
Gokulraj case judgement released today in tamil
யுவராஜ் கருணை மனு கூட போட முடியாது மதுரையில் நீதி நிலைநாட்டப் பட்டுள்ளது..!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு சாகும்வரை 3 ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில்.
கண்ணகி நீதி கேட்டுப் போராடிய மதுரையில் பட்டியலின இளைஞருக்கு நீதி கிடைத்துள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் இவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்துள்ளார் 2015ஆம் ஆண்டு கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ்.
வீடு திரும்பவில்லை மறுநாள் நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்,சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் அவரது கூட்டாளிகள் என மொத்தம் 17 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
10 நபர்கள் குற்றவாளிகள்
ஆரம்பத்தில் நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது இதன்பிறகு மதுரைமாவட்ட வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் இந்த வழக்கை 15 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்த வழக்கு சற்று தாமதமானது இந்த நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த 5ம் தேதி வழக்கின் தீர்ப்பு முழுவதும் வெளியானது தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் அவரது சகோதர்கள்.
குமார், அருண், சதீஷ்குமார், ரஞ்சித், ரகு, செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், உட்பட 10 நபர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.
சரியான தீர்ப்பு
அதேவேளையில் சங்கர், செல்வகுமார், தங்கதுரை, அருள் செந்தில், மற்றும் சுரேஷ், ஆகிய 5 நபர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள் இதில் முதல் குற்றவாளியான யுவராஜ் மீது அனைத்து குற்றங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அவர்களுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது, யுவராஜ் அவரது கார் டிரைவர் அருண் இருவருக்கும் மூன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், குமார், செல்வராஜ், ஆகிய 5 நபர்களுக்கும் இரண்டு ஆயுள் தண்டனையும்.
சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் பிரபு, கிரிதர், ஆகியோருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின் வெற்றி
இது தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி பா மோகன் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த.
அவர் கூறியதாவது கோகுல்ராஜ் தற்கொலை செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது, ஆனால் உடற்கூறு ஆய்வில் கொலை என்பது தெரியவந்தது.
வழக்கு தொடர்பாக யுவராஜ் உள்ளிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்க அவரது தாயார் கோரிக்கை விடுத்தார்.
9 மணிநேரம் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளார்கள்
கருணை மனு தொடர முடியாது
அரிதிலும் அரிதான வழக்கு என நீதிமன்றத்தில் இந்த வழக்கு பற்றிய தகவல்களை எடுத்துரைத்தோம்.
நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
முதலாவதாக கொலை செய்த பட்டியல் இன பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை சட்டத்தில் ஒரு ஆயுள் தண்டனை இதில் சாகும்வரை கட்டாயம் சிறையில் இருக்க வேண்டும்.
5 ஆயிரம் ரூபாய் அபராதம் இரண்டாவதாக குற்றச் சதி செய்து பட்டியலினத்தவர் கொலை செய்ததாக இன்னொரு ஆயுள் தண்டனை.
மூன்றாவதாக ஆட்கடத்தல் கொலை செய்தல் இந்தக் குற்றச் செயலுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
மதுரையில் நீதி நிலைநாட்டப் பட்டுள்ளது
இதன்மூலம் சாகும்வரை அவர் சிறையில் கட்டாயம் இருக்கவேண்டும் பிணையில் வர முடியாது.
வன்கொடுமை சட்டப்பிரிவு 360 பிரகாரம் கருணை மனு அளிக்க அனுமதி இல்லை.
கண்களைக் கவரும் புதிய மெஹந்தி டிசைன்கள் 2022
எதிர்காலத்தில் கருணைக் கொலைகள் தடுக்க இந்த தீர்ப்பு சரியாக இருக்கும்.
Causes and symptoms of pancreatic cancer in tamil
மதுரையில் நீதி நிலை நாட்டப்பட்டு உள்ளது, என பல்வேறு நபர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.