
ED raided the house of Senthil Balaji brother
அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி புதிதாக கரூரில் கட்டப்படும் பிரமாண்ட வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை, வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது என்ன நடந்தது இன்று..!
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக பிரம்மாண்டமாக கட்டப்படும் வீட்டில் அமலாக துறையினர் திடீரென்று சோதனை நடத்தினார்கள்.
இதனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது தமிழகத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியின் போது.
அந்தத் துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக பல நபர்களிடம் பண மோசடி செய்ததாக புகார்கள் குவிந்தது,இது குறித்து அப்போதைய முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் உரிய விசாரணை நடத்தி.
செந்தில் பாலாஜி அவர்களை அமைச்சர் பதிவிலிருந்து நீக்கினார், இதன் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை மாற்றங்களால்.
செந்தில் பாலாஜி அதிமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு பின்னர்,திமுகவில் சேர்ந்து மிகப்பெரிய இரண்டு துறைக்கு அமைச்சராக மாறினார்.
இந்தியாவில் யாரும் செய்யாததை செய்த செந்தில் பாலாஜி
இந்தியாவில் மிகப்பெரிய தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், என பிரபலமாக இருக்கும் நபர்களின் வீடுகளில், அவ்வப்போது வருமானவரித் துறையினர் சோதனை நடத்துவது வழக்கம்.
அதே போல தான் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த தகவல்களை சேகரித்த வருமான வரி துறையினர் அவருடைய சகோதரர் வீட்டில் சோதனை நடத்துவதற்கு கடந்த ஜூன் மாதம் சென்றார்கள்.
அப்போது அவருடைய ஆதர்வாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் பயன்படுத்திய வாகனங்களை சேதப்படுத்தினார்கள், பெண் வருமான வரித்துறை அதிகாரி அவர்களிடம் ஆபாசமாக திட்டினார்கள்.
அவர் பயன்படுத்திய அலுவலக சான்றிதழ்களையும் பிடுங்கிக் கொண்டார்கள்,இதுபோன்ற பல்வேறு அராஜகங்களில் ஈடுபட்டார்கள்.
இதுவரை இந்தியாவில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ய சென்ற இடத்தில் இது போன்ற ஒரு சம்பவத்தை அவர்கள் சந்தித்தது இல்லை.
இதன் பிறகும் கரூர் முழுவதும் செந்தில் பாலாஜி வருமான வரி துறையினரை விரட்டி அடித்ததாக அவரை புகழும் விதமாக கரூர் முழுவதும் ஆங்காங்கே போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டது.
இதனால் கடுமையான உச்சகட்ட கோபத்திற்கு சென்ற வருமான வரித்துறையினர் அவர்கள் கைப்பற்றிய ஆவணங்களை அமலக்க துறையிடம் ஒப்படைத்தார்கள்.
அதிலிருந்து சாட்சிகளின் அடிப்படையில் அமலாக்க துறையினர் கடந்த ஜூன் 13ஆம் தேதி நேரடியாக சென்னையில் செந்தில்பாலாஜியின் வீட்டில் மற்றும் தலைமைச் செயலகத்தில் அவருடைய அலுவலகத்தில் சோதனை நடத்தினார்கள்.
இதன்பிறகு செந்தில் பாலாஜி அவர்களை விசாரணைக்கு அமலக்கத்துறை அழைத்தது ஆனால் அவர் விசாரணை செய்ய ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இதனால் உச்சகட்ட கோபத்திற்கு சென்ற அமலாக்கத்துறை அவரை கைது செய்வதற்கு சம்மன் கொடுத்தார்கள்,இதை அவர் வாங்க மறுத்து தனக்கு நெஞ்சு வலி வந்ததாக தெரிவித்தார்.
இதனால் உடனடியாக அரசு ஓமாந்தூர் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது அதன்பிறகு.
கிட்டத்தட்ட 54 நாட்கள் வழக்கு விசாரணை சென்னை மற்றும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதன் பிறகு செந்தில் பாலாஜியை கைது செய்தது சரி அவரிடம் விசாரணை நடத்துவதற்கு 5 நாட்கள் அனுமதி கொடுத்தது உச்சநீதிமன்றம்.
இதன்பிறகு தற்போது செந்தில் பாலாஜி அவர்கள் அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.
செந்தில் பாலாஜி சகோதரருக்கு அனுப்பப்படும் சம்மன்
அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி சகோதரர் திரு அசோக் அவர்களுக்கு தொடர்ந்து 3 முறை சம்மன் அனுப்பினார்கள்,ஆனால் அவர் இதுவரை நேரில் ஆஜராகவில்லை.
இதனால் கடுமையான விரக்தியடைந்த அதிகாரிகள் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய பிரம்மாண்டமாக கட்டப்படும் அவருடைய புதிய வீட்டில் இன்று சோதனை செய்தார்கள்.
இதன்பிறகு அவருடைய புதிய வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தார்கள்.
அதன் பிறகு அமலாக்க துறையின் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமேன அவர் மனைவியிடம் சம்மன் வழங்கினார்கள்.
தொடர்ந்து நடத்தப்படும் சோதனைகள்
அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை செந்தில் பாலாஜியின் உறவினர்கள்,நண்பர்கள்,தொழிலதிபர்கள் என அனைவரிடமும் தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகிறார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Post office recurring deposit scheme details 2023
How to increase life of food products in tamil