
Gramathu Nethili karuvadu kulambu seivathu eppadi
கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு செய்வது எப்படி..!
கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு என்றால் பல நபர்களுக்கு விருப்பம் ஆனால் வீட்டில் கருவாட்டு குழம்பு செய்தால்.
கருவாட்டு குழம்பு வாசனையும், சுவையும், கிடைப்பதில்லை அப்படினா இதை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.
தேவையான மூலப்பொருட்கள்
நெத்திலி கருவாடு – 300 கிராம்
கத்தரிக்காய் – 1/4 கிலோ
முருங்கைக்காய் – 3
பச்சை மிளகாய் – 3
தக்காளி – 2 நறுக்கியது
புளி – 1 எலுமிச்சம்பழம் அளவு
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறியது
சமையல் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மசாலா அரைப்பதற்கு மூலப்பொருட்கள்
சின்ன வெங்காயம் – ஒரு கையளவு
மல்லி தூள் – 50 கிராம்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பூண்டு – 5 பற்கள்
துருவிய தேங்காய் – 1/4 கப்
வரமிளகாய் – 2 (காய்ந்த மிளகாய்)
சீரகம் – ½ டீஸ்பூன்
கருவாட்டு குழம்பு செய்யும் முறை குறிப்பு
நெத்திலி கருவாடு குழம்பு செய்வது முதலில் நீங்கள் கருவாட்டை சுடுதண்ணீரில் ஊற வைத்து 15 நிமிடங்கள் கழித்து கழுவி நன்றாக சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு கத்தரிக்காய், தக்காளி, முருங்கைக்காய், மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும், புளியை ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கருவாட்டு குழம்பு செய்யும் முறை
ஒரு மண் சட்டியில் எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றை அடுப்பில் வைத்து சூடேறியதும் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும்.
காய்ந்த மிளகாயை வறுத்து பின்பு அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு,மிளகாய் தூள் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை வதக்கி நன்கு ஆறியதும் அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸி அல்லது அம்மியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை நீங்கள் அம்மியில் அரைத்தால் குழம்பு சுவையாகவும் மிகுந்த வாசனையாகவும் கிடைக்கும்.
அதன் பின்பு மற்றொரு மண் சட்டியை அடுப்பில் வைத்து சூடேறியதும் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கடுகு, மற்றும் சிறிதளவு சீரகம் சேர்த்து தாளித்து விடவும்.
பின்பு அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும், அதன் பின்பு அவற்றில் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
காய்கள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சில நேரம் கொதிக்க விட வேண்டும்.
கருவாட்டு குழம்பு செய்யும் முறை
அதன் பின்பு கரைத்து வைத்துள்ள புளி சாறு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
முந்திரி பழம் நன்மைகள் என்ன..!
புளிச்சாறு நன்கு கொதித்ததும், அதில் நெத்திலி கருவாடு சேர்த்து குறைந்தது 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
Ukraine vs russia war what are the decisions India
இப்பொழுது சுவையான கிராமத்து நெத்திலி கருவாடு குழம்பு தயாராகிவிட்டது.
சமைக்கும்போது நாவில் எச்சில் ஊற வைக்கும் கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பை வீட்டில் தயார் செய்து சுவைத்துப் பாருங்கள்.