
Coimbatore police arrested 4 persons involved in theft
மாதத்தில் 20 நாட்கள் திருட்டு,10 நாட்கள் இன்ப சுற்றுலா, ரூபாய் 5 கோடியில் அடுக்கு மாடி வீடு,திருடுவதற்கு வேலையாட்கள் கோவையில் நிகழ்ந்த கைது தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.
கோவையில் மாதத்தில் 20 நாட்கள் கைவரிசை திருடிவிட்டு மீதமுள்ள 10 நாட்கள் இன்ப சுற்றுலா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த 3 பெண்கள் உட்பட 4 நபர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
கோவை மாநகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வந்தது,இது தொடர்பாக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்ந்து பதிவான நிலையில்.
காவல்துறை தனியாக உடனடியாக கொள்ளையர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து தீவிரமாக ரகசியமாக விசாரணையில் இறங்கினார்கள்.
அதன்படி காவல்துறையினர் சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்,அப்போது டவுன் ஹாலில் 3 பெண்கள் ஓடி சென்று ஆட்டோவில் ஏறுவதையும்,காவல்துறையினர் பார்த்தார்கள்.
அந்த ஆட்டோவை பிடிக்க முயன்ற போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது,இதனால் அந்த பெண்களை பிடிக்க முடியவில்லை அதன்பிறகு அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அந்த ஆட்டோவின் நம்பரை தேடி எடுத்தனர்.
இதன்பிறகு ஆட்டோவின் விவரங்களை சேகரித்து அதை ஓட்டிய நபரிடம் காவல்துறையினர்,அந்த 3 பெண்கள் குறித்து விசாரித்தனர் மேலும் அவர்களை எங்கே இறக்கி விட்டார் என்பதையும் கேட்டறிந்தார்கள்.
அந்த 3 பெண்களையும் அரசு மருத்துவமனையில் இறக்கி விட்டதாகவும் அவர்கள் 100 ரூபாய் ஆட்ட கட்டணத்திற்கு பதில் 200 கொடுத்ததாகவும் ஆட்டோ டிரைவர் தெரிவித்துள்ளார்.
இதன் பிறகு காவல்துறையினர் அரசு மருத்துவமனை மற்றும் பஸ் நிலையத்தில் உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் அந்த பெண்கள் அரசு மருத்துவமனைகள் நுழைந்து ஒரு பையை எடுத்துக்கொண்டு வெளியே வருவதும்.
எதிரே உள்ள பஸ் ஸ்டாண்டிற்கு வந்து அங்கு ஒரு இளைஞரிடம் போனை வாங்கி பேசி அங்கு வந்த பேருந்தில் ஏறி சென்றதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தார்கள்.
இதன் பிறகு அந்தப் பெண்களிடம்,ஃபோன் கொடுத்த இளைஞரை தேடி பிடித்தார்கள்,இந்த நிலையில் அந்த கும்பல் கோவை மருதமலை கோவிலுக்கு வருவது தெரிய வந்துள்ளது.
இதன்பிறகு காவல்துறையினர் மாறுவேடத்தில் அங்கு தயாராக இருந்து 3 பெண்களையும் 1 ஆணையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் பரமக்குடியை சேர்ந்த ரவி அவரது மனைவி பழனியம்மாள், உறவினர்கள் வனிதா,நதியா ஆகியோர் என கண்டுபிடிக்கப்பட்டது.
3 பேரையும் ரவி வழிநடத்தி வந்தது தெரிய வந்தது கூட்ட நெரிசலில் பயன்படுத்தி பேருந்து, கோவில், ரயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதன்பிறகு காவல்துறையினர் 4 நபர்களையும் கைது செய்தார்கள், அவர்களிடம் இருந்து 50 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தார்கள்.
இவர்களிடம் நடத்தி விசாரணையில் இந்த கும்பல் மாதத்தில் 20 நாட்கள் திருடுவார்களாம்,10 நாட்கள் இன்பச் சுற்றுலா என்று சென்று விடுவார்களாம்.
சுற்றுலாவின் போது நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார்கள்.
இவர்கள் மும்பை, டெல்லி, காஷ்மீர், என பிரபல சுற்றுலா தலங்களுக்கு சென்றுள்ளனர்.
திருடுவதற்கு முன்பு சாமி தரிசனம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
பெங்களூரில் 5 கோடில் வீடு விலை உயர்ந்த கார், சொகுசு வாழ்க்கையாக வாழ்ந்து வந்துள்ளார்கள், இதைக் கேட்டு காவல்துறையினர் அதிர்ந்து போய் உள்ளார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Price of wheat continues to rise in india
Post office recurring deposit scheme details 2023
How to increase life of food products in tamil