
GST revenue April 2022 month full details in tamil
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் எவ்வளவு தெரியுமா ..!
கொரோனா வைரஸ் பாதிப்பு, ரஷ்யா உக்ரைன், போர் சப்ளை செயின் பாதிப்பு, ஆகியவற்றுக்கு மத்தியில் இந்தியாவில் உற்பத்தி துறையை கடுமையாகப் போராடினால்.
வேகமான வளர்ச்சி நடைபெற்றுள்ளது, இதன் எதிரொலியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலான ஒரு பலன் கிடைத்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்வால் உற்பத்தி குறையும் என்று சில பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தாலும்.
கடுமையான மூலப் பொருட்கள் பற்றாக்குறை இருந்த காரணத்தால் பல பொருட்களின் விலை உயர்ந்தும் வர்த்தக அளவுகள் குறையாமல் ஜிஎஸ்டி வரி வசூல் வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி வருவாய் எவ்வளவு
கடந்த ஏப்ரல் மாதம் 2022ல் மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் புதிய வரலாற்று உச்சத்தையும் அளவை அடைந்து நம் நாட்டில் சாதனை படைத்துள்ளது ஏப்ரல் மாதம் மட்டும் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி கீழ் சுமார் 1,67,540 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
ஜிஎஸ்டி வசூல் முதன் முறையாக 1.5 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 2022 அளவீடு என்ன
இதற்கு முன்பு மார்ச் 2022 மாதம் அதிகபட்ச வசூல் அளவானது ரூபாய் 1,42,095 கோடியை விட தற்போது சுமார் ரூபாய் 25,000 கோடி அதிகமாக வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது சுமார் 20 சதவீதம் கூடுதலாக வரி வருவாய் அதிகரித்துள்ளது.
ஜி எஸ் டி பிரிவு 3
இந்த 1.67 லட்சம் கோடி ரூபாயில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) 33,159 கோடியாகும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி) 41,793 கோடியாகவும்.
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி) ரூபாய் 81,939 கோடியாகவும்.
ரூபாய் (36,705) கோடி இறக்குமதி பொருட்கள் மீது வரி வசூலிக்கப்பட்டுள்ளது மற்றும் செஸ் பிரிவில் ரூபாய் (10,649) கோடி இறக்குமதி பொருட்களின் பிரிவில் ரூபாய் 857 கோடி பெற்றுள்ளது மத்திய அரசு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்.
மொத்த வருவாய் பங்கீடு எவ்வளவு
மத்திய அரசு ஏற்கனவே (ஐஜிஎஸ்டி)யில் இருந்து (சிஜிஎஸ்டிக்கு ) ரூபாய் 33,423 கோடியாகவும் (எஸ்ஜிஎஸ்டி) ரூபாய் 26,962 கோடியாகவும் கொடுத்துள்ளது என்று அறிவித்துள்ளது.
வரி பகிர்வு பின்பு ஏப்ரலில் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சிஜிஎஸ்டி ரூபாய் 66,582 கோடியாகவும் எஸ்ஜிஎஸ்டி 66,582 கோடியாகவும் உள்ளது.
தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு
தமிழ்நாட்டில் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் 10 சதவீதம் அதிகரித்து உள்ளது.
கோடி 9,724 ரூபாய் வசூல் ஆகியுள்ளது 2021 ஆண்டு ஏப்ரல் மாதம் கோடி 8,849 ரூபாய் வரை தமிழ்நாடு அரசு வசூல் செய்து இருந்தது.
இந்தியாவின் வேகமான வளர்ச்சி
மார்ச் 2022 இல் மொத்த இ-வே பில்களின் எண்ணிக்கை 7.7 கோடி ஆகும், இது பிப்ரவரி 2022 மாதத்தில் 6.8 கோடி எண்ணிக்கை சுமார் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஊட்டச்சத்து நிறைந்த மீன் வகைகள்..!
இதன் மூலம் இந்தியாவில் வர்த்தக எண்ணிக்கை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது.
ஒரே நாளில் புதிய சாதனை
மேலும் ஏப்ரல் 2022ல் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு வரிவசூல் ஏப்ரல் 20ஆம் தேதி 9.58 லட்சம் ஜிஎஸ்டிபேமெண்ட்கள் மூலம் ரூபாய் 57,847 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
Avarampoo health benefits list in tamil
இது தவிர ஏப்ரல் 20 தேதி அன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை மட்டும் கிட்டத்தட்ட 88,000 பரிவர்த்தனைகள் மூலம் ரூபாய் 8,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது.