Health Tips

டோம்பெரிடோன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் Domperidone Tablet Uses and Side Effects

Domperidone Tablet Uses and Side Effects

Domperidone Tablet Uses and Side Effects

டோம்பெரிடோன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!

உடல்நிலை சரியில்லை என்றால் மருந்து கடைகளில் கிடைக்கும், மாத்திரை வாங்கி சாப்பிடும் பழக்கம் இன்றைக்கும் பெரும்பாலான மக்களிடத்தில் உள்ளது இது ஒரு மிகப்பெரிய ஆபத்து.

நீங்கள் வாங்கி சாப்பிடும் மாத்திரை என்ன மாதிரியான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது, என்பதை பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து இருக்க வேண்டும்.

நாள்பட்ட நோய்களுக்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகள் என்ன மாதிரியான பக்க விளைவுகளை உடலில் ஏற்படுத்தும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் நீரிழிவு நோய்க்கு தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொண்டே இருந்தால் அதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதற்கு, இருதயம் பாதிக்கப்படுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது.

நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு மாத்திரைக்கும் ஒரு பக்க விளைவுகள் ஏற்படும், அதற்கு நீங்கள் மாத்திரையை பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்வது மிக முக்கியம்.

சில கட்டுரையில் டோம்பெரிடோன் மாத்திரை எடுத்துக் கொண்டால் என்ன மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படும், என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

டோம்பெரிடோன் மாத்திரையின் பயன்கள்

இந்த மாத்திரை ஒரு நோய் எதிர்ப்பு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது, இது வாந்தி மற்றும் குமட்டல் அல்லது வயிறு நிறைந்தது போன்ற உணர்வு அறிகுறிகளை (Domperidone 10 MG) மாத்திரை குணப்படுத்துகிறது.

அஜீரண கோளாறுகளை தடுப்பதற்கு இந்த மாத்திரை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

வயிறு மற்றும் குடல் வழியாக உணவின் இயக்க ஆற்றலை இந்த மாத்திரையை அதிகரிக்கிறது,இதை சாப்பிடுவதன் மூலம் உடம்பில் ஏற்படும் வீக்கம் மற்றும் இரைப்பையில் ஏற்படும் அசௌகரியத்தை நீக்குகிறது.

இந்த மருந்து வயிற்றின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள தசைகளை இருக்கிறது,இதுபோன்ற செயல் நீங்கள் உட்கொள்ளும் உணவின் போக்கை உங்கள் வயிற்றுப் பகுதியிலிருந்து குடல் பகுதி வரையும் வேகமாக செயல்பட உதவுகிறது.

வாந்தி மையம் என்று அழைக்கப்படும் மூளையின் ஒரு பகுதியில் தூண்டுதல் நிகழ்வினை தடுக்கிறது.

மாத்திரையின் பக்க விளைவுகள்

மாத்திரை உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு, வாய் வறட்சி, தலைவலி, ஒற்றைத் தலைவலி அல்லது மார்பக வலி, போன்ற பிரச்சனை தான், இதன் சாதாரண பக்கவிளைவுகள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள், இது போன்ற பக்க விளைவுகள் சில நாட்களில் தானாகவே குணமாகிவிடும்.

பின்வரும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் நீங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளலாம்

மயக்கம் வருவது போன்ற உணர்வு

இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை

மூச்சுவிடுவதில் அல்லது சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம்

உதடுகள், முகம், நாக்கு மற்றும் கை கால்களில் வீக்கம் ஏற்படுவது சீரற்ற மாதவிடாய் சுழற்சி.

ஆண்மை இழப்பு மற்றும் ஆண்களில் பெண் மார்பகம் போன்ற வளர்ச்சி.

திடீர் என்று தோல் வெடிப்பு ஏற்படுதல்.

யாரெல்லாம் இந்த மாத்திரை எடுத்துக் கொள்ளக் கூடாது

இதய நோய்கள் இதய செயலிழப்பு போன்ற கோளாறுகளை கொண்ட மக்கள் இந்த மாத்திரையை சாப்பிடக்கூடாது

அலர்ஜி அல்லது ஒவ்வாமை இருப்பதை அறிந்த மக்கள் இதை பயன்படுத்தக்கூடாது

குழந்தைகளுக்கு கொடுக்க அனுமதி இல்லை

சிறுநீரக பாதிப்பு நோயாளிகள் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது.

நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு மாத்திரை மருந்துகளுக்கும் ஒவ்வொரு பக்க விளைவுகள் உள்ளது என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

Xirtam H Tablet Best uses and effects 2023

Roxid tablet best uses and effects 2023

Flexiflam tablet best uses in tamil 2023

Domperidone tablet best uses in tamil 2023

Best 10 benefits of multivitamin tablets

Heart health tips list in tamil

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0