
Cholesterol control food list in tamil
இதயத் தமனிகளில் சேரும் கொலஸ்ட்ராலை குறைக்க என்ன மாதிரியான உணவுகள் சாப்பிட வேண்டும்..!
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த சில விஷயங்கள் எப்பொழுதும் பயனுள்ளதாக இருக்கும், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், மாரடைப்பு அபாயமும் அதிகரித்து விடும்.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த என்ன செய்வது
ஏன் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது
கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் இயற்கை உணவுகள் என்ன
இதயத் தமனிகளில் சேரும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த சந்தையில் பல மருந்து மாத்திரைகள் இருந்தாலும் சிலர் அதை இயற்கையாகவே கட்டுப்படுத்த விரும்புகிறார்கள்.
உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த சூழ்நிலையில் இதை தவிர்க்கவும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த மிகவும் அவசியமாகும்.
எனவே கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் உணவுகள்
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த வால்நட்ஸ், சூரியகாந்தி விதைகள், பாதாம்பருப்பு, கடுக்காய், போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இது தவிர முழு தானியங்களை சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் குறையும் மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.
எனவே இந்த உணவுகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நீங்கள் எளிமையான பலன்களை பெறலாம்.
கொலஸ்ட்ரால் ஏன் அதிகரிக்கிறது
மாறிவரும் வாழ்க்கை முறையால் பெரும்பாலான மக்கள் இந்த வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் உண்மையில் உங்கள் உணவில் சரியான உணவு மற்றும் இயற்கையான நீர்ச்சத்துக்களை சேர்க்காதது இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
அத்தகைய சூழ்நிலையில் எந்த வகையான பிரச்சனை உங்களுக்கு வராமல் இருக்க உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதே தீர்வாகும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன
முட்டையின் மஞ்சள் கரு
வெண்ணெயில் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறது
இறாலில் அதிக கொலஸ்ட்ரால் உள்ளது
கோழிக்கறியில் அதிக கொலஸ்ட்ரால் உள்ளது
பன்னீரை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்
கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் இயற்கை உணவுகள் என்ன
மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது, இதற்கு சல்மான்,மத்தி மீன், நெத்திலி மீன், போன்றவற்றை சாப்பிடலாம்.
தினசரி உடற்பயிற்சி செய்வது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் இதுவும் ஒரு சிறந்த வழியாகும் இதற்காக ஓட்டம், நடைபயிற்சி, நீச்சல், யோகா, மற்றும் நடனம் ஆகியவற்றை நீங்கள் மேற்கொள்ளலாம்.
உங்கள் தினசரி உணவில் இருந்து நிறைவுறாத கொழுப்புகளை அகற்றுங்கள் ஏனெனில் இது கொலஸ்ட்ரால் அளவை கணிசமாக அதிகரிக்கும்.
அதற்கு பதிலாக பால், பாலாடைக்கட்டி மற்றும் பால் பொருட்களை சாப்பிடுங்கள்,இதில் இயற்கையான கொழுப்பு சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் பல நோய்களுக்கு அடிப்படையாகும் இதன் காரணமாக உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகி மாரடைப்பு அபாயமும் அதிகரிக்கும்.
வீட்டில் சீயக்காய் அரைக்க தேவையான பொருட்கள் என்ன..!
கரையக்கூடிய நார்ச்சத்து சாப்பிடுவது இயற்கையாகவே கொழுப்பின் அளவை குறைக்கும், இதற்கு பட்டாணி, பீன்ஸ், ஓட்ஸ், பழங்கள், மற்றும் முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
What are the symptoms of silent heart attack in tamil
அடிக்கடி வெளியில் டீ குடிப்பது அதிக சூட்டில் வறுத்த உணவுகளை எடுத்துக்கொள்வது, கொழுப்புச் சத்து நிறைந்த மாமிசங்களை தொடர்ந்து சாப்பிடுவது, இதய தமணிகளில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.