
Gram suraksha scheme full details in tamil
மாதம் ரூபாய் 1500 முதலீடு 35 லட்சம் வருமானம் தரக்கூடிய மத்திய அரசின் சிறந்த திட்டம்..!
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் மத்திய அரசு செயல்படுத்தி கொண்டிருக்கும் பல்வேறு சிறந்த திட்டங்களில்
அதிமுக்கியமான திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம் அதாவது இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம்.
இதற்கான வயது வரம்பு எவ்வளவு, இந்த காப்பீட்டு திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்ய முடியும்.
முதலீடு செய்த தொகைக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும், எப்படி இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைவது, போன்ற பல்வேறு முக்கியமான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
கிராம சுரக்ஷா திட்டம் என்றால் என்ன?
இந்தியாவைப் பொருத்தவரை சிறந்த சிறு சேமிப்பு திட்டங்களில் எப்போதுமே முதலிடத்தில் இருப்பது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்தான்.
இதற்கு என்ன காரணம் என்றால் இது அரசின் ஆதரவால் நேரடியாக செயல்படும் ஒரு அமைப்பு, இதனால் மக்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு எப்போதும் பாதுகாப்பு.
அதுமட்டுமில்லாமல் வட்டி விகிதமும் கிடைக்கிறது, என்பதால் மக்கள் அதிக அளவில் இதில் பணத்தை முதலீடு செய்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த அஞ்சலக திட்டங்களில் சந்தை அபாயம் என்பது இல்லை, நிலையான வருமானம் தரும் திட்டங்களாக இருக்கிறது.
குறிப்பாக இவற்றில் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மட்டுமில்லாமல் இவற்றில் மருத்துவ காப்பீடு திட்டங்களும் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது
அந்த வகையில் நாம் இப்பொழுது தெரிந்து கொள்ள இருப்பது கிராம சுரக்ஷா காப்பீட்டு திட்டத்தை பற்றி தான்.
கிராம சுரக்ஷா காப்பீட்டு திட்டம் என்பது அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்.
அரசு ஊழியர்கள், நகர்ப்புற கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாக இது அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றில் இரண்டு வகையான காப்பீட்டு திட்டங்கள் இருக்கின்றன, அதை ஒன்று அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PLI) மற்றொன்று (RPLI) கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்.
எப்படி இதில் காப்பீடு எடுக்கலாம்
முதல் காப்பீட்டு திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவியுடன் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் ஊழியர்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், என பலரும் இணைந்து கொள்ள முடியும்.
இரண்டாவது திட்டத்தில் கிராம பகுதியில் வசிக்கும் அனைவரும் இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
வயது வரம்பு என்ன
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்த பட்சம் 19 வயது அதிகபட்சம் 55 வயதாகும், குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூபாய் 10,000/- அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூபாய் 10 லட்சம் ஆகும்.
பிரீமியம் எவ்வளவு செலுத்த வேண்டும்
இந்த திட்டத்தில் தனிநபருக்கு பிரீமியம் செலுத்தும் சில விருப்பங்கள் வசதிகள் இருக்கிறது.
அவை 55 ஆண்டுகள் 58 ஆண்டுகள் மற்றும் 60 ஆண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபர் 19 வயதில் 10 லட்சம் தொகைக்கான கிராம சுரக்சா காப்பீட்டு திட்டத்தை தொடங்கினால் 55 ஆண்டுகளுக்கு மாதாந்திர பிரிமியம் 1515 ரூபாயாக இருக்கும்.
அதே 5 வருடங்களுக்கு எனில் 1463 ரூபாயாக இருக்கும் அதுவே 60 வருடங்களுக்கு எனில் 1141 ரூபாயாக இருக்கும்.
முதிர்வு தொகை எவ்வளவு கிடைக்கும்
இந்த திட்டத்தில் 55 ஆண்டுகள் திட்டத்திற்கு முதிர்வு தொகை அதிகபட்சமாக 31.60 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
58 வருட திட்டத்தில் முதிர்வு தொகை 33.40 லட்சம் ரூபாயாக இருக்கும்
60 வருட திட்டத்தில் முதிர்வு தொகை 34.60 லட்சம் ரூபாயாக இருக்கும்.
காப்பீட்டுத் தொகை எப்படியெல்லாம் செலுத்தலாம்
இந்த காப்பீட்டு திட்டத்தில் மாதம் மாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை அல்லது அரை ஆண்டுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என உங்கள் விருப்ப அடிப்படையில் பணத்தை செலுத்தும் வசதி இருக்கிறது.
இந்தியாவில் உள்ள நாட்டு மாடு இனங்களின் வகைகள் என்ன..!
பிரீமியம் செலுத்த 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் பாலிசி காலத்தை தவறவிட்டால் மீதமுள்ள பிரீமியத்தை செலுத்தி பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம்.
நாமினி வசதி இருக்கிறதா
இந்த பாலிசியில் நாமினி வசதி இருக்கிறது, ஒரு வாடிக்கையாளர் தங்கள் மின்னஞ்சல் ஐடி அல்லது மொபைல் போன் எண்ணை புதுப்பிக்க விரும்பினால்.
Atal Pension Yojana scheme full details in tamil
அவர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகலாம், திட்டம் பற்றி மேலும் முழுமையாக தெரிந்துக்கொள்ள உங்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகுங்கள்.