செய்திகள்

இயக்குனர் நடிகர் மாரிமுத்து திடீர் மரணம் டப்பிங் பேசும்போது மாரடைப்பால் உயிர் பிரிந்தது என்ன நடந்தது அதிகாலையில்..!Director Marimuthu passed away early today

Director Marimuthu passed away early today

Director Marimuthu passed away early today

இயக்குனர் நடிகர் மாரிமுத்து திடீர் மரணம் டப்பிங் பேசும்போது மாரடைப்பால் உயிர் பிரிந்தது என்ன நடந்தது அதிகாலையில்..!

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து வயது 56 மாரடைப்பால் திடீரென்று இன்று அதிகாலை காலமானார்.

அவரது திடீர் மறைவு திரை உலகத்தினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தேனி மாவட்டம் வருசநாடு பகுதி பசுமலை பூர்விகமாகக் கொண்டவர் நடிகர் மாரிமுத்து.

திரைத்துறையில் பணியாற்றுவதற்காக சென்னை வந்த நடிகர் மாரிமுத்து கவிபேரரசு வைரமுத்துவிடம் உதவியாளராக சிறிது காலம் பணியாற்றினார்.

பின்னர் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் ராஜ்கிரன்,சீமான்,எஸ் ஜே சூர்யா,மணிரத்தினம்,வசந்த்,போன்ற முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.

கடந்த 2011 இல் யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக தமிழக திரைத்துறையில் அறிமுகமானார்.

உதயா,வாலி உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

தற்போது சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் மாபெரும் வெற்றி படமான ஜெயிலர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் மாரிமுத்து.

தமிழகத்தில் பிரபலம் அடைந்தார் எளிதில்

எதிர்நீச்சல் டிவி சீரியல் மூலம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்டார் நடிகர் மாரிமுத்து.

அவ்வப்போது டிவி விவாதங்களிலும் கலந்து கொள்வார் இன்று அதிகாலை டிவி தொடருக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது நடிகர் மாரிமுத்து திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவு இழந்து மயக்கம் அடைந்தார்.

இதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் மாரிமுத்து உயிர் இழந்தார்.

நடிகர் மாரிமுத்துவின் மரணம் திரைத்துறையினருக்கு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்குனராக அறிமுகமான பாரியேரும் பெருமாள் படத்தில் ஹீரோயின் கயல் ஆனந்தியின் அப்பாவாக நடித்திருப்பார்.

மாரிமுத்து அதற்கு முன் நடிகராக சில படங்களில் நடித்திருந்தாலும் மாரிமுத்துவுக்கு நல்ல நடிகர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது பாரியேரும் பெருமாள் தான்.

பல்வேறு திரைத்துறையினர்களும் நடிகர் மாரிமுத்துவின் மரணம் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு வருகிறார்கள்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

ஓராண்டில் 40 சதவீதம் அதிக மின் கட்டணம்..!

1000 ரூபாய் திட்டத்திற்கு தகுதியான பட்டியல் பதிவேற்றம்

உதயநிதி கன்னத்தில் காலணியால் அடித்தால் ரூபாய் 10 லட்சம் பரிசு..!

பெட்ரோல் டீசல் விலை அதிரடியாக குறைய போகிறது..!

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
2
Not Sure
0
Silly
1