
China app ban what are the benefits in India
சீனா செயலிகள் தடையால் இந்தியாவுக்கு ஏற்பட்ட ஏகப்பட்ட நன்மைகள் என்ன..!
இந்தியா சீனா எல்லை பிரச்சனை என்பது கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் இயங்கி வரும் சீன மொபைல் செயலிகளை தனிநபர் தகவல் பாதுகாப்பு காரணமாக அடுத்தடுத்து தொடர்ந்து தடை செய்து வருகிறது.
இந்த தடை உத்தரவால் இந்தியாவுக்கும், இந்திய மொபைல் செயலி நிறுவனங்களுக்கும், பல்வேறு நன்மைகளும் அதிகமான வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில் 100க்கும் மேற்பட்ட அதிகமான மொபைல் செயலிகள் பல கட்டங்களாக தடை செய்யப்பட்ட நிலையில்.
சில நாட்களுக்கு முன்பு மீண்டும் 54 சீனா செயலை இந்திய அரசு தடை செய்தது.
இந்த 54 செயலிகளும் நேரடியாக மற்றும் மறைமுகமாக சீனாவுடன் சீனா நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ள செயலிகள்.
சாட் வீடியோ செய்திகள்
2020 ஆம் ஆண்டில் டிக் டாக் போன்ற பல முன்னணி செயலிகளை தடை செய்ததன் மூலம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட பல புதிய சாட் வீடியோ செயலிகள் மிகப் பெரிய அளவில் வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்களை கவர்ந்து.
மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது, அந்த வகையில் தற்போது இந்தியாவில் இருக்கும் கேமிங் துறைக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பு இப்போது உருவாகியுள்ளது.
2020 இல் மத்திய அரசு பப்ஜி மொபைல் செயலி தடை செய்தபோது பப்ஜி வாடிக்கையாளர்களை பிரீ பையர் நிறுவனம் கைப்பற்றியது.
கேமிங் துறை மிக்க மகிழ்ச்சி
இதனால் இந்திய நிறுவனத்திற்கு வாய்ப்பு இல்லாமல் போனது இந்த நிலையில் கடந்த வாரம் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 54 செயலிகளில்.
Garena Free Fire llluminate செயலில் இருந்த காரணத்தால், இந்தியாவின் கேமிங் துறை நிறுவனங்கள் மிக்க மகிழ்ச்சியில் உற்சாகத்தில் உள்ளது.
5 மில்லியன் டாலர்
BCG மற்றும் Sequoia ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு அறிக்கையின்படி இந்தியாவில் கேமிங் துறை தற்போது 1.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தை ஈட்டி வரும் நிலையில்.
வருகின்ற 2025 ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் சந்தையாக 3 மடங்கு வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கேமிங் நிறுவனங்களின் நிலைப்பாடு
தற்போது ஃப்ரீ பையர் போன்ற முன்னணி கேமிங் செயலி தடை செய்யப்பட்ட காரணத்தால், இந்த 5 பில்லியன் டாலர் இலக்கை வேகமாக அடைய முடியும்.
இதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகி உள்ளது, இது இந்திய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஒரு வார்த்தை வாய்ப்பை உருவாக்கி உள்ளது.
சீனாவில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் தங்களுடைய அலுவலகத்தை சிங்கப்பூரிலிருந்து புதிய புதிய செயலிகளை அறிமுகம் செய்து வருகிறது, இதனையும் மத்திய அரசு தற்போது தீவிரமாக கண்காணித்து வருகிறது.
சீனாவில் குழந்தைகள் கேம் விளையாடுவதற்கு பல்வேறுவிதமான சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..!
இதனால் அங்கு கேமிங் நிறுவனங்கள் அதிக அளவில் வருவாய் ஈட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
How to make delicious garlic pickle in tamil
உலகில் உள்ள அனைத்து முன்னணி இணையதள நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் வர்த்தகம் செய்ய ஆர்வம் காட்டுகிறது.
காரணம் இங்கு குழந்தைகள் கேம் விளையாடுவதற்கு, எந்த ஒரு கட்டுப்பாடுகளும், நேரமும் கொடுக்கப்படாமல் இருப்பது.