TECH

எந்த போனுக்கும் உத்திரவாதம் இல்லை உடனே DELETE செய்யவும் Google alerts user to delete this apps immediately

Google alerts user to delete this apps immediately

Google alerts user to delete this apps immediately

எந்த போனுக்கும் உத்திரவாதம் இல்லை உடனே DELETE செய்யவும் 14 App-களின் பட்டியலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் எச்சரிக்கை..!

ஸ்பின்ஓகே (SpinOK) என்று அழைக்கப்படும் மிகவும் மோசமான ஆபத்தான ஸ்பைவேர் (Dangerous Spyware) கொண்ட 101 ஆண்ட்ராய்டு ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.

அவைகளில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட 14 செயல்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் உள்ள 14 மொபைல் செயல்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தினாலும் கூட அல்லது ஸ்மார்ட் போனில் நீங்கள் டவுன்லோட் செய்து வைத்திருந்தாலும் கூட.

அதை உடனடியாக டெலீட் (Delete) அல்லது Uninstall அன்ஸ்டால்செய்யவும் கூகுள் நிறுவனம் ஒரு எச்சரிக்கை எடுத்துள்ளது.

நீக்கவில்லை என்றால் என்ன நடக்கும்

டாக்டர் வெப் (Dr. Web) என்கின்ற மென்பொருள் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி ஆபத்தான ஸ்பைவேர் (Dangerous Spyware) ஆனது.

தொலைபேசி ஃபோன்களில் சேமிக்கப்பட்டுள்ள ரகசிய தகவல்களை திருடி அவைகளை (Remote Servers) சர்வர்களுக்கு அனுபவம் திறனுடையது.

ஆர்வத்தை தூண்டும் ஆனால் தொட்டுவிட்டால் காலி

ஆபத்தான ஸ்பைவேர் (Dangerous Spyware) உள்ளடக்கிய பெரும்பாலான மொபைல் செயலியில் சிறிய விளையாட்டு பரிசுகள் மற்றும் வெகுமதிகளை வழங்குவதாக (offering small games and prizes) தெரிவித்து பயனாளர்களின் ஆர்வத்தை தூண்டும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவைகள் பின்புறத்தில் பயனாளர்களின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கிறது.

ஆபத்தான ஸ்பைவேர் (Dangerous Spyware) பாதிக்கப்பட்டுள்ள 101 ஆண்ட்ராய்டு செயல்களை கண்டறிந்து அதைப்பற்றி google நிறுவனத்திற்கு புகார் அளித்தது டாக்டர் வெப் (Dr. Web) என்கின்ற மென்பொருள் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தான் என்பதை குறிப்பிடத்தக்கது.

அவைகளில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட 14 மொபைல் செயல்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.Noizz:video editor music

2.Zapya:File Transfer Share

3.VFly:video editor and video maker

4.MVBit:MV video status maker

5.Biugo:video maker and video editor

6.Crazy Drop

7.Cashzine : Earn Money Reward

8.Fizzo Novel : Reading offline

9.CashEM : Get Rewards

10.Tick : Watch to Earn

11.Vibe Tik

12.Mission Guru : Brain Boost

13.Lucky Jackpot Pusher

14.Domino Master

பயனாளர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்

போலியான மொபைல் செயலிகள் (mobile apps) நூற்றுக்கணக்கானவை உலா வருகிறது அவற்றைப் பயனளர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கினால் முக்கியமாக உங்களுடைய ரகசிய தகவல்கள் திருடப்படும்.

அதற்கு மேலும் உங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பணம் திருட்டுப் போவதற்கு வாய்ப்புகள் அதிகம் என பல்வேறு முறை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது போன்ற மொபைல் செயலியில் மூலம் உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய மொபைலில் உள்ள கேமரா ஆன் செய்து உங்களுடைய தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையும் வீடியோ எடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

எனவே ஒவ்வொரு முறையும் புதிய செயலிகளை பதிவிறக்கம் செய்யும்பொழுது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என கூகுள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை அடிக்கடி வெளியிட்டு வருகிறது.

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

PM Kisan 14th Installment release date

ரூ 1000 உரிமைத் தொகை இப்படித்தான் கிடைக்குமா

யூடியூபில் வருகிறது புதிய மாற்றம்

What is your reaction?

Excited
2
Happy
5
In Love
4
Not Sure
4
Silly
1