Uncategorized

Governor Ravi speech details with vice chancellors

Governor Ravi speech details with vice chancellors

Governor Ravi speech details with vice chancellors

எதிர்கால திட்டம் குறித்து ரிப்போர்ட் அனுப்புவேன் ஊட்டியில் உரக்க சொன்ன தமிழக ஆளுநர்..!

ஊட்டியில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நேற்று பேசிய விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளது.

ஊட்டியில் ஆளுநர் ரவி தலைமையிலான துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது,மத்திய, மாநில, தனியார், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

இணை வேந்தரான உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அழைக்காமல், இந்த கூட்டத்தை நடத்துவது தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது ஆளுங்கட்சிக்கு மத்தியில்.

ஆளுநர் ரவி பேசியது என்ன

இந்த மாநாட்டில் முதல்நாள் பேசிய ஆளுநர் ரவி நாட்டை துண்டாட நினைப்பவர்களுக்கு, இந்த நாட்டில் அமைதி முக்கியம்.

இந்த நாடு ஒரே குடும்பம், இதில் பல்வேறு வேறுபாடுகள் இருக்கக் கூடாது, காஷ்மீரில் பிரிவினை சக்திகள் இப்பொழுது ஒடுக்கப்பட்டுள்ளது.

அங்கு அமைதி நிலவி உள்ளது, ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள், வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்து வர தொடங்கியுள்ளார்கள்.

வடகிழக்கு மாநிலங்களில் இருந்த பிரச்சினை முழுவதும் தீர்க்கப்பட்டுள்ளது.

ஒற்றுமை தேவை

நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி செய்பவர்களுக்கு கருணை காட்டக்கூடாது, அவர்களுக்கு கொஞ்சம் கூட கருணை இல்லை என்று கடுமையாக கோபமுடன் பேசினார்.

இந்த நிலையில்தான் நேற்று கடைசி நாள் உரையாற்றிய ஆளுநர் இரண்டு நாள் மாநாட்டில் பல முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.

நுண்ணறிவு மற்றும் ஆழமான அமர்வு சிறப்பாக அமைந்தன கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் என்று தெரிவித்தார்.

சான்றிதழ் வழங்கப்பட்டது

இவர்களுக்கான சான்றிதழ்களையும் ஆளுநர் வழங்கினார் இதையடுத்து பேசிய அவர் இரண்டு நாட்களாக நடந்த மாநாடு முடிவுகள் பற்றிய ரிப்போர்ட்.

மத்திய, மாநில, அரசுகளுக்கு அனுப்பப்படும் அதேபோல் கொள்கைவகுப்பாளர்களுடன் இந்த அறிக்கை பகிர்ந்து கொள்ளப்படும்.

இந்தக் கூட்டம் சிறப்பாக அமைந்தது, மத்திய, மாநில, தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தங்கள் அனுபவங்களை முழுவதும் பகிர்ந்து கொண்டார்கள் இந்த மாநாட்டில் என்று அவர் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த முன்னேற்றம் தேவை

தங்களின் கருத்துக்களை இங்கு தெரிவித்தார்கள், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒன்றிணைந்த நடவடிக்கை நாட்டில் உருவாக்க வேண்டும்.

எதிர்கால திட்டங்களை அடிப்படையாக வைத்து நாம் நம் நாட்டில் செயல்பட வேண்டும்.

நம் நாடு சுதந்திர தினத்தை 100 ஆண்டுகளை கொண்டாடும்போது நம் வல்லரசாக இருக்க வேண்டும்,2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலக தலைவராக மாற வேண்டும்.

சிறப்பான முன்னேற்றம் அடைய வேண்டும்

இதை நோக்கி நாம் முன்னேறும் வகையில் கடுமையாகவும் மற்றும் புத்திசாலித்தனமாகவும் உழைக்கவேண்டும்.

நமது மனித வளம்தான் நம் நாட்டினுடைய சிறந்த பலம், அதை இந்த தேசம் எதிர்நோக்கியுள்ளது.

இளநரையை தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய்..!

அமைதியான வளமான இந்தியாவை நோக்கி நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.

Old pension scheme for Government employees in tn

அதுதான் ஒவ்வொரு குடிமகனின் சிறப்பான கடுமையாக இருக்கும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

வருங்காலத்தில் என்ன நடக்கும்

இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் பொழுது தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணைவேந்தர்கள் நியமிக்கும் பொறுப்பு குறித்து சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 11 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதால் இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா என்பது வரும் காலத்தை பொருத்து தெரியவரும்.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
1
Not Sure
0
Silly
0