Uncategorized

Difference between India Digital currency and Bitcoin

Difference between India Digital currency and Bitcoin

Difference between India Digital currency and Bitcoin

டிஜிட்டல் கரன்சி – பிட்காயின் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்..!

இந்தியாவில் சிறிய முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்த பிட்காயின் போன்ற பல்வேறு கிரிப்டோகரன்சிகள் இன்னுமும் அரசாங்க கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் உள்ளது.

இதனால் மத்திய அரசு இப்பொழுது துவக்கியுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் சந்தை ஒழுங்குமுறை படுத்தவும், கண்காணிக்கவும், முடியாத தனியார் கிரிப்டோகரென்ஸி தடை செய்யவும் முடிவு செய்துள்ளது.

இதே வேளையில் இந்தியா டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இரண்டையும் ஒன்றாக இணைத்து Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill 2021 என்ற தனி மசோதாவை தாக்கல் செய்துள்ளது.

இப்பொழுது இந்தியா உலகில் மிகப்பெரிய மற்றும் முதன்மையான பணம் இல்லாத பரிவர்த்தனையில் உள்ளது.

டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்வதன் மூலம் வருங்காலத்தில் இந்தியாவில் பணப் பரிமாற்றம் என்பது மிகப்பெரிய அளவில் மொபைல் போன் மூலம் நடைபெற வாய்ப்புகள் அதிகம்.

Difference between India Digital currency and Bitcoin

பிட்காயின் Vs டிஜிட்டல் கரன்சி

கிரிப்டோகரென்சி உதாரணமாக பிட்காயினும், டிஜிட்டல் கரன்சி ஒன்றா..? இல்லை இரண்டு மாறுபட்டதா என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது, இதற்கான பதிலை இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்க போகிறோம்.

சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி

இந்திய அரசால் விரைவில் வெளியிடப்படும் டிஜிட்டல் கரன்சி சென்ட்ரல் பாங்க் டிஜிட்டல் கரன்சி என அழைக்கப்படும்.

இது ஒரு ரூபாய் நோட்டு போலவே இந்திய அரசால் அறிமுகம் செய்யப்படும் டிஜிட்டல் பணம்.

இந்த பணத்தை தற்போது நாம் பயன்படுத்தும் வகையில் பயன்படுத்தலாம்.

அதேபோல் முழுக்க, முழுக்க, அரசு கட்டுப்பாட்டில் இயங்க கூடியவை ஆனால் கிரிப்டோகரன்சி முற்றிலும் மாறுபட்டது.

கிரிப்டோகரென்சி

இது பிளாக்செயின் என்னும் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதை யார் வேண்டுமானாலும் உருவாக்கமுடியும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும்.

நீங்கள் உங்கள் வீட்டில் சில கருவிகள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் எளிமையாக உருவாக்க முடியும்.

இது முழுக்க முழுக்க எந்த ஒரு அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல் வர்த்தக் சந்தைக்கு வருபவை.

பிட்காயின்

இன்று கிரிப்டோகரன்சி சந்தையில் மிகப்பெரிய மதிப்பு பொருளாக இருக்கும், பிட்காயின் எந்த ஒரு நாட்டின்  அரசாலும் நிர்வாகம் செய்யப்படுவதில்லை.

இதனால் முதலீட்டு சந்தைக்கு இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் கிரிப்டோகரன்சி அனைத்தும் சப்ளை அண்ட் டிமாண்ட் அடிப்படையில் வர்த்தகம் செய்யப்படுகிறது, இதனால் இதனுடைய மதிப்பு உயர்ந்து வருகிறது.

உதாரணமாக பிட்காயினை எடுத்துக்கொண்டால் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் 21 மில்லியன் பிட்காயின் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்.

டிஜிட்டல் கரன்சியின் மதிப்பு

ஒரு ஒரு கிரிப்டோகரன்சியின் மதிப்பு எப்போது வேண்டுமானாலும் மாறும்.

ஆனால் ரிசர்வ் வங்கி வெளியிடும் டிஜிட்டல் கரன்சியின் மதிப்பு இந்தியாவில் எந்த காலமும், எந்த நேரத்திலும், மாறவே மாறாது.

ஆனால் இந்திய அரசால் உருவாக்கப்படும் டிஜிட்டல் கரன்சி 100% பாதுகாப்பானது

ரூபாய், டாலர், யூரோ, யுவான்

தற்போது பிட்காயினுக்கு அதிகமான மதிப்பு இருக்கும் காரணத்தால், வெளிநாடுகளில் பல நிறுவனங்கள் ரூபாய், டாலர், போலவே பிட்காயின் பெற்றுக்கொண்டு பொருட்களையும், சேவைகளையும், செய்கிறார்கள்.

ஆனால் இதன் மதிப்பு அதிகப்படியான மாற்றங்களை எதிர்கொள்ளும் காரணத்தால், பல வகையில் பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படலாம்.

சென்ட்ரல் பாங்க் டிஜிட்டல் கரன்சி மற்றும் பிட்காயின் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இயங்குகிறது.

ஆனால் இதன் மதிப்பில் இருக்கும் பாதிப்பும், பாதுகாப்பும், தான் பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது.

இதேவேளையில் டிஜிட்டல் கரன்சி மூலம் பல நன்மைகள் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

வருமான வரி துறை கண்காணிப்பு

கிரிப்டோகரன்சியில் முதலீடு மற்றும் வர்த்தகம் செய்யும் நபர்களை வருமான வரித்துறையினர் கண்காணிப்புக்குள் கொண்டு வர, மத்திய அரசு முக்கியமான மாற்றத்தை அதிதீவிரமாக செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்தியாவில் கிரிப்டோகரென்சி முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மிக பெரிய அளவில் இப்பொழுது உயர்ந்துள்ளது.

இப்பிரிவு முதலீட்டாளர்களையும் முதலீடுகளையும் விரைவாகவும் முறையாகவும்,அரசு கட்டுப்பாட்டிற்குள், கொண்டுவர வேண்டும் என மத்திய அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது.

வருமான வரி சட்டம்

மத்திய அரசு தற்போது இருக்கும் வருமான வரி சட்டம் மற்றும் வருமானத்தை வெளிப்படுத்துதல் விதிகளில், கிரிப்டோகரன்சி போன்ற புதிய முதலீடுகளை இணைத்துள்ளது.

இதற்கான அறிவிப்பு வருகின்ற பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யும்போது வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முதலீட்டாளர்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் செய்யும் கிரிப்டோகரன்சி முதலீடு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய்.

வருமான சட்டத்தின் மூலம் தகவல்களை முழுமையாக பெற வேண்டும், என்பதற்காக வருமான வரி சட்டம் மற்றும் வருடாந்திர தகவல்கள் ஒழுங்குமுறை விதிகளில் புதிய மாற்றங்களை செய்துள்ளது.

வருமான வரி தாக்கல்

புதிய வருமான வரி சட்டத்தில் கிரிப்டோகரன்சி, கிரிப்டோ சொத்துக்கள், அல்லது டிஜிட்டல் கரன்சி போன்றவை இணைக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்யும் போது கிரிப்டோகரன்சி, முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் அதன் முதலீடு குறித்து கட்டாயம் தெரிவிக்க வேண்டி சூழ்நிலை எழுந்துள்ளது.

தற்போது மத்திய அரசுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் வருமானவரி துறை வங்கிகளிடம் அதன் வாடிக்கையாளர்கள்.

செய்த கிரிப்டோகரன்சி பரிமாற்றம் குறித்த தகவல்களை பெற முடியாது காரணம் வருமான வரி சட்டத்தில் கிரிப்டோகரென்ஸி இடம்பெறவில்லை.

கிரிப்டோகரென்ஸி பரிமாற்ற தரவுகள்

மேலே குறிப்பிட்ட மாற்றங்களை செய்தால் வருமானவரித்துறை வங்கிகளிடம் இருந்து நேரடியாக ஒவ்வொரு வாடிக்கையாளரின் கிரிப்டோகரன்சி பரிமாற்ற தரவுகளை எளிமையாக பெற முடியும்.

பெரும்பாலான கிரிப்டோகரன்சி வர்த்தக தளங்கள் வங்கிகளின் மூலம் தான் பணத்தை பரிமாற்றம் செய்கிறது என்பதால், அதன் மூலம் கிடைக்கும் வருமானம், முதலீட்டு தரவுகளை, அனைத்தும் மத்திய அரசு பெற முடியும்.

வெளிநாட்டு சொத்து விவரங்கள்

இதேபோல் வெளிநாட்டில் இந்தியர்கள் வைத்துள்ள கிரிப்டோகரன்சி சொத்துக்களின் விவரங்களையும் சமர்ப்பிக்கும் விதிகளையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம் இந்தியர்கள் வெளிநாட்டில் வைத்துள்ள அனைத்து கிரிப்டோகரன்சி சொத்துக்களின் விவரங்களை நேரடியாக பெற முடியும்.

இணையதளம் மூலம் கடன் வாங்குவோர் கவனத்திற்கு

மத்திய நிதி அமைச்சகம் இந்த 2 மாற்றங்களைக் கிரிப்டோகரன்சி மசோதா இல்லாமல் தனியாக செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கிரிப்டோகரன்சி மசோதாவில் இதர பல ஒழுங்குமுறை நடவடிக்கைகளும் வருங்காலத்தில் இருக்கும்.

What are the Symptoms of New Corona Omicron

இந்த மாற்றத்தின் மூலம் கிரிப்டோ முதலீட்டில் கிடைக்கும் வருமானத்திற்கு வரியை மத்திய அரசால் சரியான முறையில் வசூலிக்க முடியும்.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0