செய்திகள்

உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்தது அமலாக்கத்துறை..!ED ordered to investigate Senthil Balaji for 5 days

ED ordered to investigate Senthil Balaji for 5 days

ED ordered to investigate Senthil Balaji for 5 days

உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்தது அமலாக்கத்துறை..!

விசாரணைக்காக அழைத்து செல்லப்படும் செந்தில் பாலாஜி எங்கு தெரியுமா.

கிட்டத்தட்ட 50 நாட்களாக செந்தில் பாலாஜி வழக்கு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், என மாறி மாறி நடைபெற்று வந்தது இறுதியாக இன்று வழக்கு முழுவதும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது அமலாக்கத்துறைக்கு சந்தேகம் அல்லது ஆவணங்களின் அடிப்படையில் ஒரு நபரை கைது செய்து விசாரணை செய்வதற்கு முழு அதிகாரம் இருக்கிறது என உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை, அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக அதிமுக ஆட்சியில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

அந்தப் புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனைக்கு வழங்க பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது.

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அரசு ஓமந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

அதன் பிறகு செந்தில் பாலாஜி கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி கொடுத்தது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக (திராவிட மாடல் அரசு முடிவு எடுத்தது) இந்த நிலையில் இதில் கடுமையான ஒரு உத்தரவை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது இவர் பணப்பரிவர்த்தனை குற்றத்தில் ஈடுபட்டது தெளிவாகத் தெரிகிறது இவர் மீது இந்த வழக்கை மறுபடியும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

அப்போது இரண்டு மாதத்திற்குள் வழக்கு விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் இல்லை என்றால் உச்சநீதிமன்றம் தனி குழுவை அமைத்து விசாரணை தொடரும் எனவும் அறிவித்தது.

இதன்பிறகு வருமான வரித்துறை அவருக்கு எதிராக சோதனை நடத்தியது இதில் பல திடுக்கிடு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலக்க துறையிடம் வழங்கப்பட்டுள்ளது,அமலாக்க துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர் கடந்த ஜூன் 13ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள்.

சோதனை செய்தனர் முன்பு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைகளின் போது அவருடைய ஆதரவாளர்கள் அமலகத்துறை அதிகாரிகள் பயன்படுத்திய காரின் கண்ணாடியை உடைத்தார்கள்.

பெண் அதிகாரியை ஆபாசமாக திட்டி தாக்கினார்கள் அவர்கள் வைத்திருந்த ஆவணங்களையும் பறிமுதல் செய்தார்கள்.

இதன்பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த துணை ராணுவ படையினரை அழைத்து வந்தார்கள்.

மொத்தமாக 17 மணி நேரம் சோதனை நடந்தது வீட்டோட சேர்த்து தற்போது தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்திலும் சோதனை நடத்தினார்கள்.

அதன் பிறகு செந்தில் பாலாஜியை கைது செய்தார்கள் இப்போது ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவரை விசாரணை செய்வதற்கு அமலாகத்துறை அதிகாரிகள் எங்கு அழைத்து செல்கிறார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

Redmi 5G smartphone specifications price

1000 fine if you have two PAN cards in tamil

Ather 450S Electric Scooter Specifications Price

How to apply new ration card in tamilnadu

New SP 160 Honda Unicorn Bike Specifications Price

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0