
GST counselling plan to restructure 5 percentage
ஜிஎஸ்டி-யில் புதிய மாற்றம் யாருக்கெல்லாம் பாதிப்பு?3%,8% நடைமுறைக்கு வருமா..?
இந்திய வர்த்தக சந்தை ஜிஎஸ்டி அமலாக்கம் செய்த நாளிலிருந்து அதிக அளவிலான வர்த்தக பாதிப்புகளையும், வருவாய் பாதிப்புகளையும் சந்தித்து வருகிறது.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் பிரச்சனைகளை கலையும் நோக்கத்தோடு பல புதிய முயற்சிகள் தற்போது எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சில முக்கியமான மாற்றத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளது ஜிஎஸ்டி கவுன்சில்.
3%,8% வரி உயர்வு எவ்வளவு
மாநிலங்களின் வருவாயை உயர்த்தும் வகையில் வருகின்ற மே மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 5 சதவீத வரி பலகையை நீக்கிவிட்டு.
சாமானிய மக்கள் அதிகம் வாங்கும் பொருட்களை 3 சதவீத அடுக்கும், மீதமுள்ளவை 8 சதவீத வகைகளுக்குள் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
50000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்
ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஒரு சதவீத உயர்வு மூலம் வருடத்திற்கு சுமார் 50000 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதால்.
வரி மாற்றத்தின் மூலம் மாநில அரசுகள் இழப்பீடு தொகையாக மத்திய அரசை எப்போதும் நம்பி இருக்க தேவையில்லை.
ஆனால் இந்த புதிய வரிவிதிப்பின் மூலம் மேலும் பல புதிய பிரச்சனைகளும் பாதிப்புகளும் நாட்டில் ஏற்பட உள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு
ஜிஎஸ்டி வரி விதிப்பில் 0 மற்றும் 5 சதவீத வரி விதிப்பில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் சாமானிய மக்கள் பயன்படுத்தும், சேவைகள், நடுத்தர மக்கள் பயன் படுத்துவதாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ள வரிமாற்றம் மூலம் சில பொருட்களின் விலை குறைந்தாலும், சில பொருட்களின் விலை அதிகரிக்கும், என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.
மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்
இதேவேளையில் 5% பிரிவில் இருக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் எத்தனை சதவீதம் 3 சதவீதத்திற்கும், எத்தனை சதவீதம் 8 சதவீதத்திற்கும், மாற்றப்படுகிறது, என்பது மிக முக்கியமான ஒரு விஷயமாக கவனிக்கப்பட வேண்டும்.
சாமானியன் மற்றும் நடுத்தர மக்கள்
காரணம் 3 சதவீத பிரிவில் 20-30 சதவீத பொருட்களை ஒதுக்கி விட்டு மீதமுள்ள 80-70% பொருட்களை 8 சதவீதத்திற்கும் கீழ் மறுசீரமைப்பு செய்தால், சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்வார்கள்.
பேக் செய்யப்பட்ட உணவு பொருட்கள்
ஆனால் இந்த வரி மாற்றத்தின் மூலம் மத்திய அரசு பேக் செய்யப்பட்ட உணவு பொருட்கள் மீதான வரி விதிப்பு வித்தியாசத்தை கட்டாயம் சரிசெய்யும்.
இப்பிரிவு வரிவிதிப்பில் பல குழப்பங்கள் இருக்கும் நிலையில் புதிய மாற்றம் இதற்கான தீர்வு காணப்படும் உதாரணமாக பரோட்டா, வாழைக்காய், சிப்ஸ், போன்ற பொருட்கள்.
வரி பலகை பிரச்சனை என்ன
அனைத்திற்கும் மேலாக ஏற்கனவே வர்த்தக சந்தை 4 அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்புகள் (5,12,18,28) மூலம் வர்த்தக சந்தையில் ஏற்கனவே அதிகப்படியான குழப்பங்கள் இருக்கும்.
வாயு தொல்லை நிரந்தரமாக நீங்க வீட்டு வைத்தியம் என்ன..!
நிலையில் தற்போது புதிதாக ஒரு வரி பலகை (3,8,12,18,28) கொண்டு வருவதன் மூலம் மேலும் கூடுதல் சுமையை உருவாக்கிவிடும்.
what are the side effects of using earphones
ஜிஎஸ்டி வரி விதிப்பில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்தாலும், அதில் பாதிக்கப்படுவது என்பது நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மட்டுமே.
இந்த புதிய மாற்றம் வருகின்ற ஜூன் மாதம் முதல் தொடங்கும், இதனால் விலைவாசி என்பது சிறிய அளவில் மாற்றங்கள் இருக்கும்.