
Coimbatore car blast incident information
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பிற்கு மூலகாரணமாக இருந்த நபரின் முழு விபரமும் அவருடைய தொழில் அவருடைய வாழ்க்கை முறை இப்பொழுது வெளிவந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூரில் அதிகாலை கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.
உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
அமைதியை சீர்குலைக்கும் வகையில் தீபாவளிக்கு முன்பாக நன்கு திட்டமிட்டு இப்படி ஒரு தாக்குதல் நடத்தப் பட வாய்ப்புகள் இருக்கிறது என காவல்துறை தெரிவிக்கிறார்கள்.
சரியாக கோவில் முன் கார் வெடித்த காரணத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 நபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சியில் மட்டும் நிகழும் அதிசய நிகழ்வு
கடந்த 1998ஆம் ஆண்டு கோயம்புத்தூர் முக்கிய பகுதியில் அதிரடியாக குண்டுகள் வெடித்தது இந்த சம்பவத்தில் சுமார் 250 நபர்கள் உயிரிழந்தார்கள்.
இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் குண்டு வெடிப்பு என்ற நிகழ்வு இல்லாமலிருந்தது மறுபடியும் இப்பொழுது அதே பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
முன்பை விட இப்போது பல மடங்கு பேராபத்தாக இந்த இயக்கம் செயல்பட்டு உள்ளது.
காரணம் பல்வேறு இடங்களில் கார்கள் மூலம் குண்டு வைக்க இந்த இயக்கம் திட்டமிட்டுள்ளார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இது போன்ற நிகழ்வு தமிழகத்தில் நடைபெறுகிறது.
குண்டுவெடிப்பிற்கு யார் முக்கிய காரணம்
இந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கி உள்ள நிலையில் குண்டு வெடிப்பிற்கு காரணமாக இருந்த தீவிரவாதி ஜமோசா முபின் குறித்து அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர், கேரளாவில், ரகசியமாக செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உடன் இவருக்கு தொடர்பு உள்ளது என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஏற்கனவே 2019ஆம் ஆண்டு இவரை மத்திய புலனாய்வுத்துறை விசாரணை செய்து விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் முக்கிய காரணம்
இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர் என்பது குறிப்பிட தக்கது ஆனால் அந்த துறையில் வேலை பார்க்காமல் சில நாட்கள் பழைய புத்தகங்களை வாங்கும் விற்கும் பணிகளை செய்து வந்திருக்கிறார்.
அதன்பின்னர் துணிக்கடை ஒன்றில் வேலை செய்து உள்ளார் இவர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் மூலம் மூளை சலவை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதன் மூலம் இவர் குண்டுவெடிப்பில் திட்டம் போட்டு இருக்கலாம்.
இந்த தீவிரவாதி யார்
ஜமோசா முபின் பொதுவாக யாரிடமும் அதிகமாக பேசமாட்டார் என்று கூறப்படுகிறது.
உள்ளூர் குழுக்கள் இஸ்லாமிய கூட்டங்களிலும் கூட இவர் அதிகமாக கலந்து கொள்ளமாட்டார்.
முக்கியமாக இஸ்லாமிய ஜனநாயக அமைப்புகள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
முக்கியமாக இஸ்லாமிய கட்சிகள் அமைப்புகளை இவர் மோசமாக விமர்சனம் செய்து வந்திருக்கிறார்.
இஸ்லாமிய அரசியல் கட்சிகள் எல்லாம் வேஸ்ட் என்பது போல இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் செயல்பட்டு வந்துள்ளார்.
மஞ்சள் பல் வெள்ளையாக மாற என்ன செய்ய வேண்டும் இயற்கை வழியில்..!
தன்னுடைய குடும்பத்தை பத்திரப்படுத்திய தீவிரவாதி
இந்த சம்பவத்திற்கு மூளை காரணமாக இருக்கும் தீவிரவாதி தனது மனைவி குழந்தைகளை அவரின் பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார்.
நான் தொழில் வேலையாக வெளியூர் செல்ல போகிறேன் நான் வருவதற்கு சில நாட்களாகும் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள் என்று தெரிவித்து விட்டு சென்றிருக்கிறார்.
Car explosion in Covi and raids across Tamil Nadu
இவர் தீவிரவாத தாக்குதல் திட்டத்தில் இருந்தது அவரது மனைவிக்கு தெரியாது என்று கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் இவர் கேரளா சென்று சில தீவிரவாதிகளை சந்தித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.