
ED officers conducted raids in Karur
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை கிடைத்த ஆவணங்கள் என்ன? அதிர்ச்சியில் திமுக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் கடந்த 3ம் தேதி அமலாக்கத்துறை திடீரென்று சோதனை நடத்தியது.
இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்டது என்ன என்பது குறித்து அமலாக்கத்துறை புதிய செய்தியை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை திடீரென்று சோதனை செய்யப்பட்டது அதன் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்படும் போது உடல் நலம் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் நீதிமன்ற அனுமதி உடன் சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது,சிகிச்சைக்கு பிறகு மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜி.
உடல்நலம் குணமடைந்தது அதன் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்,தற்போது நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார்.
அவரது கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது,உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை ஒரு பக்கம் தொடர்ந்து நடக்கும் நிலையில்,மறுபுறம் பல பரபரப்பான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
கடந்த வியாழக்கிழமை திண்டுக்கல் வேடசந்தூரில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் வீரா எஸ்டி சாமிநாதனுக்கு சொந்தமான இடங்களில் திடீரென சோதனை நடைபெற்றது.
இவருக்கு சொந்தமான நிதி நிறுவனங்கள் புஷ்பத்தூரில் உள்ள சிபிஎஸ் பள்ளி என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை மேற்கொண்டார்கள்.
இவர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் சாமிநாதனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை முடிந்த மறுநாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டில்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் கரூரில் உள்ள சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் அன்றைய தினம்.
மாலை சங்கர் இல்லம் மற்றும் நிதி நிறுவனம் ஆகியவற்றில் சோதனை நிறைவு பெற்றது.
24 மணி நேரத்திற்கு மேலாக தனலட்சுமி மார்பில் நிறுவனத்தில் நேற்று சோதனை நடைபெற்று காலையில் முடிவுக்கு வந்தது.
கடந்த 3ம் தேதி செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினர் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பிற்கு அழைத்துவரப்பட்டார்கள்.
இந்த சோதனையின் போது ரூபாய் 22 லட்சம் மதிப்புள்ள கணக்கில் வராத ரொக்கம் மற்றும் ரூபாய் 16 லட்சம் மதிப்பில் கணக்கில் வராத பொருட்களும்.
ரூபாய் 60 லட்சம் மதிப்புள்ள நில ஆவணங்களும் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மற்றும் அவரது நண்பர்கள்,உறவினர்கள் போன்றவர்களின் வீட்டில் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை மேற்கொண்டு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அவருடைய சகோதரர் அசோக் இரண்டு மாத காலமாக தலைமறைவாக இருந்து வருகிறார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத காரணத்தால் விரைவில் அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
MI INDEPENDENCE DAY FESTIVAL BEST OFFERS
Ather 450S Electric Scooter Specifications Price