
ED will freeze Senthil Balaji assets in tamil
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொத்துக்கள் பறிமுதல் அமலாக்க துறையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன பரபரக்கும் தமிழக அரசியல் களம்..!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவருடைய தம்பி அசோக் வீட்டில் நேற்றைய தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென்று துணை ராணுவப் படையினருடன் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் 17 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடந்து வந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்.
அவரை கைது செய்வதாகவும் தங்களுடன் நுங்கம்பாக்கம் அமலாக துறை அலுவலகத்திற்கு வருமாறு அழைப்புவிடுத்தனர்.
ஆனால் அதற்குள் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது உடனே ஐயோ என நெஞ்சை பிடித்துக் கொண்டு கதறினார்.
பிறகு அவர் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது அவரது இசிஜி இயல்பாக இல்லை.
இன்று காலை 9 மணிக்கு பிறகு தான் எதையும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் காவல்துறையினர் முக்கிய நபர்களை கைது செய்யும்போது அவரிடம், அவருடைய வழக்கறிஞர், அவருடைய நண்பர்களிடம், கைது வாரண்ட்டை கொடுப்பார்கள்.
ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது நடவடிக்கையில் எந்த வாரண்ட் காப்பியும் உறவினர்களிடம் தெரிவிக்க வேண்டியதில்லை உறவினர்களிடம் கைது செய்யப்படும் நபரிடம் வாய் வார்த்தையால் சொன்னால் மட்டும் போதும்.
2011 – 2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 30,000 நபர்களிடம் மிகப்பெரிய ஒரு தொகையை பெற்றதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2018ல் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணைக்கு உடனடியாக தடை விதிக்க கோரி செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார்,இதனால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கும், அமலாக்கத்துறை விசாரணைக்கும், தடை விதிக்கப்பட்டது.
தடையை உச்சநீதிமன்றம் அண்மையில் நீக்கியது இதனால் பழைய வழக்கானது சூடு பிடிக்கத் தொடங்கியது.
அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் கைது நடந்திருப்பதாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
அவரை 14 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க விசாரணை நீதிமன்றத்தில் அமலாக துறை கோரிக்கை வைக்கும், அதனை பரிசளிக்கும் நீதிபதி அதற்காக உத்தரவை பிறப்பிப்பார்.
மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் இந்த வழக்கு குறித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.
செந்தில் பாலாஜியை சென்னையில் வைத்த விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படக்கூடாது என்றும் தெரிகிறது.
அமலாக்க துறையின் சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அமலாக்க துறையின் கைத்தின்போது அவர் குற்றவாளி என பாவித்து கைது செய்வார்கள் மற்ற வழக்குகளில் அரசு தரப்பு அவர் குற்றவாளி என நிரூபிக்க வேண்டும்.
இந்த வழக்கில் தான் நிரபராதி என்பதை செந்தில் பாலாஜி நிருபிக்க வேண்டும் எப்போது வேண்டுமானாலும் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரமும்.
வங்கி கணக்குகளை முடக்கும் அதிகாரமும் அனைத்து அதிகாரமும் அமலாக்கத்துறைக்கு உண்டு.
பான் கார்டில் முகவரியை மாற்றுவது எப்படி
பான் கார்டு பாதுகாப்பாக இருக்கிறதா
வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் செய்வது
தாமதமாக தூங்கும் நபர்களுக்கு விரைவில் மாரடைப்பு