Health Tips

இருதய செயலிழப்பிற்கான ஆரம்ப அறிகுறிகள் இந்த  விஷயங்களை எப்பொழுது புறக்கணிக்காதீர்கள்..! Early signs of heart failure tips in tamil

Early signs of heart failure tips in tamil

Early signs of heart failure tips in tamil

இருதய செயலிழப்பிற்கான ஆரம்ப அறிகுறிகள் இந்த  விஷயங்களை எப்பொழுது புறக்கணிக்காதீர்கள்..!

இருதய செயலிழப்பிற்கான ஆரம்பகட்ட அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டாம் சரியான நேரத்தில் உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால் அது மிகப்பெரிய ஆபத்தை அதிகரிக்கும்.

உங்கள் மோசமான வாழ்க்கை முறையால் இருதய செயலிழப்பு ஏற்படுகிறது உணவு முதல் அன்றாட பழக்கவழக்கங்கள் வரை அனைத்தையும் இதய செயலிழப்புக்கான காரணமாக மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பிடித்தால், உடல் உழைப்பு, இல்லாமல் மற்றும் அதிகமான அழுத்தம் ஆகியவை இருதய நோய்க்கு வழிவகை ஏற்படுத்தும்.

எனவே நீங்கள் சரியான நேரத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும், இதய நோய் உலகம் முழுவதும் ஒரு பொது சுகாதார பிரச்சனையாக மாறி வருகிறது.

சுமார் 6.4 கோடி பேர் இதய நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் வயது வந்தோரில் ஒரு சதவீதத்திற்கு அதிகமானோர் இன்னும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதய நோய் ஏற்படும் இறப்பு விகிதம் நம் நாட்டில் மிக அதிகமாக இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கிறது.

ஒவ்வொரு நாட்டிலும் ஆண்டுக்கு 18 லட்சத்திற்கு அதிகமானவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் இருதய செயலிழப்பு ஒரு தீவிர பிரச்சனையாக மாறி வருகிறது.

இதில் இருதய உறுப்புகள் பலவீனம் அடைகிறது இதயம் அதன் இயல்பான வேலையை செய்ய முடியாது.

இருதய நோய்க்கு நீண்ட காலமாக ஏதேனும் ஒரு மரபணு நோய், உயர் இரத்த அழுத்தம்,நீரிழிவு நோய் சில ஆபத்தான மருந்துகளின் பயன்பாடு, நரம்பியல் நோய்கள், போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.

இருதய செயலிழப்பு அறிகுறிகள் நோயாளிகளுக்கு ஆரம்பத்தில் சோர்வு, மூச்சு திணறல், மார்பு வலி, வயிற்று அசௌகரியம் மற்றும் வியர்வை போன்ற ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.

இந்த நோயை சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால் அது உயிருக்கு ஆபத்தானது.

இருதய நோயை கருத்தில் கொள்ளும்போது ஒரு நபரின் வயது நிலை மற்றும் நோய் தொற்று ஆகியவை இருதய நோயின் அறிகுறிகளில் வேறுபடலாம்.

இதய தசையை ஏதாவது சேதப்படுத்தும் போது அல்லது இதயத்தின் திறம்பட பம்ப் செய்யும் திறனைக் குறைக்கும் போது இதய செயலிழப்பு ஏற்படுகிறது.

பெரும்பாலும், சேதம் கரோனரி தமனி நோய் அல்லது மாரடைப்பால் ஏற்படுகிறது. ஆனால் தவறான இதய வால்வுகள், நீண்டகால உயர் இரத்த அழுத்தம் அல்லது மரபணு நோய் ஆகியவையும் காரணமாக இருக்கலாம்.

காரணம் என்னவாக இருந்தாலும், செயலிழக்கும் இதயம் இனி ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்திற்கான உடலின் தேவையைத் தக்கவைக்க போதுமான அளவு பம்ப் செய்ய முடியாது.

கடுமையான மூச்சுத் திணறல் ஏற்படும்

இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுகிறது இதில் பெரும்பாலான நோயாளிகள் இரவில் தூங்கும் போது அதிக ஓய்வில் உள்ளார்கள்.

இந்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

இது ஒரு தீவிர நிலையின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

வீக்கம் ஏற்படும்

இதய நோய் நோயாளிகளுக்கு வீக்கம் பொதுவானது இந்த வீக்கம் ஒரு மூட்டு அல்லது காலில் மட்டுமல்ல உடல் முழுவதும் திடீரென்று ஏற்படும்.

வயிற்றுப் பிரச்சனைகள்

இருதய செயலிழப்பிற்கு காரணமாக நோயாளிகள் வயிற்றுப் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்,இந்த பிரச்சனைகள் வயிற்றுப்புண் வாந்தி அல்லது வயிற்று வலி ஆகியவை அடங்கும்.

மார்பு வலி

இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அடிக்கடி மார்பு வலியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

High mileage two wheelers in india 2023

What is POCSO Act in full details in tamil..!

Best cooking oil for heart health in tamil..!

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
1
Not Sure
1
Silly
0