
Foods that increase blood flow in the body in tamil
நீங்கள் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தத்தை கடத்தும் சிறந்த உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சனைகள் இன்று மிகவும் பொதுவாக மனிதர்களுக்கு இருக்கிறது,வலி,பிடிப்புகள் உணர்வின்மை செரிமான பிரச்சனைகள்.
கைகள் அல்லது கால்கள் உறைதல் ஆகியவை ரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படக்கூடிய சில பொதுவான பிரச்சனைகள் தீவிரமடைவதால் மருந்துகளை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கவும்.
உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க நீங்கள் குறிப்பிட்ட உணவு பரிந்துரைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்ற வேண்டும்.
ஆயுர்வேத நிபுணர்கள் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க பராமரிக்கவும் உதவும் பல்வேறு வகையான உணவுகளை பரிந்துரைக்கிறார்கள் அவைகளைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.
சிவப்பு நிற காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்
உங்கள் உணவில் கருப்பு திராட்சை,பீட்ரூட்,கேரட்,மாதுளை பழம், வெங்காயம்,இலவங்கப்பட்டை,குடைமிளகாய் மற்றும் கீரை போன்ற சிவப்பு நிற உணவுகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த உணவுகள் புதிய ரத்தத்தை உருவாக்கும்,ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
மாதுளையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் நைட்ரட்கள் அதிகம் உள்ளன,இவை வலிமையான ரத்த ஓட்டம் மற்றும் தசைகளின் திசுக்களின் ஆக்ஸிஜனேற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.
பீட்ரூட் கீரைகள் போன்றவற்றில் நைட்ரெட் ஊட்டச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.
உங்கள் உடல் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றுகிறது,நைட்ரிக் ஆக்சைடு ரத்த நாளங்களை தளர்த்தி தசை திசுக்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
லவங்கப்பட்டை கரோனி தாமணியில் ரத்த நாளங்களின் விரிவாக்கம் மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது இது இதயத்திற்கு ரத்தத்தை வழங்குகிறது.
வெங்காயத்தில் பிளானவாயுடுகள் நிறைந்துள்ளது ரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது உங்கள் தமனிகள் மற்றும் நரம்புகளை விரிவு படுத்துவதன் மூலம் சுழற்சியை மேம்படுத்துகிறது.
பூண்டில் சல்பர் கலவைகள் அதிக அளவில் நிறைந்துள்ளது,இது திசு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் ரத்த நாளங்களை தளர்த்துவதன் மூலம் ரத்த அழுத்தத்தை முற்றிலும் குறைக்கிறது.
நட்ஸ் மற்றும் சாக்லேட் வகைகள்
ஒவ்வொரு நாளும் ஐந்து பச்சை பாதம்,ஒரு வால்நட் மற்றும் ஒரு துண்டு டாக் சாக்லேட் சாப்பிடுங்கள்.
டாப் சாக்லேட் பிளானவாயுடுகளின் வளமான மூலமாக மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்,ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
அக்ரூட் பருப்பில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது,இது நைட்ரிக் ஆக்சைடு மற்றும் ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது.
பாதாம் பருப்பில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன,அவை உங்கள் ரத்த நாளங்களை விரிவு படுத்துவதன் மூலம் ரத்த விநியோகத்தை மேம்படுத்துகிறது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்