
Health Benefits of triphala Suranam in tamil
திரிபலா சூரணத்தில் உள்ள மருத்துவ குணங்கள்..!
இன்றைய காலகட்டத்தில் நோய்கள் என்பது மனிதர்களை எளிதாக தாக்குகிறது இதனால் தினந்தோறும் நோய்வாய்ப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
புதுப்புது வியாதிகள் மக்களை தாக்கி கொண்டு இருப்பதால் மருத்துவ உலகமும் அதற்கேற்றார்போல் மருந்துகளை கண்டுபிடிக்கிறது.
இருந்தாலும் நோய்களை முழுமையாக ஒழிக்க முடியவில்லை மக்கள் நிறைய துன்பங்களை சந்திக்கிறார்கள்.
கடந்த 50 ஆண்டுகளாக மட்டுமே ஆங்கில மருத்துவம் இந்த உலகில் பிரபலமடைந்து வருகிறது.
அதற்கு முன்னர் நாட்டு மருத்துவம், சித்த மருத்துவம், யுனானி, பாட்டி வைத்தியம், வீட்டு மருத்துவம், என பல்வேறு மருத்துவ முறைகளை நம்முடைய கலாச்சாரம் பின்பற்றியுள்ளது.
சித்தர்கள் கூறும் நாட்டு மருத்துவம் மிகவும் சக்தி வாய்ந்தது இதனால் கொடிய நோய்களையும் குணப்படுத்த முடியும் ஆரோக்கியமாக வாழ முடியும் இதற்கு எந்த ஒரு செலவும் இல்லாமல் செய்யலாம்.
நம் தமிழ் கலாச்சாரம் பல்வேறுவகையான மருத்துவத்தை பின்பற்றியுள்ளது இதனால் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த மனிதர்களும் இருக்கிறார்கள்.
சித்தர்கள் கொடிய நோய்களையும் எளிமையான மருத்துவம் மூலம் குணப்படுத்தி உள்ளார்கள்.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உள்ளார்கள் சித்தர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றினால் எப்பொழுதும் ஆரோக்கியமாகவும் நேர்மறையாக சிந்திக்க முடியும்.
இந்த கட்டுரையில் திரிபலா சூரணத்தில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி முழுமையாக நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
திரிபலா சூரணம் என்றால் என்ன?
திரிபாலா சூரணம் என்பது மூன்று சிறந்த கணிகளை உள்ளடக்கியது நெல்லிக்காய், தான்றிக்காய் மற்றும் கடுக்காய் இந்த மூன்றும் சேர்ந்தது தான் திரிபலாசூரணம் துவர்ப்பு, கசப்பு, இனிப்பு, சுவையுடன் இருக்கும்.
நெல்லிக்காய் மனிதர்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் ஆயுளை கூட்டும்.
கடுக்காய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கும் மற்றும் உடலை சுத்தம் செய்யும்.
தான்றிக்காய் உடலில் இருக்கும் கெட்ட கழிவுகளை வெளியேற்றும்.
உடலில் இருக்கும் பித்தத்தை குறைக்கும்
உடலில் பித்தம் அதிகமானால் உங்களால் சரியாக சிந்திக்க முடியாது, சரியாக தூங்க முடியாது, அதிகமான மன அழுத்தம் ஏற்படும்.
உடல் சூடு அதிகமாக ஏற்படும், சரியான முறையில் உணவு எடுத்துக்கொள்ள முடியாது.
அதனால் உங்களுடைய அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதிக்கப்படும், இதனை போக்குவதற்கு தினமும் அதிகாலையில் திரிபலா சூரணத்தை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
செரிமானம் சரியாக நடைபெற
நீங்கள் சாப்பிடும் உணவுகள் சரியாக செரிமானம் ஆகவில்லை எனில் உடல் பல்வேறு வகையான பிரச்சனைகளை சந்திக்கும்.
மது, அதிக சூட்டில் வறுக்கப்பட்ட கோழிக்கறி, பழைய இறைச்சி, கருவாட்டு குழம்பு, அழுகிய முட்டை, கெட்டுப்போன ரொட்டி போன்ற உணவுகளை நீங்கள் தெரியாமல் சாப்பிட்டால்.
உடல் உபாதைகள் ஏற்படும் இதனை சரிசெய்ய நீங்கள் திரிபலா சூரணத்தை சாப்பிட்டு வந்தால், குடலியக்கம் சீராக நடைபெறும் மற்றும் உடலுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த
உடலின் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிக மிக அவசியம் நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒரு டம்ளர் சுடு நீரில் 5 கிராம் அளவு திரிபலா சூரணத்தை சேர்த்து.
கொதிக்க வைத்து அந்த நீரை வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால் உடலில் இன்சுலின் அளவை சரியான நிலையில் வைத்துக் கொள்ளலாம்.
உடல் எடை குறைய
இன்றைய சூழலில் இளைஞர்கள் பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு அதிக நேரம் வேலை பார்ப்பதால் உடல் பருமன் என்பது அதிகமாகிவிடுகிறது.
இதற்கு சரியான உடற்பயிற்சி எடுத்தாலும் உடல் எடை அவ்வளவு எளிதாக குறைவதில்லை.
எனவே உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்கள் வெந்நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் திரிபால சூரணம் கலந்து அதிகாலை வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.
இதனை குடித்தவுடன் அரை மணி நேரத்திற்கு எந்த ஒரு உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இருதய இரத்த ஓட்டத்திற்கு
உடலில் எப்பொழுதும் ரத்தத்தின் அளவு சீராக இருப்பது மிக அவசியம் அப்போது தான் உங்களால் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
உடம்பில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிப்பதற்கு ரத்த ஓட்டத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் இந்த திரிபலா சூரணம் எப்பொழுதும் உதவிகரமாக இருக்கும்.
புற்றுநோயை முன்கூட்டியே தடுப்பதற்கு
திரிபலா சூரணத்தில் இருக்கும் (ஆன்டிபயாடிக் பண்புகள்) நோய் எதிர்ப்பு பண்புகள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை முற்றிலும் தடுக்கிறது.
மேலும் புற்றுநோய் வராமலும் உதவுகிறது, கிருமிகள் வைரஸ் பாக்டீரியாக்கள் நுழையாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது.
திரிபலா சூரணம் எப்படி தயாரிப்பது
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய், மூன்றும் உங்களுக்கு தேவையான அளவு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றையும் நிழலில் உலர்த்த வேண்டும் நெல்லிக்காய் மற்றும் கடுக்காயில் உள்ள விதைகளை முற்றிலும் நீக்கிவிட வேண்டும்.
மூன்றும் நன்றாக காய்ந்த பின்பு நல்ல அரைத்து பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
திரிபலா சூரணத்தை சித்தர்கள் கொடிய வியாதிகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக அளவில் பயன்படுத்தினார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
High mileage two wheelers in india 2023