Health Tips

வாழ்நாளில் எத்தனை முறை மாரடைப்பு ஏற்படும்? அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள்..! How many times heart attack in lifetime for person

How many times heart attack in lifetime for person

How many times heart attack in lifetime for person

வாழ்நாளில் எத்தனை முறை மாரடைப்பு ஏற்படும்? அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள்..!

இருதயத்தின் ஆரோக்கியத்தில் எல்லோரும் கவனம் செலுத்துவது மிக அவசியம்,இருதயத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மாரடைப்பு ஏற்படுவது நிச்சயம்.

அதே நேரத்தில் அதன் அறிகுறிகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்.

இருதயம் மனித உடலின் மிக முக்கிய பகுதியாகும் நீண்ட காலத்திற்கு ஆயுள் வேண்டுமென்றால் அதை சரியாக பராமரிக்க வேண்டும்.

பொதுவாக ஒரு நபருக்கு ஆரோக்கியமற்ற உணவு குழப்பமான வாழ்க்கை முறை, உடல் பருமன், அதிக கொழுப்பு, உயரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது.

இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் உயிரிழக்கிறார்கள்,ஆனால் ஒருவருக்கு வாழ்நாளில் எத்தனை முறை மாரடைப்பு வரும்.

என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கிறது,இந்த கேள்விக்கான பதிலை இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

மாரடைப்பு ஏன் எப்படி ஏற்படுகிறது?

இருதய தமனிகளில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது அது பிளேக் உருவாக்க தொடங்குகிறது.

பின்னர் இதயத்தை நோக்கி ரத்த ஓட்டத்தை முழுமையாக குறைக்கிறது,அது போன்ற சூழ்நிலையில் ரத்தம் இதயத்தை அடைய அதிக சக்தி செலுத்த வேண்டும்.

அதன் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு ஏற்படலாம்.

மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள்

சுவாசப் பிரச்சினை

வாய்வு உருவாக்கம்

குமட்டல் வாந்தி

பல்வலி அல்லது தாடை

அமைதியற்ற உணர்வு

மயக்கம்

நெஞ்சுவலி

தீடீரென்று வியர்வை

வாழ்நாளில் எத்தனை முறை மாரடைப்பு வரும்

பெரும்பாலான இதய நோய் நிபுணர்கள் எந்த ஒரு நபரும் தனது முழு வாழ்நாளில் அதிகபட்சமாக 3 முறை மாரடைப்பை பெறலாம் என நம்புகிறார்கள்.

ஆனால் சில சந்தர்ப்பங்களில் அது அதிகமாகவே அல்லது குறைவாகவே இருக்கலாம்.

பொதுவாக 40 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள்,இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்,ஆனால் இந்த நோய் எந்த வயதினருக்கும் திடீரென்று மாரடைப்பு ஏற்படலாம்.

மாரடைப்பை தவிர்ப்பதற்கான வழிகள் இருக்கிறது

நீங்கள் மாரடைப்பை தவிர்க்க விரும்பினால் ஆரோக்கியமான உணவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்,அதேபோல் உப்பு, சர்க்கரை, மற்றும் எண்ணெய் உணவுகளை முடிந்தவரை தவிர்த்துக் விட வேண்டும்.

புகைத்தல், மது அருந்துதல், போதை பொருள், எடுத்துக் கொள்வது போன்றவை இருதயத்திற்கு ஆபத்தானவை ஏனெனில் இது மாரடைப்புக்கு முக்கிய காரணமாக அமையும் ரத்த அழுத்தத்தை இது உடலில் பல மடங்கு அதிகரிக்கிறது.

எடை அதிகரிப்பு மாரடைப்பு அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கும், எனவே முடிந்தவரை எடை கட்டுப்படுத்த முயற்சிக்கவும்.

இதய ஆரோக்கியத்தை வைத்திருக்கும் தினசரி உடல் செயல்பாடுகள் அவசியம்,எனவே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிச்சயம் உடற்பயிற்சி செய்யுங்கள்.

தினசரி குறைந்த மணி நேரம் தூங்கும் நபர்களுக்கு விரைவில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமான உலக சுகாதார மையம் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது.

இன்றைய அதி நவீன அறிவியல் உலகத்தில் மனிதனின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டுவிட்டது,குறிப்பாக இரவு நேரங்களிலும் கண் விழித்திருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால்.

உடல் உள் உறுப்புகளின் பாதிப்பு என்பது அதிகமாக இருக்கிறது, முக்கியமாக சிறுநீரகம் பாதிப்பு, கணையம் பாதிப்பு, இருதய பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, பெருங்குடல் பாதிப்பு,போன்ற நோய்கள் மக்களை கடுமையாக தாக்குகிறது.

இதில் புற்றுநோய் என்பது தனிப்பட்ட முறையில் மக்களை கடுமையாக தாக்கி வருகிறது,நீங்கள் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உங்களுடைய வாழ்க்கை முறையை நீங்கள் சரியாக கடைபிடிக்க வேண்டும்.

முக்கியமாக உணவு கட்டுப்பாடு மிக அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்,இயற்கை முறையில் கிடைக்கக்கூடிய காய்கறிகள் அதிகளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி தினம்தோறும் குறைந்தது 45 நிமிடம் செய்யுங்கள். உங்களுடைய மனதை எப்பொழுதும் அமைதியாக வைத்திருங்கள்.

அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் இருக்க பார்த்துக் கொள்ளுங்கள்,குறிப்பாக இரவில் அதிக நேரம் தூங்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

பத்திர பதிவு குறித்த சில விவரங்கள் 2023

ஜூலை மாத ராசி பலன்கள் 2023

How to get new ration card in tamil nadu

What is your reaction?

Excited
2
Happy
2
In Love
1
Not Sure
1
Silly
0