
வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்(Health Benefits of Eating Peanuts)
ஆண்மையை அதிகரிக்க பல மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு பதிலாக இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்,இயற்கை உணவுகளை சாப்பிடுவதால் ஆண்மை அதிகரிக்கும்.
அது மட்டுமல்லாமல் உடலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது இதனால் தீங்கு விளைவிக்காது.
ஆண்மையை மேம்படுத்துவதில் வேர்க்கடலை முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், அசைவ உணவுக்கு பதிலாக வேர்க்கடலையை அதிகம் சாப்பிடலாம்.
இந்த வேர்க்கடலை ஆண்மையை அதிகரிக்கிறது. இந்த கட்டுரையில், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வேர்க்கடலையை எப்படி சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
வேர்க்கடலை எண்ணெய் நமது தமிழ்நாட்டின் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப சரியாக இருப்பதால் இதனை உணவில் எடுத்துக் கொள்வதால் எந்த ஒரு தீங்கு விளைவுகளும் ஏற்படாது, அதுமட்டுமில்லாமல் இதயத்தை பாதுகாக்கும் இதய தமணிகளில் அதிகளவு கொழுப்பு சேர்வதைக் குறைக்கிறது.
வேகவைத்த வேர்க்கடலை பல்வேறு ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்கும், இதனால் உடல் உபாதைகள் ஏற்படாது அது மட்டுமில்லாமல் உடலில் சர்க்கரையின் அளவை இது சமன்படுத்தும் மற்றும் உடல் எடை கூட்டும் நபர்கள் வேர்க்கடலையுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டுவரலாம் இதனால் உடல் எடை விரைவாக கூடும்.
இது ஒரு இயற்கையின் வரப்பிரசாதம் என்று சொல்லலாம் ஏனென்றால் அந்த அளவிற்கு இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
வேர்க்கடலை
வேர்க்கடலையை பச்சையாக இருப்பதை விட வேகவைத்து சாப்பிடுவது நல்லது. இதனால், பல்வேறு சத்துக்கள் உடலுக்கு உடனடியாகக் கிடைக்கும்.
வேர்க்கடலை பொடி செய்து பால் மற்றும் தேனுடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையாகும் அதுமட்டுமில்லாமல் உடலில் உள்ள ரத்த செல்கள் உற்பத்தி அதிகமாகும் இதனால் ஆண்மையும் அதிகமாகும்.
பால்
பாலுடன் ஒரு டீஸ்பூன் வேர்க்கடலை எண்ணெயை கலந்து குடிக்கவும்.
வீக்கங்கள்
வேர்க்கடலை சாப்பிடுவது உடலில் காணப்படும் வீக்கத்தை குணப்படுத்த உதவுகிறது. எனவே, நீங்கள் பயமின்றி வேர்க்கடலையை உண்ணலாம். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாக அதிகரிக்கிறது
முகத்தை பளபளப்பாக்குகிறது
வேர்க்கடலை உடல் ஆரோக்கியத்தில் மட்டுமின்றி தோல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் இறந்த சரும செல்களை அகற்ற பயன்படுகிறது.
புரத
வேர்க்கடலையில் இறைச்சியை விட அதிக புரதம் உள்ளது, இது இன்றுவரை புரத குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த உணவாக அமைகிறது.
புற்றுநோயைத் தடுக்கிறது
வேர்க்கடலையில் உள்ள சத்துக்கள் புற்றுநோயைத் தடுக்கிறது மற்றும் இதயத்தின் தமனிகளில் அதிக அளவு கொழுப்பு சேர்வதற்கு எதிராக பாதுகாக்கிறது, இதனால் இதயத்திற்கு சிறந்த ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
நீரிழிவு
மருத்துவர்களின் கூற்றுப்படி, சர்க்கரை நோயாளிகள் நிலக்கடலையை தொடர்ந்து உட்கொள்வது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது. கூடுதலாக, பல ஆய்வுகள் வேர்க்கடலை இதயத்தை வலுப்படுத்துவதாகக் காட்டுகின்றன.
மூளை ஆரோக்கியமாக
மூளை நன்றாக வேலை செய்ய வேர்க்கடலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேர்க்கடலை மூளைக்கு புத்துணர்ச்சி தருவது மட்டுமல்லாமல் சோம்பலை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
மூட்டு வலிக்கு தீர்வு
பாரம்பரியமாக தயாரிக்கப்படும் வேர்க்கடலை எண்ணெய் மூட்டு வலியை முற்றிலும் குறைக்கிறது என்று பாரம்பரிய மருத்துவம் கூறுகிறது.
ஆண்மையை அதிகரிக்க
வேர்க்கடலையை உரித்து பொடி செய்து பாலில் கலந்து ஆண்மை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
why Cold Drinks are not good for health 2021
வேர்க்கடலை எண்ணெய்
ஒரு டீஸ்பூன் வேர்க்கடலை எண்ணெயை எடுத்து உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள், ஏனெனில் இது சிறுநீர் பிரச்சனைகளை குறைத்து மலச்சிக்கலை போக்கும்.