செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி 8 நாள் நீதிமன்ற விசாரணை How the ED is investigating Minister Senthil Balaji

How the ED is investigating Minister Senthil Balaji

How the ED is investigating Minister Senthil Balaji

அமைச்சர் செந்தில் பாலாஜி 8 நாள் நீதிமன்ற விசாரணை காவல்,மருத்துவமனையில் விசாரணை எப்படி நடக்கிறது..!

பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி 23ஆம் தேதி வரை 8 நாள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது அவர் புழல் சிறை காவலாளர்கள் கண்காணிப்பில் மருத்துவமனையில் உள்ள நிலையில் விசாரணை எப்படி நடக்கும் என்பது பற்றி பரபரப்பான தகவல் சொல்லியாகி உள்ளது.

தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி முறைகேடு செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

இந்த விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்த நிலையில் விசாரித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி நெஞ்சு வலிப்பதாக கூறி கதறி அழுந்தார்,அதன் பிறகு அவர் சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் இருதயத்தில் ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது,மேலும் செந்தில் பாலாஜிக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவும் மருத்துவர்கள் பரிந்துரை செய்தார்கள்.

இதன் பிறகு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கு செந்தில் பாலாஜி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

முன்னதாக செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதனால் புழல் சிறை காவலாளர்கள் கண்காணிப்பில் காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அமலாக்க துறைக்கு 8 நாள் காவலில் வைக்கஅனுமதி கொடுத்தது.

அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன் மூலம் வரும் 23ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கதுறையினர் விசாரணை நடத்த உள்ளனர்,இதற்கான ஏற்பாடுகளை அமலாக்கதுறையினர் செய்யத் தொடங்கியுள்ளார்கள்.

அதாவது தற்போது செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால் அவருக்கு புழல் சிறை காவலாளர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது அமலக்கத்துறை விசாரணை நடத்த உள்ளதால் சிஎஸ்ஐஎஃப் என்னும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் செந்தில் பாலாஜியின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

செந்தில் பாலாஜிக்கு இன்னும் மூன்று நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது, இதனால் அதற்கு முன்பாக விசாரணையை தீவிர படுத்த அமலாகத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காலை முதல் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சந்தித்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விசாரணைக்கு முன்பாக செந்தில் பாலாஜியின் உடல்நலம் குறித்த விவரங்களை மருத்துவர்களிடம் அமலகத்துறை கேட்க வாய்ப்புள்ளது.

தற்போது செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு தனியார்க்கு சொந்தமானது என்பதால் செந்தில் பாலாஜியின் உடல் நலன் குறித்த விவரங்களை அறிய.

தனியாக மருத்துவக் குழுவை அமலாக்கத்துறை அமைத்து செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து சோதனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

செந்தில் பாலாஜியின் கைதுக்கு மூன்று காரணங்கள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை

செந்தில் பாலாஜியின் சொத்துக்கள் பறிமுதல்

ஜூலை 1ம் தேதி முதல் ஆதார் கார்டு பயன்படுத்த முடியாது

What is your reaction?

Excited
1
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0