
Here are some simple tips to get rid of dandruff
பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட எளிய சில குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்..!
தற்போது அனைத்து நபர்களும் சந்திக்கின்ற ஒரு முக்கியமான பிரச்சனை என்றால் அது கண்டிப்பாக பொடுகு தொல்லை தான் என்று சொல்லலாம்.
இந்த பொடுகு பிரச்சனை வந்து விட்டால் முடி அதிகமாக கொட்டும் அதுமட்டுமின்றி தலை முழுவதும் அங்கங்கே வெள்ளையாக காணப்படும்.
முடி வளர்வது தடுக்கப்படும், முடி சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
இதனைத் தடுப்பதற்கு இப்பொழுது ஏகப்பட்ட பொருட்கள் மார்க்கெட்டில் இருக்கிறது, இருந்தாலும் அவைகள் முழுமையாக பொடுகு பிரச்சனைகளை சரி செய்வதில்லை, குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பொடுகை தலையில் தடுக்கிறது.
இந்த பொடுகு தொல்லை ஏற்படுவதற்கு என்ன காரணம் பொடுகு நீங்க என்ன வழி உள்ளது என்று இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
இவற்றிற்கான முக்கிய சில காரணங்கள்
தலையில் பொடுகு அதிகமாக வருவதற்கு காரணம் தலைமுடியை நன்கு அலசாமல் இருப்பது, தலைமுடியை எண்ணெய் பசையுடன் அழகாக வைத்துக் கொள்வது, தலைக்கு குளித்துவிட்டு தலை முடியை நன்றாக காய வைக்காமல் இருப்பது.
தேவையற்ற கெமிக்கல் ஷாம்பு அதிகமாக பயன்படுத்துவது மற்றும் பொடுகு உள்ளவர்கள் அடுத்தவரின் சீப்பை பயன்படுத்துவது என்று பல காரணங்கள் சொல்லலாம்.
ஆரம்பத்தில் இதனை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம் இல்லை என்றால் முடி அதிகமாக உதிர ஆரம்பித்து விடும்.
பொடுகு நீங்க குறிப்பு 1
இந்த பொடுகு நீங்க மலைவேம்பு இலையுடன் துளசியை சேர்த்து நன்றாக அரைத்து சாறு பிழிந்து தலைமுடியின் வேர்ப்பகுதியில் நன்றாக தேய்க்க வேண்டும்.
பின்பு சிறிது நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும் இந்த முறையே தொடர்ந்து சிறிது நாட்களுக்கு செய்து வர பொடுகு தொல்லை படிப்படியாக குறைந்துவிடும்.
பொடுகு தொல்லை நீங்க குறிப்பு 2
பொடுகு நீங்க எளிய முறை சின்ன வெங்காய உங்களுடைய தலைமுடிக்கு தேவையான அளவு எடுத்துக் கொண்டு அவற்றை அரைத்துக் கொள்ளவும்.
பின்பு வடிகட்டி கொள்ளவும் இப்போது அவற்றை தலையில் தேய்த்து குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் வரை தலையில் வைத்து இந்த பின்பு வெதுவெதுப்பான நீரில் நீங்கள் தலைக்கு குளிக்க வேண்டும்.
இந்த முறை பொடுகு குணமாக ஒரு சிறந்த வழியாக எப்பொழுதும் இருக்கிறது.
பொடுகு தொல்லை நீங்க குறிப்பு 3
வெந்தயத்தை இரவில் ஊறவைத்து அவற்றை மறுநாள் காலையில் எடுத்து நன்கு அரைத்து அவற்றுடன் செம்பருத்தி இலையும் சேர்த்து அரைக்கவேண்டும்.
பின்பு அதில் வரும் சாறு எடுத்து தலையில் தேய்த்து குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்,பின்பு தலைக்கு குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
இப்பொழுது உடல் சூடு குறையும் அதுமட்டுமில்லாமல் பொடுகு நீங்கிவிடும்.
பொடுகு தொல்லை நீங்க குறிப்பு 4
தலைமுடி வறட்சியின் காரணமாக கூட பொடுகு பிரச்சனை ஏற்படுகிறது, எனவே இரவு நேரத்தில் வாரத்தில் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
பொடுகு தொல்லை நீங்க குறிப்பு 5
நீங்கள் எப்பொழுதும் தலைமுடிக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் சாதாரணமாக தலைக்கு தேய்க்க பயன்படுத்தாமல் அவற்றில் சிறிதளவு வசம்பு பவுடரை சேர்த்து ஊற வைத்து பின்பு தலைக்கு பயன்படுத்தினால் அந்த பிரச்சனைகள் நீங்கி விடும்.
பொடுகு தொல்லை நீங்க குறிப்பு 6
மருதாணி இலையை நன்கு அரைத்துக் கொள்ளவும் இவற்றுடன் தயிர் மற்றும் சில துளி எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து சில மணி நேரங்கள் மட்டுமே ஊற வைக்கவேண்டும்.
உடலின் நலம் மற்றும் அழகை பாதுகாக்க கூடிய
பின்பு தலையை நன்கு குளிர்ந்த நீரால் அலச வேண்டும் இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் பொடுகு சார்ந்த பிரச்சனைகள் நீங்கிவிடும்.
Benefits of eating turkey in tamil
பொடுகு தொல்லை நீங்க குறிப்பு 7
முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து அவற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தேய்த்து வர பொடுகு தொல்லை முற்றிலும் நீங்கிவிடும் சிறிது நாட்களில்.