
Free Smartphone and internet for housewives
குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் மாநில அரசு அறிவிப்பு..!
குடும்ப தலைவிகளுக்கு இலவசமான ஸ்மார்ட் போன் மற்றும் இணைய தளத்தை வழங்கும் திட்டத்தை இந்தியாவில் ஒரு மாநிலம் அறிமுகம் செய்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு இணையதள வசதி செய்து தரப்படுகிறது, இதனால் அந்த மாநிலத்தில் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
இப்பொழுது ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்.
இதை முன்னிட்டு ஆளும் மாநில அரசு மக்களின் மனதில் நம்பிக்கையான இடம் பிடிக்க கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
இலவசமாக ஸ்மார்ட்போன் மற்றும் இணையதள வசதி
இந்த நிலையில் அங்கு அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் முதலமைச்சர் டிஜிட்டல் சேவை யோஜனா திட்டத்தை முதலமைச்சர் அறிமுகப்படுத்துகிறார்.
அதன்படி சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள 1 கோடியே 35 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவசமான ஸ்மார்ட்போன் வழங்கப்படுகிறது.
3 ஆண்டுகளுக்கு இணையதள இணைப்பு வழங்கப்படுகிறது இதற்கான செலவு சுமார் ரூபாய் 12,000 கோடி ஆகும்.
இதற்கான டெண்டர் அறிவிப்பு
இதற்கிடையே இந்த திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது இணையதள இணைப்பு அளிப்பதற்கு 3 தொலை தொடர்பு நிறுவனங்கள் தற்போது முன்வந்துள்ளன.
அவற்றில் ஒரு நிறுவனம் விரைவில் தேர்ந்தெடுக்கப்படும் பண்டிகை காலம் தொடங்குவதற்கு முதற்கட்டமாக.
ஸ்மார்ட்போன்களை வழங்குவதற்கான பணிகளை ராஜஸ்தான் அரசு இப்பொழுது போர்க்கால அடிப்படையில் தொடங்கியுள்ளது.
இரட்டிப்பு மகிழ்ச்சி தொடங்கியுள்ளது
அரசின் இந்த அறிவிப்பால் குடும்பத்தலைவிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள், இலவசமாக ஸ்மார்ட்போன்கள் மட்டுமில்லாமல்.
இணையதள இணைப்பும் வழங்கப்படுவதால் மக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
திமுக அரசின் நிலை என்ன
ஆளும் திமுக அரசு தமிழக மக்களை கவர்வதற்கு சுமார் 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது.
அதில் அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கப் பட்டது என்னவென்றால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படுவது.
எரிவாயு சிலிண்டர் மீதான மானியம் 100 ரூபாய் அளிப்பது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாய் குறைப்பது.
போன்ற பல்வேறு விதமான கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து விட்டு அவற்றின் மூலம் ஆட்சிக்கு வந்த பிறகு அந்தத் திட்டங்களை முழுவதும் மறந்துவிட்டது விடியல் அரசு.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் நிலை என்ன
ஆளும் திமுக அரசின் மீது கூட்டணிக் கட்சிகள் கடுமையான அதிருப்தியில் இருப்பதால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கட்டாயம் திமுகவில் மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெறும்.
தமிழக மக்கள் இந்த ஆட்சியை முழுவதும் வெறுக்க தொடங்கி விட்டார்கள், அதுமட்டுமில்லாமல் ஊழல் என்பது அதிகப்படியாக தொடங்கிவிட்டது.
அரசாங்க ஊழியர்களின் நிலை என்ன
அரசாங்க ஊழியர்களின் பெரும்பான்மை ஆதரவு மூலம் ஆட்சிக்கு வந்த திமுக அரசு இப்பொழுது அரசாங்க ஊழியர்களை கண்டுகொள்வதில்லை.
தமிழக அரசாங்க ஊழியர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் அரசாங்க ஊழியர்களின் ஈட்டிய விடுப்பிற்கு சம்பள தொகையை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிக வருமானம் கொடுக்கும் கைவினைத் தொழில் ஐடியாக்கள்..!
பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அமல் படுத்த முடியாது என்று திமுக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
5G Jobs and price some details in tamil
இதனால் அரசாங்க ஊழியர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் கடுமையான அதிருப்தியில் திமுக அரசின் மீது உள்ளார்கள்.