செய்திகள்

தலை முதல் பாதம் வரை உடம்பில் வெட்டப்படாத இடமே இல்லை..! Gang attacked Class XII student in Nanguneri

Gang attacked Class XII student in Nanguneri

Gang attacked Class XII student in Nanguneri

ராகிங் கொடுமை தாங்க முடியாமல் புகார் அளித்த பள்ளி மாணவர் ஒருவருக்கு தலை முதல் பாதம் வரை உடம்பில் வெட்டப்படாத இடமே இல்லை.

அவ்வளவு கொடூரமான சக மாணவர்கள் சாரி வெறியாளர்களாக உள்ளார்கள்,இந்த சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பை பார்க்கலாம்.

தலை முதல் பாதம் வரை உடம்பில் வெட்டப்படாத இடமே இல்லை இரண்டு கைகளும் கால்களும் கொடூரமான ஆயுதத்தால் வெட்டி கிழிக்கப்பட்டுள்ளன.

சினிமாவில் வரும் சைக்கோ போன்றவர்கள் தான் இந்த கொடூரமான குற்றவாளிகள்,12ம் வகுப்பு படிக்கும் பட்டியல் இனத்தை சார்ந்த மாணவன் சின்ன துறையும் அவரது தங்கையும் வீட்டில் இருக்கும் பொழுது.

வீட்டுக்குள் புகுந்து கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளது ஒரு சாதி வெறி பிடித்த சிறார் குழு.

படிப்பில் விளையாட்டில் ஒழுக்கத்தில் திறமையில் அப்பள்ளியில் முன்னுதாரணமாக விளங்கியுள்ள சின்னதுரை இவரைப்போல இருங்க என ஆசிரியர் பாராட்டியுள்ளார்.

என்ன நடந்தது அந்தப் பள்ளியில்

நாங்குநேரி பெருந்தேரு அம்பிகா முனியாண்டி ஆகியவரின் மகன் சின்னதுரை வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

சின்னதுறையுடன் நாங்குநேரி பகுதியை சேர்ந்த சில மாணவர்களும் படிக்கிறார்கள்,குறிப்பிட்ட சில மாணவர்கள் அந்த மாணவரிடம் தங்களது புத்தகப் பைகளை சுமக்க வைப்பதும்.

கையில் காசு வைத்திருந்தால் பிடுங்கிக் கொள்வதும் தங்கள் சொல்வதெல்லாம் கேட்க வேண்டும்,தங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற நிலையில் நடந்துள்ளார்கள்.

இதில் மாணவன் சின்னதுரை கையில் வைத்திருக்கும் பணம் மூலம் அவர்கள் பொருட்களை வாங்கிக் கொள்வது,ஹோட்டல்களில் வாங்கி தின்றுவிட்டு அதை சின்னதுரை பணம் கொடுக்க சொல்வதும் இந்த கொடுமை நடந்து வந்துள்ளது.

தொடர்ந்து நடந்த கொடுமை காரணமாக சின்னதுரை பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார்,இந்த நிலையில் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் சின்ன துறையை தாயார் அம்பிகா ஏன் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்று கேட்டுள்ளார்.

அதற்கு சின்னத்துரை சக மாணவர்கள் தன்னை துன்புறுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

உடனே அம்பிகா தனது மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்று ஆசிரியரிடம் இதுபற்றி புகார் கூறியுள்ளார்,ஆசிரியரும் சின்ன துறையை துன்புறுத்திய மாணவர்களை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளார்.

அதன் பிறகு என்ன நடந்தது

நடந்த எல்லா நிகழ்வையும் கூறி ஆசிரியர் தங்களை எச்சரிக்கும் அளவுக்கு சென்று விட்டதால் சின்ன துறையை தீர்த்து கட்ட வேண்டும் என சில மாணவர்கள் சாதி வெறியுடன் சுற்றியுள்ளார்கள்.

இதன்படி சின்ன துறையின் வீட்டுக்குள் புகுந்த சின்ன துறையை சரமாரி வெட்டி இருக்கிறார்கள்.

தன் மீது விழும் அரிவாள் வெட்டுக்களை கைகளைக் கொண்டு தடுக்க முற்பட்ட சின்னதுரைக்கு முன் தலையில் தலையில் ஒரு வெட்டும்.

வலது கையில் மூன்று வெட்டும், இடது கையில் இரண்டு வெட்டும், தொடை பாதம் என பல இடங்களில் கொடூரமாக வெட்டி உள்ளார்கள்.

இதனை தடுக்க சென்ற சின்ன துறையின் சகோதரிக்கும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்க வந்த முதியவரை தள்ளிவிட்டு இருக்கிறார்கள் அவர் கீழே விழுந்த சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

இந்த விவகாரத்தில் சக மாணவர்கள் 4 நபர்கள் இடைநன்ற 2 மாணவர்கள் உட்பட 6 மாணவர்களை கைது செய்துள்ளார்கள், கைதான 6 மாணவர்களிடம் நாங்குநேரி காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

Top 3 companies in India for you to invest

Top 5 Best Electric Scooters List in India..!

ISRO explain about Vikram lander soft landing

Price of wheat continues to rise in india

How to increase life of food products in tamil

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
1
Not Sure
0
Silly
0