
How to apply for change of patta through online
பட்டா மாறுதல் வீட்டிலிருந்து இணையதளம் மூலம் பட்டமாதல் செய்ய முடியுமா தமிழக அரசு கொண்டு வந்த சிறந்த நடவடிக்கை..!
அரசின் சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெற்றுக் கொள்ளும் வகையில் பல துறைகளில் சேவைகள் இணையதளம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அந்த வகையில் பட்ட மாறுதலும் இணையதளத்தில் தொடங்கியுள்ளது, பட்டா என்பது வீடு, நில உரிமையாளர்கள், வைத்திருக்க வேண்டிய முக்கியமான ஆவணமாகும்.
ஒரு நிலத்தின் உரிமையை சுட்டிக் காட்டுவதற்கு இந்த ஆவணத்தை வருவாய்த்துறை மக்களுக்கு வழங்குகிறது.
இந்த ஆவணத்தில் உரிமையாளரின் பெயர்,நிலவகை, நிலம் அமைந்துள்ள மாவட்டம், வட்டம், பகுதி, சர்வே எண், உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உள்ளடங்கியிருக்கும்.
நிலத்தின் உரிமையாளர்களுக்கு என்ன நன்மை
நில உரிமையாளர்கள் பட்ட மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது இ-சேவை மையங்கள் மற்றும் சார் பதிவாளர்கள் அலுவலகமூலம் விண்ணப்பித்து.
அவை இணையதளத்தில் பரிசளிக்கப்பட்டு அதற்குப் பிறகு பட்டா மாறுதல்கள் இணையதள மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
எனினும் இ-சேவை மூலம் பொதுமக்கள் பட்டா விண்ணப்பம் செய்வதற்கு அதிக நேரம் ஏற்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
சரியான ஆவணங்கள் அங்கு கொண்டு செல்லாவிட்டால் சில நேரங்கள் பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் மற்றும் வசதிக்காக தமிழக அரசு இப்பொழுது எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் இருந்து பட்டம் மாறுதல் கோரிக்கை.
https://tamilnilam.tn.gov.in/citizen/என்ற அதிகாரப்பூர்வ இணையதள வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தொடங்கி வைத்துள்ளது,இணையதளம் மூலம் பட்டம் மாறுவதில் என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா.
இந்த இணையதள முறையில் பட்டம் மாறுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இ-சேவை மையத்திற்கும் தாலுகா அலுவலகத்திற்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை இனி வரும் காலங்களில் இருக்காது.
சரியான ஆவணங்களை வழங்குதல் உடனடியாக பட்டம் மாறுதல் உடனடியாக செய்யப்படும்.
இதில் இடைத்தரதாரர்களுக்கும் வேலை இல்லை இந்த இணையதளத்தில் எப்படிப்பட்ட மாறுதல் விண்ணப்பம் செய்வது தெரியுமா.
பட்டா மாறுதலுக்கு தேவையான ஆவணங்கள் (ஏதாவது ஒன்று)
கிரைய பத்திரம்
செட்டில்மெண்ட் பத்திரம்
விடுதலை பத்திரம்
பாகப்பிரிவினை பத்திரம்
தான பத்திரம்
பரிவர்த்தனை பத்திரம்
ஓட்டுநர் உரிமம்,வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், குடியிருப்புக்கான ஆவணங்கள், இவற்றில் ஏதாவது ஒரு அட்டை, தொலைரசீது,மின்கட்டணம் ரசீது, சமையல் எரிவாய்வு ரசீது.
எப்படிப்பட்ட மாறுவதற்கு விண்ணப்பிப்பது?
முதலில் https://tamilnilam.tn.gov.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே மனு செய்யலாம்.
இந்த இணையதளத்திற்கு நீங்கள் சென்றதும் உங்களுடைய பெயர், தொலைபேசி எண்,e-mail id கொடுத்து கணக்கு துவங்க வேண்டும்.
பிறகு பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டிய உட்பிரிவற்ற பட்டம் மாறுதல் அல்லது உட்பிரிவுடன் கூடிய பட்ட மாறுதல் என்பதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும் உங்களுடைய வசதிக்கேற்ப.
பிறகு உங்களது சுய விவரங்களையும் நிலத்தின் விவரங்களையும் நீங்கள் பதிவிட வேண்டும்.
அதாவது எந்த மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே எண் மற்றும் சப் டிவிஷன் நம்பர் என பிழை இல்லாமல் அனைத்தையும் சரியாக உள்ளீடு செய்ய வேண்டும்.
அதன்பிறகு சம்பந்தப்பட்ட நிலம் உங்களுக்கு சொந்தமானதா என்று ஆவணத்தையும் அல்லது கிரைய பத்திரம் உள்பட ஆவணங்களையும் நீங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதன்பிறகு உட்பிரிவேற்றப்பட்ட மாறுதலுக்கு வரிகள் இல்லாமல் ரூபாய் 60ம் உட்பிரிவுடன் கூடிய பட்ட மாறுதலுக்கு வரியுடன் ரூபாய் 460 கட்டணம் செலுத்த வேண்டும்.
இப்பொழுது உங்களது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட தாசில்தார்களுக்கு அனுப்பப்படும்,அவர் மூலம் கிராம நிர்வாக அலுவலர்,வருவாய் அலுவலர்,ஆகியோரிடம் விசாரணை நடத்தி பட்டம் மாறுதல் செய்யப்படும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Foods that prevent heart disease in tamil
TN provides loan assistance to start business
How to download e PAN card in tamil 2023