தகவல்கள்

DMK announced 11 women mayors in tn 2022

DMK announced 11 women mayors in tn 2022

DMK announced 11 women mayors in tn 2022

11 பெண் மேயர்கள் பட்டதாரிகள், இல்லத்தரசிகள், பொறியியல்,  மாநகராட்சிகளில் ஆளப்போகும் மகளிர் புதிய அணி..!

தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 11 பெண் மேயர்கள் இன்று பொறுப்பேற்றுள்ளார்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில், கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது அதில் 2.8 கோடி மக்கள் வாக்களித்தார்கள்.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், தற்போது மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, பகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது, தமிழகத்தில் மொத்தம் 21 ஒரு மாநகராட்சிகள் இருக்கிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு, அடுத்ததாக கோயம்புத்தூர் மாநகராட்சி இரண்டாவது பெரிய மாநகராட்சியாக தமிழகத்தில் உள்ளது.

தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய வெற்றி

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக மிகப்பெரிய வெற்றியை தங்கள் பக்கம் பதிவுசெய்துள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, என அனைத்து இடத்திலும் திமுக அதிகமான வெற்றியை பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தங்கள் வசம் செய்துள்ளன.

பெண்கள் புதிய படையாக இருக்கிறார்கள்

தமிழகத்தில் 21 மாநகராட்சி மேயர்களில் 11 நபர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தமிழக வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்தது இல்லை இந்த தேர்தலில் மாநகராட்சி மேயர் தேர்தலில் பெண்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

தேர்ந்தெடுக்கப்பட்ட  பெண் மேயர்கள்  இன்று பதவி ஏற்றுக்கொண்டார்கள் சென்னை, தாம்பரம், ஈரோடு, கோவை, என பல்வேறு இடங்களில் பெண் மேயர்கள் பதவியேற்றார்கள்.

சென்னை

சென்னை மாநகராட்சியில் 74 வது வார்டில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் பிரியா (28) சென்னை மேயராக பதவி ஏற்றுள்ளார்.

மாநகராட்சியின் பட்டியலின வகுப்பை சேர்ந்த முதல் பெண் மேயர் இவர் அதேநேரம் சென்னை மாநகராட்சியின் 3வது பெண் மேயர் வணிகவியல் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

தாம்பரம்

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக திமுக கவுன்சிலர் மகாலட்சுமி யுவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்தவர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முதல் பெண் மேயராக பொறுப்பேற்றுள்ளார் திமுக கவுன்சிலர் சங்கீதா, சிவகாசியை குட்டி ஜப்பான் போல் மாற்றுவேன் என உறுதிமொழி எடுத்து உள்ளார்.

திமுக கவுன்சிலர்கள் யார்

திண்டுக்கல் மாநகராட்சி மேயராக இளமதியம், கரூர் மாநகராட்சி மேயராக கவிதா, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார்,

கோவை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் கல்பனா, கடலூர் மாநகராட்சி மேயராக சுந்தரி, மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி, ஈரோடு மாநகராட்சி மேயராக நாகரத்தினம் பதிவேற்றியுள்ளார்கள்.

சொட்டை விழுந்த இடத்தில் முடி வேகமாக வளர வேண்டுமா..!

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள மாநகராட்சி தேர்தலில் அதிகப்படியாக திமுக அரசு வெற்றிகளை குவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இப்பொழுது மேயர் பதிவுகளையும் தட்டி தூக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

How to apply online for TNPSC group 2 2A selection

மு க ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்ற பிறகு தமிழகத்தில் அதிகமான இடங்களில்.

முக்கிய பதவிகளுக்கு, பெண்களை தேர்ந்தெடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இது மகளிருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எனலாம்.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0