
Early symptoms heart attack in tamil
எச்சரிக்கை இந்த அறிகுறிகள் மட்டும் உங்களிடம் தென்பட்டால் இன்னும் ஒரு மாதத்தில் உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட போகிறது என்று அர்த்தம்..!
பொதுவாக மனித உடலில் குறிப்பாக இருதயத்திற்கு திடீரென்று ரத்த விநியோகம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படும்,இவை பெரும்பாலும் திடீரென்று ஏற்படும்.
இது ஒரு ஆபத்தான சுகாதார நிலை சில நேரங்களில் மாரடைப்பு உயிர் இழப்பில் முடியும்,இதனால் மாரடைப்பு பற்றி நீங்கள் பல்வேறு விஷயங்களை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மாரடைப்பு ஒரு நபருக்கு எந்த நேரம் வேண்டுமானாலும் திடீரென்று ஏற்படலாம் மாரடைப்பு வந்த பின்னர் அது மாரடைப்பு என்று தெரிய வரும்.
இருப்பினும் 50 சதவீதத்திற்கு அதிகமான நபர்களுக்கு மாரடைப்பு ஏற்பட போகிறது, சில அறிகுறிகளை வெளிக்காட்டும் அதனை வைத்து கண்டுபிடித்து விடலாம்.
எளிமையாக அறிந்து கொள்ளலாம் அறிகுறிகளை
இந்த அறிகுறிகள் உண்மையில் மாரடைப்பு ஏற்படுவதற்கு சில நாட்கள், வாரங்கள், மற்றும் சில மாதங்களுக்கு முன்பே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
திடீரென்று சோர்வு
மருத்துவ ஆய்வின்படி மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நபர்களிடம் சில பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திடீரென்று சோர்வு உணர்வில் அதிகப்படியான சோர்வு உடல் மற்றும் மன உந்துதல் இல்லாமல் மற்றும் தீவிர சோர்வு ஆகியவை அடங்கும்.
குளிப்பது அல்லது உங்களுடைய அறையை சுத்தம் செய்வது, போன்ற எளிமையான தினசரி நடைமுறை வேலைகளை செய்வது கூட கடினமாக தோன்றும்.
இந்த சோர்வு உங்கள் இதயத்தில் ஏற்படும் உங்கள் இருதயத்தில் கூடுதல் அழுத்தத்தின் காரணமாக கூட ஏற்படலாம்.
ரத்த ஓட்டம் தடைப்படும் போது உங்கள் இதயம் கடினமாக பம்ப் செய்ய முயற்சிக்கிறது இதனால் நீங்கள் எளிதில் சோர்வாடிவீர்கள்.
சில முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள்
உடல் சோர்வு தவிர மாரடைப்பின் மற்ற சில அறிகுறிகள் இருக்கிறது, நீங்கள் வேலை செய்யும்போது திடீரென்று மூச்சு விடுவதில் சிரமம், மூச்சு திணறல் ஆகியவை ஏற்படும்.
மன அழுத்தத்துடன் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதும், மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கிறது.
பெண்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகள் அதிகம்
மாரடைப்பின் இந்த ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று பல மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இருப்பினும் இந்த அறிகுறிகள் சிறிது காலத்திற்கு பிறகு அடிக்கடி மறைந்துவிடுவதால் பலர் அந்த அறிகுறிகளை பற்றி சரியாக நினைவு வைத்துக் கொள்வதில்லை.
மாரடைப்பு ஏற்பட போவதற்கான அறிகுறிகள்
மாரடைப்பு வருவதற்கு நாட்கள் அல்லது மாதங்களுக்கு முன்பே ஏற்படக்கூடிய ஆரம்ப அறிகுறிகளை தவிர மாரடைப்பு ஏற்படும்போது நீங்கள் அனுபவிக்கும் அறிகுறிகளை பற்றியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.
உங்கள் மார்பில் லேசான அழுத்தம், கனம், இறுக்கம் அல்லது அழுத்தம் உணர்வு ஆகியவை அறிகுறிகள் ஆகும்.
உங்கள் மார்பிலிருந்து கைகள், தாடை, கழுத்து, முதுகு, மற்றும் வயிறு வரை அந்த வலி தொடர்ந்து பரவும்.
மேலும் தலைசுற்றல் அல்லது மயக்கம் போன்ற உணர்வு கடுமையாக வியர்ப்பது, திடீரென்று மூச்சு விடுவதில் சிரமம், குமுட்டல், வாந்தி, இருமல், மூச்சுத்திணறல், போன்ற பல்வேறு அறிகுறிகள் தொடர்ந்து ஒரு நபருக்கு ஏற்பட்டு கொண்டு இருக்கிறது என்றால்.
உங்களுக்கு இன்னும் ஒரு மாதத்திற்குள் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
எனவே நீங்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு இதற்கான தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பாக,இன்றைய காலகட்டங்களில் 30 வயது அடைந்த ஆண் அல்லது பெண் இருவரும் தங்களுடைய முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது மிக நல்லது.
மிக மோசமானது சைலன்ட் மாரடைப்பு
இந்த மாரடைப்பு அறிகுறிகளை எதையும் காட்டாது இதை புரிந்து கொள்வோம் முடியாது, அறிந்து கொள்ளவும் முடியாது, மருத்துவர்களாலும் இதை கணிக்க முடியாது.
எனவே நீங்கள் 30 வயதை கடந்த பிறகு 5 வருடங்களுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது மிக நல்லது.
பரம்பரை நோய்
உங்களுடைய பரம்பரையில் மாரடைப்பு ஏற்கனவே இருந்திருந்தால் நீங்கள் நிச்சயம் இதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் உங்களுடைய செல்களில் இந்த தன்மை இருக்கும் நிச்சயம் உங்களுக்கு அதே போன்ற மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.
உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளதா
வகை 2 நீரிழிவு நோய்க்கான காரணங்கள்