
High Court order to hear bail plea of Senthil Balaji
செந்தில் பாலாஜிக்கு நல்ல நேரம் ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரிய மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற விவகாரம் தொடர்பான தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு முன்னதாக நீதிபதி எம் சுந்தர் தலைமையிலான அமர்வு தெரிவித்த நிலையில்.
சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது, சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அமலாக்கத்துறை சோதனைக்கு உள்ளானார்.
அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டார் போக்குவரத்து துறையில் கடந்த 2014-15 ஆம் ஆண்டுகளில் வேலை வாங்கி கொடுப்பதாக தெரிவித்து.
பல்வேறு நபர்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்தார் என்ற புகார் உள்ளது,இதற்கான ஆதாரமும் வலுவாக இருக்கிறது.
இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டார் மீதான விசாரணை தொடர வேண்டிய எனவும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கண்டனங்களுடன் தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிபதி ஆர் சக்திவேல் ஏற்கனவே விலகிய நிலையில் இந்த முறையீடு எப்படி ஏற்பது என நீதிபதி எம் சுந்தர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் இளங்கோ மாற்று அமர்வு இன்று இல்லை என்பதால் தான் தங்களிடம் முறையிடுவதாகவும் நிர்வாக ரீதியான உத்தரவை பிறப்பித்தால் கூட போதுமானது என தெரிவித்தார்.
எந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என கூறிய நீதிபதி வழக்கு தொடர்பான தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என நீதிபதியாம் சுந்தர் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆர் சுரேஷ் குமார் தலைமையில் அமர்வில் இன்று மீண்டும் முறையிடப்பட்டது இந்த நிலையில் தான் இன்று செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற விசாரிக்க வேண்டும் என்று.
உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது,வழக்கை சிறப்பாக நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு அனைத்து கோப்புகளையும் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
ஜாமீன் மனுவை விரைந்து முதன்மை அமர்வு நீதிமன்ற விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Chandrayaan 3 Vikram Lander landed on the Moon 2 time
இந்தியாவில் சிறந்த 10 சேமிப்பு திட்டங்கள் 2023