
How to apply e sevai maiyam in tamilnadu
தமிழகத்தில் இ-சேவை மையம் தொடங்குவதற்கு சிறந்த வாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது உடனே விண்ணப்பம் செய்யுங்கள்..!
தமிழக அரசு பல்வேறு வகையான வேலை வாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்கி வருகிறது.
அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் தற்போது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மத்திய அரசின் இணையதள சேவை மூலம் தமிழக அரசு வேலைவாய்ப்புகளையும் மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சேவைகளையும் செய்து வருகிறது.
குறிப்பாக மக்கள் தங்களது தேவையான அரசின் அடிப்படை சலுகை முதல் சான்றிதழ் பெறுவதற்கு பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது.
அரசு அலுவலகங்களில் இதன் மூலம் மிகப்பெரிய ஒரு கூட்ட நெரிசல் மற்றும் மக்களுக்கு சேவை செய்வதில் மிகப்பெரிய ஒரு குழப்பம் தாமதம் ஏற்பட்டது.
இதை உடனடியாக சரி செய்வதற்கு தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து இ-சேவை மையத்தை தொடங்கியது.
இதன் மூலம் வேலை வாய்ப்புகளும் உயர தொடங்கியது மக்களுக்கு தேவையான சேவைகள் உடனுக்குடன் வேகமாக பெற முடிகிறது.
வருமானச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் கார்டு பதிவிறக்கம், பான் கார்டு,குடும்ப அட்டை தொடர்பான சேவை, கல்லூரி சேர்வதற்கு விண்ணப்பம்.
தொலைபேசி கட்டணம், விமான டிக்கெட் புக்கிங், பேருந்து டிக்கெட் புக்கிங், ரயில் டிக்கெட் புக்கிங், மின்சார பில், கேஸ் பில், இறப்புச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ்.
திருமணச் சான்றிதழ்,ஆதார் அட்டை மூலம் பணம் எடுத்தல், உள்ளிட்ட பல்வேறு விதமான சேவைகள் மக்கள் இதன் மூலம் பெறுவதால் அரசு அலுவலகத்திற்கு மக்கள் செல்ல தேவையில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இ-சேவை மையம் தொடங்குவது எப்படி
தமிழக அரசு மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியை பொருத்தும் படிப்பில்லாத இளைஞர்களுக்கு அவர்களின் திறமையை பொருத்தும் வேலை வாய்ப்புகளை மாவட்ட வாரியாக உருவாக்கி வருகிறது.
இதன் மூலம் மாநிலத்தின் வேலை இல்லா திண்டாட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தனியார் மற்றும் அரசு துறைகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு ஏற்படுகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரை வருவாய் கிராமங்கள்தோறும் தனியார் இ-சேவை மையங்களை அமைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு புதிய வாய்ப்பை அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் ஏற்படுகள் செய்யப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் இ-சேவை மையத்தின் மையத்திற்கான உரிமம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் http://www.tnesevai.tn.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் விண்ணப்பிப்பது எப்படி
http://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இ சேவை மையம் தொடங்குவதற்கு நீங்கள் விண்ணப்பம் செய்யலாம்.
நீங்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றும் இ-சேவை மையம் தொடர்பான அனைத்து விதமான தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தில் தற்போது அனைத்து சிறு,குரு கிராமங்களிலும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த இ-சேவை மையம் தொடங்குவதற்கான உரிமம் இந்த மாதம் வழங்கப்பட்டு வருகிறது,இதனை இளைஞர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
அசல் சொத்து பத்திரம் தொலைந்து விட்டால்
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்