
How are the President and Vice President elected in India
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் முழு விவரம் இங்கே காணலாம்..!
குடியரசு தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது, இந்த தேர்தலில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் திரெளபதி முர்மு போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார், இந்த தேர்தல் முடிவுகள் ஜூலை 21ஆம் தேதி பிற்பகல் அறிவிக்கப்படுகிறது.
அதேபோல குடியரசுத் துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது, இந்த நிலையில் இந்தியாவில் குடியரசுத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தத் தேர்தலில் மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வாக்களிக்கிறார்கள்.
எலக்ட்ரோல் காலேஜ்
இவர்கள் எலக்ட்ரோல் காலேஜ் என அழைக்கப்படுகிறார்கள், இந்த வாக்காளர்கள் குழுமத்தில் 233 மாநிலங்களவை உறுப்பினர்கள் 543 மக்களவை உறுப்பினர்கள் என 776 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 4,804 எம்எல்ஏக்களும் அடைந்துள்ளார்கள்.
இவர்கள்தான் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கிறார்கள், இதில் சட்ட மேலவை உறுப்பினர்கள், வாக்களிக்க முடியாது அதேபோல நியமான எம்பிக்கள் வாக்களிக்க முடியாது.
எப்படி தேர்தல் நடைபெறுகிறது
குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படுவதற்கு போட்டியிடும் நபர்கள் 35 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்,
அதே போல் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதற்கு உரிய அனைத்து தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
இது இவ்வாறு இருக்க வாக்களிக்கும் முறை மற்றும் வாக்கு மதிப்புகள் மாறுபடுகிறது, 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இந்த தேர்தல் வாக்குகள் மதிப்பு கணக்கிடப்படுகிறது.
கணக்கிடும் முறை எப்படி
ஒரு மாநில எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு மற்ற மாநில எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பை விட அதிகமாகவும் குறைவாகவும் இருக்கும்.
அந்தந்த மாநில மக்கள் தொகையின் எண்ணிக்கையை பொறுத்து மாறுபடுகிறது.
அதாவது குறிப்பாக தமிழ்நாட்டு எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பானது, உத்தரப்பிரதேச எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பைவிட குறைந்ததாக இருக்கிறது.
மதிப்புகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது
அதன்படி தமிழ்நாட்டின் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 176 ஆகும். எனவே மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 176 X 234 = 41,184 ஆகும்.
உத்திரப் பிரதேசத்தின் வாக்கு மதிப்பானது 208 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு ஒட்டு மொத்த வாக்காளர்களின் வாக்கு மதிப்புகள் 10,86,31 அந்த அளவிற்கு இருக்கிறது.
இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு 708 என நிலையானதாக இருக்கும்.
எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு எவ்வளவு
எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பை இப்படிப் புரிந்துகொள்ளலாம் மாநில மக்கள் தொகையை அந்த மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து.
அதன் இவை ஆயிரத்தால் பெருக்கிக் கிடைக்கும் வாக்குகளை அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஒவ்வொருவரும் அளிக்கும் வாக்குகளின் மதிப்பாக இருக்கும்.
1000 பெருக்கிய பிறகு மீதமுள்ள 500 க்கு குறையாமல் இருக்க வேண்டும்.
எப்படி வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
இப்படியான நிலையில் போட்டியாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அந்தந்த மாநிலங்களில் உள்ள எம்பி களுக்கு பச்சை நிற சீட்டும் எம்எல்ஏக்களுக்கு சிவப்பு நிற சீட்டும் வழங்கப்படும்.
இதைக் கொண்டு வாக்களிக்கலாம் தேர்தல் முடிவுகள் யார் அதிக வாக்குகளைப் பெற்றார்கள் என்பதை விட குறிப்பிட்ட சதவீத வாக்குகளை கடந்த வரை வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்.
முடிவுகள்
குடியரசு துணைத் தலைவர் தேர்தலை பொறுத்த அளவில் போட்டியாளர் குறைந்தது 20 வாக்காளர்களாக முன்மொழிய வைக்கப்பட்டிருக்க வேண்டும், அதேபோல் 35 வயதை கடந்து இருக்க வேண்டும்.
அதிக வட்டி தரும் 3 அஞ்சல் அலுவலக திட்டங்கள் என்ன..!
மாநிலங்களவை உறுப்பினர்க்கு அனைத்து தகுதிகளையும் அவர் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும், அரசுப்பணிகளில் இருக்கக் கூடாது, இதில் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
post mortem report of Kallakurichi student in tamil
இரு அவைகளின் பலத்தின் அடிப்படையில் குடியரசுத் துணைத் தலைவராக தேர்வாக குறைந்தபட்சம் 393 வாக்குகளை கட்டாயம் பெற்றிருப்பது அவசியம்.