!
காளான் பிரியாணி வீட்டிலிருந்து செய்வது எப்படி