
Counterfeit notes in circulation how to find them in tamil
புழக்கத்தில் அதிக கள்ள நோட்டுகள் கண்டுபிடிப்பது எப்படி..!
சந்தையில் 500/- மற்றும் 2,000/- ரூபாய் கள்ள நோட்டுகள் அதிக அளவில் அதிகரித்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
எனவே போலியான பணத்தை அடையாளம் காண்பதே மக்கள் தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.
ஏனெனில் உங்களுக்கு தெரியாமல் உங்கள் இடத்தில் அதிக தொகை கள்ள நோட்டாக வந்தால் அதனை சரியாக உங்களால் மாற்ற முடியவில்லை எனில்.
உங்களுக்கு மிகப்பெரிய பண இழப்பு ஏற்படும், எனவே நல்ல நோட்டு மற்றும் கள்ள நோட்டு பற்றி முழுமையான விவரத்தை தெரிந்து கொள்வது மிக நல்லது.
பல மடங்கு அதிகரிப்பு
தற்போது நாட்டில் கள்ள நோட்டுகளின் புழக்கம் பலமடங்கு அதிகரித்துள்ளது, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி 2020-2021 ஆம் ஆண்டில் 500 ரூபாய் நோட்டுகள் 102 % அதிகரித்துள்ளன.
கள்ள நோட்டுகளில் ரூபாய் 2,000/- நோட்டுகள் 54 சதவீதமும் மற்றும் ரூபாய் 10 ரூபாய் நோட்டுகள் 16.4 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது.
இதேபோல் 200 ரூபாய் கள்ளநோட்டுகள் 11.70 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு பணம் இழப்பு நடவடிக்கை மேற்கொண்டது அதன்பிறகு சந்தையில் இருந்த கள்ளநோட்டுகள் முற்றிலும் நீங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கள்ளநோட்டுகளை சந்தையிலிருந்து நீக்கும் வகையில் 1,000/- மற்றும் 500/- ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் 500/- மற்றும் 2,000/- ரூபாய் நோட்டுகளையும் மோசடி நபர்கள் தற்போது தயார் செய்து உள்ளார்கள்.
500/- மற்றும் 2,000/- ரூபாய் கள்ள நோட்டுக்களை அடையாளம் காண்பது என்பது எப்படி என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ரூபாய் நோட்டை ஒளியின் முன் காண்பித்தால் ரூபாய் மதிப்பு எண்ணின் (ஸீ-த்ரூ) ரெஜிஸ்டர் ஒளிபுகும் போது தோன்றும் காட்சியும் தெரியும்.
ரூபாய் நோட்டை 45 டிகிரி கோணத்தில் கண்முன் தூக்கிப் பார்த்தால் இந்த இடத்தில் 500 என்று எழுதப்பட்டிருப்பதை முழுமையாக காணலாம்.
வேதநாகரியில் 500 எழுதப்பட்டிருக்கும்.
மகாத்மா காந்தியின் படம் நடுவில் வலதுபுறம் இருக்கும்.
India என்று எழுதப்பட்டிருக்கும்
ரூபாய் நோட்டை லேசாக வளைத்தால் பாதுகாப்பு நூலின் நிறம் பச்சை நிறத்திலிருந்து இண்டிகோவாக மாறும்.
பழைய ரூபாய் நோட்டை ஒப்பிடுகையில் கவர்னரின் கையெழுத்து உத்தரவாத ரத்து,வாக்குறுதி ரத்து, மற்றும் ரிசர்வ் வங்கியின் சின்னம் வலது புறமாக மாறியுள்ளது.
இங்கு மகாத்மா காந்தியின் படம் உள்ளது மேலும் எலெக்ட்ரோ டைப் வாட்டர் மார்க் தெரியும்.
மேல் இடது பக்கம் மற்றும் கீழே உள்ள வலது பக்க எண்கள் இடமிருந்து வலமாக அளவில் பெரியதாக இருக்கும்.
இங்கு எழுதப்பட்ட 500 என்ற எண்ணின் நிறம் மாறுகிறது அதன் நிறம் பச்சை நிறத்திலிருந்து நீலமாக மாறும்.
வலது பக்கம் அசோகர் தூண் காணலாம்
வலது பக்க வட்ட பெட்டியில் 500 என்று எழுதப்பட்டிருக்கும்.
இடது மற்றும் வலது பக்கத்தில் 5 பிளிட் கோடுகள் மற்றும் அசோகரின் சின்ன மகாத்மா காந்தியின் படம் அச்சில் உள்ளது.
நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு எழுதப்பட்டிருக்கும்.
iris instead of fingerprint new rules in ration shop
மையப்பகுதியில் பல மொழிகளில் எழுதப்பட்டு இருக்கும்.
இந்திய கொடியுடன் செங்கோட்டையின் படம் அச்சிடப்பட்டுள்ளது,