
Coimbatore car blast postmortem report
உடல் முழுவதும் ஓட்டை மார்பை துளையிட 2 இன்ச் ஆணி கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் நடந்தது என்ன..!
கோவை கார் குண்டு வெடிப்பில் பலியான நபரின் உடற்கூறு ஆய்வு முடிவுகளின் சில அடிப்படை தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது.
இந்தத் தகவல்களை வைத்துப் பார்த்தால் பல இடங்களில் மிகப்பெரிய தாக்குதலுக்கு அவர் தயாராகி உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது என காவல்துறை வட்டாரங்கள் சில தகவல்களை தெரிவிக்கிறார்கள்.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கடந்த நவம்பர் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 4:30 மணிக்கு மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது.
அதில் இருந்த ஒரு நபர் உடல் கருகி உயிரிழந்தார் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் கார் தீ பற்றியதாக முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆனால் அங்கிருந்த சில பொருட்களை வைத்து பார்க்கும் போது இதில் ஏதோ மிகப் பெரிய மர்மம் இருப்பதால் விசாரணையை தீவிரப்படுத்தி காவல்துறையினர்.
தோண்ட தோண்ட புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது இதற்கு பிறகு அந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு தமிழக முதல்வர் மாற்றினார்.
கார் வெடிப்பு தொடர்பாக நடைபெற்ற விசாரணை
கார் வெடிப்பு தொடர்பாக சென்னை தடய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர் காரில் இருந்த இடத்தில் இருந்த ஏராளமான ஆணிகள் கோலி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர் கோட்டைமேடு பகுதியை சார்ந்த மேஷா மூபின் என தெரியவந்தது.
மேலும் கடந்த 2019ஆம் ஆண்டில் அவரிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.
வலுவான ஆதாரங்கள் சிக்கியது
உயிரிழந்த நபர் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருந்ததற்கான வலுவான சில ஆதாரங்களை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைப்பற்றி உள்ளார்கள்.
பிரேத பரிசோதனை அறிக்கை
உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சில தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் உடல் முழுவதும் சுமார் இரண்டு இன்ச் நீளம் உள்ள ஏராளமான அணிகள் துளைத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு ஆணி இடது பக்க மார்பிலும் மற்றொரு ஆணி இதயத்திலும் துளைத்து இருக்கிறது.
இதன் காரணமாக இதயத்தில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே அந்த நபர் பலியாகியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
திட்டமிட்டு மிகப்பெரிய தாக்குதல்
கார் வெடித்து சிதறிய போது உயிரிழந்த நபரின் உடல் முழுவதும் கருகாமல் இருந்திருக்கிறது இதன் மூலமாக அதில் நடந்தது என்னவென்றால்.
காரை வெடிக்க செய்து விட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்து இருக்கலாம்.
ஆனால் காரில் இருந்த ஆணிகள், கோலிகுண்டுகள், சிதறி அவர் இடது பக்க மார்பிலும் மற்றொரு ஆணி இதயத்திலும் துளைத்து இருக்கிறது.
அதிக பால் உற்பத்தி செய்யும் முதல் 10 கால்நடை இனங்கள்..!
இதன் அடிப்படையில் அந்த நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதன்மூலம் சரியான திட்டமிட்டு தாக்குதலுக்கு தயாராகி உள்ளதாகவும் அதுவே அவரது உயிரையும் பறித்து இருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் கொள்கிறார்கள்.
There are 2 main doubts about Ms. Jayalalitha’s death
இந்த விசாரணை இப்பொழுது மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது இந்த விசாரணை வளையத்தில் இப்பொழுது 900 நபர்கள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.