
Egg shell powder business full details in tamil
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற்றுத்தரும் முட்டை ஓடு பவுடர் விற்பனை..!
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்முடைய இணையதள பதிவில் Eggshell தொழிலில் அதிக முதலீடு இல்லாமல் எளிமையான முறையில் தொடங்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள போகிறோம்.
அதற்கு தேவையான மூலப்பொருட்கள் எப்படி பெறுவது என்பது பற்றிய முழு விளக்கத்தையும் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தப்பதிவு அதிக முதலீடு செலுத்தாமல் குறைவான முதலீடு வைத்து தொழில் தொடங்க நினைக்கும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தொழில் தொடங்க வேண்டும் என்று விருப்பமாக இருக்கும் ஆனால் என்ன தொழில் தொடங்குவது, எப்படி தொடங்குவது, அதற்கு மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும்.
முதலீடு எவ்வளவு தேவை, எத்தனை வருடத்தில் முதலீடு எடுக்கலாம், போன்ற அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்வது ஒரு தொழில் தொடங்க நினைக்கும் நபர்களுக்கு மிகவும் அவசியம்.
நீங்கள் தொழில் தொடங்குவதற்கு முன்பு அந்தத் தொழிலை பற்றி அனைத்து தகவல்களையும் துல்லியமாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அது மட்டுமில்லாமல் மூலப்பொருட்கள் எங்கு வாங்க வேண்டும், எங்கு விற்பனை செய்ய வேண்டும், எவ்வளவு சதவீதம் லாபம் வைத்து விற்பனை செய்ய வேண்டும்.
போன்ற அடிப்படை தகவல்கள் இருந்தால் மட்டுமே உங்களால் ஒரு தொழிலை சரியான முறையில் வெற்றிகரமாக செய்ய முடியும்.
Egg Shell Powder Uses in tamil
இந்த முட்டை ஓடுகள் கால்சியம் மாத்திரை தயார் செய்வதற்கு, முகத்திற்கு அழகு சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படும், அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படும் ஷாம்பு மற்றும் தாவரங்களுக்கு உரமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதுபோன்ற பல தயாரிப்புகளுக்கு அதிகமாக பயன்படுத்தப் படுவதால், இதற்கான விற்பனை மதிப்பு எப்பொழுது குறையாமல் சந்தையில் அதிகமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது.
விற்பனை மதிப்பு குறையாமல் இருப்பதால் இந்தத் தொழிலை தொடங்குவதால் நீங்கள் அதிகமான லாபத்தை பெற முடியும்.
மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும் அதற்கான வழிகள்
இந்த முட்டை ஓடுகளை நீங்கள் உங்கள் ஊரில் இருக்கும் Bakery Shopல் வாங்கிக் கொள்ளலாம், ஏனெனில் கேக் தயாரிப்பதற்கு அதிகமான முட்டைகள் Bakery Shopல் பயன்படுத்தப்படுகிறது.
உணவகங்கள் உங்கள் உறவினர்களிடமிருந்து முட்டை ஓடுகளை வாங்கிக்கொள்ளலாம் மற்றும் முட்டை ஓடுகளை நீங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.
இணையதளத்திலும் இது மாதிரியான முட்டை ஓடுகள் விற்பனை செய்யப்படுகிறது, இணையதளத்தில் ஒரு டன் முட்டை ஓட்டிற்கு 15,000/- முதல் 25,000/- வரை பணம் முதலீடு செய்ய வேண்டும்.
பவுடர் தயாரிக்கும் முறை
நீங்கள் சேகரித்த முட்டை ஓடுகளை தண்ணீரில் போட்டு ஒரு பத்து நிமிடம் கொதிக்க வைக்கவேண்டும், கொதிக்க வைக்கும் பொழுது அதன் மேல் ஒரு படலம் போல் இருக்கும் அதனை நீக்கி விட வேண்டும்.
இந்த முட்டை ஓடுகளை கொதிக்க வைப்பதன் மூலம் அதன் மேல் இருக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டுவிடும்.
அதன் பிறகு பத்து நிமிடம் முட்டை ஓடுகளை நன்றாக உலர வைக்க வேண்டும், வெயிலில் உலர வைக்கலாம் அல்லது ஓவனில் 20 நிமிடங்கள் வரை உலர வைக்கலாம்.
உலர வைத்த பின்னர் அந்த முட்டை ஓடுகளை பவுடர் செய்ய வேண்டும், இதனை நீங்கள் உங்களிடத்தில் இருக்கும் மிக்ஸியை பயன்படுத்திக்கொள்ளலாம், முட்டை ஓடுகளை நன்றாக அரைத்து பவுடர் செய்து கொள்ள வேண்டும்.
இதனை பவுடர் செய்வதற்கு தேவையான மெஷின்கள் இணையதளத்திலும் கிடைக்கிறது, அதை வாங்கி நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அந்த பவுடரை உலரவைத்த பின் Bottle அல்லது Ziplock Cover அல்லது Paper Bagல் செய்து விற்பனை செய்யத் தொடங்கி விடலாம்.
முட்டை ஓடு பவுடர் விற்பனை
நீங்கள் இதனை Agriculture Farming தோட்டத்திற்கு (Gardening),Nursery Shop போன்ற இடத்தில் விளம்பரம் செய்து இந்த முட்டை ஓடு பவுடர் நன்மைகளை எடுத்துக் கூறி விற்பனை செய்யலாம்.
நாமக்கல், சேலம், கோயம்புத்தூர், போன்ற மாவட்டங்களில் இந்த முட்டை ஓடு பவுடர் ஏற்றுமதி செய்யப்படுகிறது அதிக அளவில்.
உங்கள் ATM password இல்லாமல் பணம் எடுக்க முடியும்
இந்தத் தொழிலில் கிடைக்கும் லாப விகிதம்
கடைகளில் 1 kg Eggeshell Powder Rs.600/-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
What is data entry jobs full details in tamil
இதனை நீங்கள் 1 kg Eggshell Powder Rs.600/- ரூபாய்க்கு விற்பனை செய்தால் நல்ல லாபத்தைப் பெறமுடியும், இதற்கு நீங்கள் தயார் செய்யும் Eggeshell Powder மற்றும் உங்களின் விற்பனை திறனைப் பொறுத்து அமைந்துவிடும்.