
Flowers and its medicinal properties in tamil
மலர்களும் அதன் மருத்துவ குணங்களும் என்ன..!
நம்முடைய கலாச்சாரத்தில் மலர்கள் என்பது நம்முடன் பயணிக்கும் இன்றியமையாத ஒரு அழகு சாதனப் பொருள், மருத்துவ குணம் பொருள் என்று பல்வேறு வகையில் இதனை அழைக்கலாம்.
மலர்களும் பலவித நோய்களை நீக்கும் மருந்தாக நம்மளுடைய மருத்துவத்தில் விளங்குகிறது,என்பதில் நம்மில் பலருக்குத் தெரியும்.
பூக்களின் மருத்துவ குணம் பற்றி அறிந்தவர்களும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வதில்லை.
ஒவ்வொரு மலர்களிலும் தனித்துவம் மிக்க மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
சரி இந்த மலர்கள் பற்றிய மருத்துவ குணங்களைப் பற்றி முழுமையாக இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.
அகத்திப்பூ மருத்துவ குணங்கள்
அகத்திப் பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் பீடி சிகரெட் சுருட்டு போன்றவற்றைப் பிடிப்பதால் உடலில் ஏற்படும் சூட்டை முழுமையாக நீக்குகிறது.
முருங்கை பூ மருத்துவ குணங்கள்
முருங்கைப்பூ சாப்பிடுவதால் உடலில் பித்த கோளாறுகள், வாந்தி நீங்கும், அதோடு கண்கள் சூட்டை தனித்து குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
பாலியல் உணர்வினை அதிகரிக்க செய்யும், ரத்த சோகை நோய் குணப்படுத்தும்,உடலில் இரும்புச் சத்து அதிகரிக்க செய்யும், கால்சியம் குறைபாடு இருந்தால் நிவர்த்தி செய்யும்.
இதுபோல் பல்வேறு வகையான ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
ஆவாரம் பூ மருத்துவ குணங்கள்
இரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவினை 20 கிராம் அளவிற்கு நீரில் போட்டு கசாயம் செய்து அதனுடன் பால், சர்க்கரை, சேர்த்து குடித்துவர உடல் சூடு, நீரிழிவு நோய், நீர்கடுப்பு, கால் கடுப்பு, உடல் பித்தம், போன்ற பல்வேறு வகையான நோய்கள் நீங்கும்.
அத்திப் பூ மருத்துவ குணங்கள்
அத்திப்ப பூவை சுத்தம் செய்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி பாலில் சேர்த்து நன்கு காய்ச்சி அதில் சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள வெப்பத்தை, தோல் சுருக்கம், தோல் வெடிப்பு, முகம் சுருக்கம், மலச்சிக்கல், போன்றவை முழுமையாக குணமாகும்.
மாதுளம் பூ மருத்துவ குணங்கள்
உடலில் உள்ள அனல், பித்தம், ஏப்பம், வாந்தி, இரத்த, மூலம், போன்ற நோய்கள் மாதுளம் பூவை சாப்பிட்டு வர நீங்கும் அது மட்டுமில்லாமல் உடலில் ரத்தத்தை அதிகரித்து உடலுக்கு ஊட்டச் சத்தைக் கொடுக்கும்.
செம்பருத்தி பூ மருத்துவ குணங்கள்
செம்பருத்தி பூவானது இதயம் பலவீனம் அடைந்தவர்கள் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் செம்பருத்திப் பூவை நீரில் நன்கு காய்ச்சி காலை மற்றும் மாலை வேளைகளில் குடித்து வர இதயம் நன்றாக பலமடையும்.
பச்சைக் குங்குமப்பூ மருத்துவ குணங்கள்
பச்சைக் குங்குமப்பூ சாப்பிடுவதால் மூக்கடைப்பு, ஜலதோஷம், காதுகளில் ஏற்படும் நோய்களுக்கு, சிறந்த தீர்வைத் தருகிறது.
ரோகு மீன் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்..!
செந்தாழம் பூ மருத்துவ குணங்கள்
செந்தாழம் பூ சாப்பிட்டு வந்தால் தீராத தலைவலி குணமாகும், ஜலதோஷம், உடல் சூடு, ஒற்றைத் தலைவலி, கண்களில் நீர் வடிதல், முடி உதிர்தல், வாதநோய், போன்றவை நீங்கும் அதுமட்டுமில்லாமல் உடலை அழகாக வைத்திருக்கும்.
what are the laws for women in India
நெல்லிப்பூ மருத்துவ குணங்கள்
நெல்லிப்பூ உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு விழுதி இலை, வாத நாராயணா இலை, சேர்த்து கசாயம் வைத்து இரவில் குடித்து வந்தால் மலச்சிக்கல், வயிற்று உப்புசம், வயிறு சம்பந்தமான, அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.