
Heart attack symptoms jaw pain in tamil
முகத்தில் இந்த பகுதியில் வலி ஏற்பட்டால் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்..!
தாடை வலியும் லேசான மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம் என பல நபர்களுக்கு தெரியாது.
எந்தெந்த அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்க கூடாது என்பது பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் மாரடைப்பு ஆபத்து அதிகமாக உள்ளது இன்றைய காலகட்டத்தில்.
மாரடைப்பின் சில அறிகுறிகள் குறித்து தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.
தாடையின் பின்புறத்தில் வலி லேசான மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
உலகில் அதிகமான மக்கள் திடீரென்று உயிரிழப்பிற்கு மாரடைப்பு மட்டுமே முக்கிய காரணம்.
மாரடைப்பின் அறிகுறிகள் என்ன
இன்றைய அவசர காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் மாரடைப்பு ஆபத்து அதிகமாக ஏற்படுகிறது.
ஆகையால் உங்களை நீங்கள் நன்கு கவனித்துக் கொள்ள சில விஷயங்களில் முழுமையான கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாக மாறியுள்ளது.
சில அறிகுறிகள் குறித்து தெரிந்து கொள்வது மிக மிக அவசியம் இந்த விழிப்புணர்வை நீங்களே ஏற்படுத்திக் கொண்டால் உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினருக்கு.
ஏதாவது சில அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற்று உடலை குணப்படுத்திக் கொள்ளலாம்.
மார்புவலி, அமைதியின்மை மற்றும் வியர்வை போன்ற பிரச்சினைகள் இருந்தால் இவையும் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.
தாடை வலியும் லேசான மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம் என்பதே பெரும்பாண்மையான நபர்களுக்கு தெரியாது.
எந்தெந்த அறிகுறிகளை நீங்கள் முற்றிலும் புறக்கணிக்க கூடாது என்பதை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கைகளில் கூச்சம் ஏற்படுதல்
கையில் வலி அல்லது கூச்ச உணர்வு தொடர்ந்து இருந்தால் அதுவும் லேசான மாரடைப்பிற்கான அறிகுறியாக இருக்கலாம், இந்த வலி மார்பு மற்றும் கழுத்து வரை பரவும்.
இந்த அபாயத்தை இலகுவாக எடுத்துக் கொள்வது ஆபத்தானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
திடீரென்று வியர்ப்பது
இரவில் திடீரென்று அதிகமாக வியர்க்க ஆரம்பித்தால் அது மாரடைப்பின் முக்கிய அறிகுறியாக இருக்கும்.
இந்த அறிகுறிகளையும் நீங்கள் புறக்கணிக்க கூடாது, இதற்கு உடனடியாக மருத்துவ நிபுணர்களை தொடர்பு கொண்டு, உங்கள் பிரச்சனைகளை சொல்லி தீர்வு காணுங்கள்.
ஏப்பம் மற்றும் வயிற்று வலி
பல வயிற்றுப் பிரச்சனைகள் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம் என மருத்துவர்கள் கணித்துள்ளார்கள்.
ஏப்பம், வயிற்றுவலி, அனைத்தும் லேசான மாரடைப்பின் அறிகுறிகள்.
பெரும்பாலும் மக்கள் இந்த அறிகுறிகளை வாயு தொல்லை நினைத்து புறக்கணித்து விடுகிறார்கள், இப்படி செய்வது நல்லது இல்லை.
மூச்சு திணறல் மற்றும் மயக்கம்
படிக்கட்டுகளில் ஏறும் போது மூச்சு திணறல் ஏற்பட்டால் உங்கள் இதயம் சரியாக வேலை செய்யவில்லை என்று பொருள் கொள்ளலாம்.
குடல் ஆரோக்கியம் காக்க எப்படி உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்..!
இது தவிர மூச்சு விடுவதில் சிரமம், தலைசுற்றல், நெஞ்சுவலி, போன்றவை மாரடைப்பின் முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம்.
தாடையில் வலி ஏற்படுதல்
தாடையின் பின்புறத்தில் வலி லேசான மாரடைப்பிற்கான அறிகுறிகளாக இருக்கலாம் இதிலிருந்து வலி ஆரம்பித்து கழுத்து வரை பரவுகிறது.
What are the important symptoms elephantiasis
இந்த வலி திடீரென்று ஏற்படுகிறது, இந்த வலி இருந்தால் இதை கண்டிப்பாக அலட்சியப்படுத்தக் கூடாது, உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.