
How to apply online for TNPSC group 2 2A selection
TNPSC 5000+ காலிப்பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி குரூப் 2 2A தேர்வாளர்களின் கவனத்திற்கு..!
குரூப் 2 2A குறித்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகி உள்ளது மார்ச் மாதம் 23ஆம் தேதி வரை தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்தத் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்கும் முறைகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
குரூப் தேர்வுகள்
தமிழகத்தில் அரசு துறையில் வணிகவரி அதிகாரி, உதவிப் பிரிவு அலுவலர், நகராட்சி ஆணையர், வேளாண்மைதுறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்.
தொழில் துறை ஆணையர், மற்றும் வணிகம் மருத்துவம், மற்றும் கிராமப்புற சுகாதார சேவை, உள்ளிட்ட 33 பதவிகளுக்கு நடத்தப்படும் குரூப் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் 23ஆம் தேதி வெளியானது.
தமிழகத்தில் குரூப்-2 தேர்வுக்கு காலிப்பணியிடங்கள் 5,831 இருப்பதாகவும் அவற்றின் தகுதியானவர்களை கொண்டு தமிழகத்தில் இருக்கும் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழ்நாடு தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்வை எழுத விரும்பும் நபர்கள் மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
இந்தத் தேர்வுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்ப பதிவுகள் இப்பொழுது நடைபெற்று வருகிறது.
இந்த மாதம் 23ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேர்வாணைய நபரின் புகைப்படம், கல்வி சான்றிதழ், கையப்பம், தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ், போன்ற ஆவணங்கள் கட்டாயம் தேவைப்படும்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறைகள்
TNPSCன் -அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு முதலில் செல்லவேண்டும் அதில் one time registration என்ற.
பகுதியை கிளிக் செய்து கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து 150 ரூபாய் கட்டணம் செலுத்தி user id password set செய்ய வேண்டும்.
அடுத்ததாக TNPSC முகப்பு பக்கத்தில் apply online என்பதில் உங்களின் OTR கணக்கின் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.
அதில் திறக்கப்படும் புதிய பக்கத்தில் குரூப் 2 2A என்பதை கிளிக் செய்து, அதில் வரும் ஒவ்வொரு படிநிலைகளையும் கவனமாக நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
அடுத்த பக்கத்தில் புகைப்படம் போட்ட போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் Application Details இதில் One Time Registration நீங்கள் கொடுத்த விவரங்கள்.
அனைத்தும் இருக்கும் அதனை சரியாக பார்த்துவிட்டு தனிப்பட்ட விவரங்களுக்கு செல்ல வேண்டும்.
அதில் Special Category, Certificate Details, Educational Details,இருக்கும் அதனை அனைத்தும் பூர்த்தி செய்து சான்றிதழ்களையும் வெற்றிகரமாக பதிவேற்ற வேண்டும்.
அடுத்த பக்கத்தில் தமிழ் வழியில் பயின்ற விவரம், பள்ளி கல்லூரியில் பெயர்கள், சான்றிதழ் பெற்ற தேதி என அனைத்தும் கேட்கப்படும்.
உழவர் பாதுகாப்பு அட்டை வாங்குவது எப்படி..!
தமிழ் வழியில் படித்த இட ஒதுக்கீடு போன்ற விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
இறுதியாக Preview ஒரு புதிய பகுதி ஓபன் ஆகும் அதில் நீங்கள் கொடுத்த முழு விவரங்களை சரிபார்த்து Terms and Conditions அனைத்தையும் படித்துவிட்டு Save கொடுக்க வேண்டும்.
DMK announced candidate for the post of mayor and Deputy Mayor
இறுதியாக டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங், மூலம் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.
மேற்கண்ட நடைமுறைகளுக்கு பிறகு உங்களின் எதிர்காலத் தேவைக்கு அதனை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.