TECH

Google Maps 3D Rolling vision in tamil

Google Maps 3D Rolling vision in tamil

Google Maps 3D Rolling vision in tamil

இனி எளிமையாக பயணம் செய்யலாம் கூகுளின் பிரம்மாண்ட புதிய திட்டம் 3D ரோலிங் வரைபடங்கள் (3D Rolling Maps) கலக்கும் கூகுள்..!

கூகுள் நிறுவனம் கூகுள் மேப்ஸ் செயலில் தொடர்ந்து புதிய புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது.

குறிப்பாக கூகுள் மேப்பில் வரும் ஒவ்வொரு புதிய தொழில்நுட்பங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே சொல்லலாம்.

அதேபோல் உலகம் முழுவதும் அதிக மக்கள் கூகுள் மேப் செயலியை பயன்படுத்துகிறார்கள் தினம் தோறும்.

குறிப்பாக முன் பின் தெரியாத புதிய இடத்திற்கு சென்றால் முகவரி மட்டும் வைத்துக்கொண்டு அருகில் இருக்கும் நபரிடம் உதவி கேட்போம் ஆனால் இந்த கூகுள் மேப் வந்த பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.

உங்களுடைய தொலைபேசியில் நீங்கள் செல்ல வேண்டிய முகவரியை டைப் செய்தால் போதும் அது உங்களை அழைத்துச் செல்லும்.

இப்பொழுது அந்த தொழில்நுட்பத்தில் மேலும் பல புதிய அதி நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீங்கள் செல்லும் சாலையில் போக்குவரத்து எப்படி இருக்கிறது என்பன போன்றவற்றை கூகுள் மேப்பில் (3D view ) காட்டும் வசதி விரைவில் கொண்டு வரப்படுகிறது.

என கூகுள் சமீபத்திய ஆண்டு கலந்தாய்வுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளது.

அதாவது இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நீங்கள் குறிப்பிட்ட உயரத்திலிருந்து கீழே பூமி எப்படி உள்ளது,என்பதை பார்க்கலாம்.

அதாவது பறவை உயரத்தில் பறந்து கொண்டே கீழே பூமி எப்படி உள்ளது என்பதை பார்க்கிறது.

அதேபோல் இந்த (3D view) தொழில்நுட்பம் மூலமும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து கீழே பூமி எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் உங்களுடைய வாகனத்தை செலுத்தலாம்.

பறவை கண் பார்வை மட்டுமின்றி வேறு சில பார்வைகளிலும் கூகுள் வரைபடத்தை காணும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்பு இப்போது வரை கிடைக்கப்பெற்ற வான்வெளி மற்றும் சாலை படங்களை கொண்டு.

நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் விஷன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த வசதி உருவாக்கப்பட்டு வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பெயர் நியூரல் ரேடியன்ஸ் பில்டன்ஸ் (NeRF) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒவ்வொரு இடத்திலும் ஒளியின் வெளிச்சத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும், இந்த தொழில்நுட்பம் பொருட்களின் அமைப்பையும் கூட தெளிவாக காட்டும் என்று கூறப்படுகிறது.

சாலைகளில் உள்ள பாதைகள், சாலை குறுக்கீடுகள், வாகனங்கள் நிறுத்தும் இடம் எந்த அளவில் உள்ளது, என்பதையும் புதிய தொழில்நுட்பம் மூலம் கூகுள் மேப்பில் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

12ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன? …

பின்பு சாலைகளில் எந்தெந்த நேரத்தில் எவ்வளவு கூட்டம் நெரிசல் இருக்கிறது என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தை நீங்கள் உள்ளீடு செய்தால் அதே சாலையில் வாகனங்கள் கற்பனையாக உருவாக்கப்பட்டு காட்டும்.

இது தவிர வெப்பநிலை மற்றும் காற்றின் தரம் எப்படி உள்ளது என்பதையும் கூகுள் மேப் மூலம் தெரிந்து கொள்ளலாம் இதற்கு வேண்டி கூகுள் மேப் செயலில் டைம் ஸ்டைலர் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கூகுள் மேப்பில் புதிய வசதிகள் உலகில் 15 முக்கிய நகரங்களில் முதற்கட்டமாக இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Tamil health tips causes of stomach growling

ஆனால் இந்த 15 நகரங்களில் எந்த இந்திய நகரமும் இல்லை எனவே இந்த புதிய வசதிகள் இந்தியாவுக்கு அடுத்த வருடம் வரும் என எதிர்பார்க்கலாம்.

இருந்தபோதிலும் கூகுள் மேப்பில் வரும் புதிய வசதிகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

What is your reaction?

Excited
5
Happy
11
In Love
2
Not Sure
1
Silly
2