
Hair tips treatment for men at home in tamil
ஆண்களுக்கு முடி உதிர்வதை தடுக்க எளிய சில வழிகள் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய காலகட்டங்களில் ஆண்கள் அதிகம் கவலைப்படும் விஷயங்களில் ஒன்று தான் முடி உதிர்வு பிரச்சினை இந்த முடி உதிரும் பிரச்சனை பெண்களை விட ஆண்கள் தான் அதிக அளவில் பாதிக்கிறது.
அதிகமான முடி உதிர்தல் அதுமட்டுமில்லாமல் தலைமுடி நரைத்து போவது இதன் காரணமாக பல ஆண்கள் திருமணம் ஆவதில் பல்வேறு வகையான சிக்கல்களை சந்திக்கிறார்கள்.
சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சரியான முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய், ஷாம்பு, சோப்புகள், இவைகள் முக்கியமாக இருக்கிறது இது மட்டுமில்லாமல் உணவு வகைகளும் இதில் அடங்கும்.
இந்த பிரச்சனையை தடுத்து முடி வளர, முடி நிறம் கருமையாக மாற, பல ஆண்கள் கடைகளில் விற்கப்படும் விதவிதமான எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை என்பது உண்மை இயற்கையான முறையில் இருந்து பெறப்படும் மூலப்பொருட்கள் மட்டுமே இதற்கு சரியான தீர்வைக் கொடுக்கும்.
குறிப்பு 1
பூந்திக்கொட்டை, சீயக்காய் மற்றும் நெல்லிக்காய் மூன்றையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் சேர்த்து பாதியாகும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும்.
பின்பு இந்த நீரில் தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து ஸ்கால்ப்பில் படும்படி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
அரைமணி நேரம் ஊற வைத்து அலச வேண்டும் இவ்வாறு வாரத்தில் குறைந்தது 3 முறை அல்லது 4 முறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும் உங்களுக்கு.
குறிப்பு 2
வெந்தயத்தை இரவில் நன்றாக ஊற வைத்து மறுநாள் காலையில் அதனுடன் செம்பருத்தி இலை சேர்த்து அரைத்து, அதை தலையில் தேய்த்து 45 நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும்.
பின்பு குளிர்ந்த நீரால் தலையை அலசுங்கள் இவ்வாறு வாரத்தில் 2 முறை குறைந்தது ஒரு மாதம் வரை தொடர்ந்து நீங்கள் செய்து வந்தால், முடி உதிர்வு பிரச்சினை நீங்கி முடி கலர் மாறுபடும், முடி நன்றாக வளர்ச்சி அடையும்.
குறிப்பு 3
வெங்காயம் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்வதில் சிறந்ததாக இருக்கிறது, முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி செழித்து வளர வெங்காயம் பயன்படுத்தலாம்.
எனவே முடி உதிர்ந்த இடத்தில் வெங்காயத்தை பேஸ்ட் போல அரைத்து தடவி நன்கு மசாஜ் செய்து வந்தால்.
வெங்காயத்தில் உள்ள சல்பர் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், இதனால் முடியின் வளர்ச்சி விரைவில் சரி செய்யப்படும்.
குறிப்பு 4
கடுகு எண்ணெயுடன், ஒரு டேபிள்ஸ்பூன் மருதாணி இலையை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து விட்டு இருக்க வேண்டும் பின்பு இந்த எண்ணெயை குளிர வைத்து வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் கெடாமல் பாதுகாத்து கொள்ளவும்.
இந்த எண்ணெய்யை தினமும் தலைக்குத் தேய்த்து வர சில வாரங்களில் முடி உதிர்வு பிரச்சினை சரி செய்யப்படும் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
குறிப்பு 5
நெல்லிக்காய் முடி வளர்ச்சியை நன்கு தூண்டுகிறது, பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கி, குளிர வைத்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் கெடாமல் பாதுகாத்து கொள்ளவும்.
இந்த நெல்லிக்காய் எண்ணெயை தினமும் ஆண்கள் தலைக்கு தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து வர வேண்டும்,இதனால் தலை முடி வளர்ச்சி தூண்டப்படும், முடியின் நிறம் கருமையாக மாறும்.
இந்த பொருட்கள் நமக்கு தெரியாமல் நமது இதயத்தை பாதுகாக்கிறது
குறிப்பு 6
செம்பருத்தி இலை, தேங்காய் எண்ணெய், இரண்டையும் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து பேஸ்ட் போல செய்து கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.
Prickly pear fruit benefits list in tamil
இதனை அடிக்கடி தலைக்கு தேய்த்து வர வேண்டும் குளிப்பதற்கு முன்பு இதுபோல் வாரத்துக்கு இரண்டு மூன்று முறை தொடர்ந்து செய்து வந்தால் முடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.