
Driving licence rules regulations changes in india
இனி ஓட்டுநர் உரிமம் பெறுவது மிக எளிது புதிய விதிகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு..!
ஓட்டுநர் உரிமம் எடுப்பதற்கு புதிய நடைமுறைகளை மத்திய அரசு நம் நாட்டில் இப்பொழுது வெளியிட்டுள்ளது,இப்பொழுது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுனர் சோதனை தேவையில்லை.
நீங்கள் இனிவரும் காலங்களில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல தேவையில்லை அதாவது (ஆர்டிஓ) RTO வை சந்திக்க தேவையில்லை.
இதற்கான பிரத்தியேகமாக பள்ளிகள் தொடங்கப்பட இருக்கிறது, அங்கு சென்று நீங்கள் பயிற்சி பெற வேண்டும்.
ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று அங்கு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இனி ஓட்டுநர் உரிமம் உங்களால் பெற முடியும்.
ஓட்டுநர் உரிமம் பெறுவது இனி வரும் காலங்களில் எளிதாக மாறிவிட்டது,மத்திய அரசு சில நடைமுறைகளை இப்பொழுது மாற்றி உள்ளது.
ஓட்டுநர் உரிமத்திற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை அதன் முழுமையாக செயல்முறை அறிந்து கொள்வோம்.
ஓட்டுநர் உரிமைகளை பெற நீங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இனி செல்ல வேண்டியது இல்லை நீண்ட வரிசையில் இருக்க வேண்டாம்.
ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு விதிகளை மத்திய அரசு எளிமைப்படுத்தியுள்ளது,இனி வாகனத்தை இயக்கிய நீங்கள் காண்பிக்க தேவையில்லை.
ஓட்டுநர் உரிமத்திற்கான விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி இனி வரும் காலங்களில் நீங்கள் எந்தவிதமான ஓட்டுனர் சோதனையும் செய்ய வேண்டியதில்லை.
இந்த விதிகள் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டு இந்த விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.
இதனால் ஓட்டுனர் உரிமை பெறுவதற்காக நீங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இல்லை ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
ஓட்டுநர் பயிற்சி பள்ளி எதற்கு ஏன்?
அமைச்சகம் அளித்த தகவலின் படி இப்பொழுது நீங்கள் ஓட்டுநர் உரிமைகளை பெற அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் நீங்கள் சேர்ந்து கொள்ளலாம்.
அங்கு அவர்கள் அளிக்கப்படும் பயிற்சியில் நீங்கள் பயிற்சி பெற்று அவர்கள் நடத்தப்படும் தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும்.
அதன் பிறகு அவர்கள் உங்கள் தகுதிக்கு சான்றிதழ் வழங்குவார்கள், அதனைப் பெற்று அதன் மூலம் இனிமேல் நீங்கள் ஓட்டுநர் உரிமம் பெற முடியும்.
அமைச்சகம் அளித்துள்ள புதிய விதிமுறைகள் என்ன
பயிற்சி மையங்கள் தொடர்பாக சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து சில வழிகாட்டுதல் மற்றும் நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது,பயிற்சி மையங்களில் பகுதி முதல் பயிற்சியாளர்களின் கல்வி வரை இதில் அடங்கும்.
இருசக்கர வாகனம்,மூன்று சக்கர வாகனம் மற்றும் இலகர வாகனங்களுக்கான பயிற்சி மையங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலமும்.
நடுத்தர மற்ற கனரா பயணிகள் சரக்கு வாகனங்கள் அல்லது ட்ரெய்லர்களுக்கான மையங்களுக்கு இரண்டு ஏக்க நிலமும் இருப்பதை அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.
பயிற்சியாளர் குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு கல்வி பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
போக்குவரத்து விதிகளை நன்கு அறிந்திருக்க கூடிய நபராக இருக்க வேண்டும்,அமைச்சகம் கற்பித்தல் பாடத்திட்டத்தையும் ஒதுத்துள்ளது இலகு ரக மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்கு பாட நெறியின் காலம் அதிகபட்சம் 4 வாரங்கள் 29 மணி நேரம் வரை நீடிக்கும்.
ஓட்டுநர் மையங்களில் பாடத்திட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை சாலைகள், கிராமப்புற சாலைகள், நெடுஞ்சாலை,நகர சாலைகள் மற்றும் பார்க்கின் மேல் நோக்கி மற்றும் கீழ்நோக்கி வாகனம் ஓட்டுவது.
போன்றவற்றில் மக்கள் 21 மணி நேரம் பயிற்சி பெற வேண்டும், கோட்பாடு பகுதி, முழு பாடத்திட்டத்தின் 8 மணி நேரமும் சாலை ஆசாரத்தை புரிந்து கொள்வதையும்.
உள்ளடக்கம், சாலை சீற்றம், போக்குவரத்துக் கல்வி விபத்துக்கான காரணங்களை புரிந்து கொள்வது,முதலுதவி மற்றும் எரிபொருள் சிக்கனம் போன்றவைகளும் அடங்கும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்