உறவுகள்

குழந்தை இறந்துவிட்டது சென்னையில் கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை நினைவு இருக்கிறதா..!Child who had his arm amputated died in Chennai

Child who had his arm amputated died in Chennai

Child who had his arm amputated died in Chennai

குழந்தை இறந்துவிட்டது சென்னையில் கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை நினைவு இருக்கிறதா இன்று வெளியான அதிர்ச்சிகரமான செய்தி..!

கடந்த மாதம் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை முகமது மகிர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த தம்பதிகளுக்கு ஒன்றை வயதில் முகமது மகிர் என்ற ஆண் குழந்தை குறை பிரசவத்தில் 1.5 கிலோ எடையில் பிறந்த குழந்தை.

குழந்தை ஒன்றரை வயதான நிலையில் குழந்தைக்கு பல்வேறு உடல் நல குறைபாடுகள் ஏற்பட்டது.

நரம்பியல் கோளாறு மூலையில் செரிப்ரோஸ்பைனல் திரவம் (Cerebrospinal fluid),Hydrocephalus (ஹைட்ரோகெபாலஸ்) உட்பட பல உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு கடந்த ஜூன் மாதம் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய குழந்தைக்கு ஜூன் 25ஆம் தேதி தலையில் பொருத்தப்பட்டிருந்த டியூப் இயற்கை உபதை கழிக்கும்போது வெளியே வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் மீண்டும் குழந்தையை தூக்கிக் கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார் குழந்தையின் உடல்நிலை பரிசோதனை மருத்துவர்கள்.

உடனடியாக அன்று இரவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்தனர், குழந்தைக்கு இரண்டு கையிலும் டிப்ஸ் ஏற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்தார்கள்.

கடந்த 29ஆம் தேதி குழந்தையின் வலது கையில் டிரிப்ஸ் மூலம் மருந்து செலுத்தி இருக்கின்றார்கள்.

கையில் திடீரென்று நிறம் மாறத் தொடங்கியது

இந்த நிலையில் குழந்தையின் கையின் நிறம் திடீரென்று மாறத் தொடங்கியது அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் செவிலியர்களிடமும் மருத்துவர்களிடமும் இது குறித்து தெரிவித்துள்ளார்கள்.

ஆனால் நிறம் மாறுவதால் எந்த பிரச்சினையும் ஏற்படுவதாக தெரியவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சில மணி நேரத்தில் குழந்தையின் கை முழுவதும் நிறம் மாறத் தொடங்கியதால் தாய் அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக நரம்பியல் மருத்துவரிடம் குழந்தை கொண்டு சென்று காட்டியுள்ளார்கள்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக கையை அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள்.

கை அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்றும் தெரிவித்துள்ளார்கள்,இதைத் தொடர்ந்து எழும்பூர் குழந்தை நல அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு.

குழந்தையின் வலது கை தோள்பட்டை வரை முழுவதும் அகற்றப்பட்டது,இது தொடர்பாக செவிலியர்கள் மீது குற்றம் சாட்டிய பெற்றோர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததால் பிரச்சனை வெளி உலகத்திற்கு தெரிய ஆரம்பித்தது.

உடனடியாக எதிர்க்கட்சித் தலைவர், சீமான், பாமக, அண்ணாமலை, உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தார்கள்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனும், களத்தில் இறங்கி இது பற்றி விசாரணை செய்தார்.

விசாரணைக் குழு அமைக்கப்பட்டு மருத்துவர்கள் செவிலியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த குழந்தை திடீரென்று உயிரிழந்த சம்பவம் கடுமையான சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

1000 fine if you have two PAN cards in tamil

Ather 450S Electric Scooter Specifications Price

How to apply new ration card in tamilnadu

New SP 160 Honda Unicorn Bike Specifications Price

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
1
Silly
0