செய்திகள்

வீட்டில் இருந்தபடியே பான் கார்டு அப்ளை செய்வது எப்படி..! How to apply pan card online 2023

How to apply pan card online 2023

How to apply pan card online 2023

வீட்டில் இருந்தபடியே பான் கார்டு அப்ளை செய்வது எப்படி..!

இன்றைய காலகட்டத்தில் நீங்கள் இந்தியாவில் எந்த ஒரு செயலுக்கும் கட்டாயம் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு பயன்படுத்தியாக வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கிறது.

குறிப்பாக வங்கி கணக்கு தொடங்குவது முதல் கல்லூரி சேர்வது வரை அனைத்திற்கும் இந்த இரண்டு ஆவணம் மிக முக்கியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொழில் தொடங்குவதற்கு, வங்கியில் குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் பணம் செலுத்துவதற்கு, வருமான வரி கட்டுவதற்கு, குறிப்பிட்ட அளவிற்கு மேல் தங்க நகைகள் வாங்குவதற்கு, வாகனம் வாங்குவதற்கு, நிலம் வாங்குவதற்கு.

வாகனம் விற்பனை செய்வதற்கு, வெளிநாடு செல்வதற்கு, புதிய அலுவலகம் தொடங்குவதற்கு, என அனைத்திற்கும் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு மிகவும் முக்கியம்.

இந்த கட்டுரை வீட்டில் இருந்தபடியே எளிதாக பான் கார்டு அப்ளை செய்வது எப்படி என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்

முன்பெல்லாம் பான் கார்டு வாங்க வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்று பல மணி நேரம் கழித்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை நீங்கள் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் எளிதாக விண்ணப்பம் செய்யலாம்,விண்ணப்பம் செய்வதற்கு உங்களுக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை.

தேவையான ஆவணங்கள் என்ன

ஆதார் கார்டு

வாக்காளர் அடையாள அட்டை

பாஸ்போர்ட் புகைப்படம்

வாகன ஓட்டுனர் உரிமம்

மின்சார கட்டண ரசீது

தொலைபேசி கட்டணம் ரசீது

எரிவாயு சிலிண்டர் ரசீது

வங்கி ஸ்டேட்மெண்ட்

இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும் இவற்றோடு பிறந்த தேதி சான்றுக்கான பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளி சான்றிதழ் தேவை.

மேற்கூறிய சான்றுகள் இல்லாவிட்டால் கெசட்ட ஆபிஸர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

NSDL-ல் இணையதளத்தில் விண்ணப்பிப்பது எப்படி

இணையதளத்தில் பான் கார்டு விண்ணப்பிப்பதற்கு முதலில் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற இணையதளம் முகவரிக்கு செல்லவும்.

அதில் முதல் காலத்தில் அப்ளிகேஷன் டைப் என இருக்கும் அதில் புதியதாக பான் அப்ளை அல்லது கரெக்ஷன் என கொடுக்க வேண்டும்,இதில் இந்திய குடிமகனாக 49A அல்லது Foreign Citizen Form 49AA என்பதை கிளிக் செய்யவும்.

அதன் பிறகு என்ன category என்பதை கொடுக்கவும் அதாவது தனி நபர் அல்லது நிறுவனமா அல்லது டிரஸ்ட்டா என்பதை கொடுக்க வேண்டும்.

அதன் பிறகு டைட்டில் கொடுத்து உங்களது Last Name /Sur Name என்பதில் உங்களது பெயரை பதிவிடவும்.

கொடுக்க வேண்டிய விவரங்கள் என்ன

அதன்பிறகு உங்களது பிறந்த தேதி, ஈமெயில் ஐடி, மொபைல் எண், என சரியாக கொடுக்க வேண்டும்.

அதன் பிறகு கேப்சா போட்டு இருக்கும் அதனை சரியாக பதிவிட்டு கொள்ளுங்கள், அதன் பிறகு கீழே ஒரு சிறிய பாக்ஸ் இருக்கும் நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியானதா என பார்த்து Submit கொடுக்கவும்.

Submit கொடுத்த பிறகு உங்களுக்கு இன்னொரு திரை தோன்றும் அதில் உங்களது டோக்கன் நம்பர் இருக்கும் அதை நீங்கள் pdf ஆக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

e-KYC தேர்வுகள்

அதன்பிறகு கீழே உள்ள Continue With Pan Application Form என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும் அது மற்றொரு பக்கத்திற்கு செல்லும் அதில் மூன்று தேர்வுகள் இருக்கும்.

ஒன்று டிஜிட்டல் கேஒய்சி E-sing இருக்கும்

இரண்டாவது தேர்வு Submit Scanned Images Esign என இருக்கும்.

மூன்றாவது தேர்வு Forward Application Documents Physically என இருக்கும்.

எந்தத் தேர்வில் விண்ணப்பிக்க வேண்டும்

இதில் ஒன்று நாம் இன்று பார்க்க இருப்பது இரண்டாவது தேர்வு எனவே அதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்,அதன் பிறகு கீழே Physical Pan தேவையான என்ற ஆப்ஷன் இருக்கும் அதில் தேவை என கொடுத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு ஆதார் அட்டையில் உள்ள கடைசி நான்கு இலக்கு எண்களை கேட்கும் அதனை கொடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பிறகு ஆதாரில் உள்ளது போலவே பெயரை கொடுக்க வேண்டும் அதன் பிறகு பாலினம் (Gender) கொடுத்து உங்களுக்கு வேறு ஏதேனும் பெயர் இருந்தால் அதனை கொடுக்கவும்.

பிறகு உங்கள் தந்தையின் பெயர் கேட்கும் அதனை கொடுத்த பிறகு வருமானதிர்க்கான வழி (Source Of Income) எனக்கு கேட்கும் அதில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை கிளிக் செய்யவும்.

பின்னர் உங்களது வீட்டு முகவரியை சரியாக முழுமையாக சரியாக நிரப்ப வேண்டும்,அதன்பிறகு தொலைபேசி எண், இமெயில் ஐடி, கொடுக்கவும், அதன் பிறகு (Representative Assessee) என்று கேட்கும்.

அதில் NO என்பதை கிளிக் செய்யவும் பிறகு Next என்ற தேர்வை கிளிக் செய்யவும்.

AO விவரங்கள் என்றால் என்ன

இது அடுத்த பக்கத்திற்கு செல்லும் அதில் AO Details கேட்கும் அதில் கீழாக உள்ள பாக்ஸ்லிருந்து உங்களுக்கு தேவையான விவரங்களை எடுத்து பூர்த்தி செய்து கொள்ளலாம்,அதன் பிறகு NEXT என்ற தேர்வை கொடுக்கவும் இது அடுத்த பக்கத்திற்கு செல்லும்.

தேவையான ஆவண விவரங்கள் என்ன

அடுத்த பக்கத்தில் டாக்குமெண்ட் விவரங்கள் கொடுக்கவும் Proof of Address என்ற தேர்வுக்கு எதை கொடுக்க போகிறீர்கள் அதனை கிளிக் செய்யவும்.

உதாரணத்திற்கு ஆதார் கார்டை நீங்கள் கொடுக்கிறீர்கள் எனில் ஆதார் கார்டு என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.

அடுத்து பிறந்த தேதி என்ன ஆவணம் கொடுக்கப்போகிறீர்கள் என்பதை கேட்கும் அதில் ஆதார் அல்லது வேறு என்ன சான்றிதழ் கொடுக்க போகிறீர்கள் அதை கொடுக்கவும்.

அதற்கு கீழாக Declaration-ல் Himself/Herself என கேட்கும் நீங்கள் எங்கிருந்து பான் கார்டு அப்ளை செய்கிறீர்கள் என்பதை கேட்கும் அதைக் கொடுத்து தேதியை கொடுத்துக் கொள்ளவும்.

பதிவேற்றம் செய்ய வேண்டும் எப்படி

அதன்பிறகு உங்களுடைய புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும் அதில் உள்ள அளவில் JPG format 200 DPI முறையின் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதனுடைய Size 50kb அளவு இருக்க வேண்டும்,அதேபோல் கையெழுத்து மேற்கண்ட அளவுகளில் ஸ்கேன் செய்து கொண்டு கொடுக்கவும்.

அதன்பிறகு சப்போர்ட்டின் ஆவணத்தில் என்ன ஆவணம் கொடுக்கப் போகிறீர்கள் அதனை பிடிஎப் பார்மெட்டில் (PDF format) அளவிற்கு கொடுக்க வேண்டும்,இதனை கொடுத்த பிறகு Sumit கொடுக்க வேண்டும்.

இதன் பிறகு உங்களது அப்ளிகேஷன் வெற்றிகரமாக கொடுக்கப்பட்டதாகவும் உறுதி செய்யவும் கேட்கும் அதற்கு உங்களது முதல் 8 இலக்க ஆதார் எண்களை கேட்கும்.

அதனை கொடுத்து நீங்கள் கொடுத்த விபரங்கள் அனைத்தும் சரியானதா என்பதை பார்த்துவிட்டு Proceed என்பதை கொடுக்கவும்.

பணம் செலுத்துவதற்கான தேர்வு

அதன்பிறகு பணம் செலுத்துவதற்கான தேர்வு இருக்கும் அதில் இணையதளத்தில் செலுத்தலாம் எதைக் கொடுக்க விருப்பமோ அதனை கொடுத்துக் கொள்ளலாம் உங்களுடைய பேமெண்ட் successful என்றால் continue என்பதை கிளிக் செய்யவும்.

இறுதியாக aadhaar authentication

அதன்பிறகு aadhaar authentication செய்ய வேண்டும் அதில் aadhaar என்ற தேர்வை கிளிக் செய்தால் உங்கள் தொலைபேசி எண்ணுக்கு கடவுச்சொல் ஓடிபி (OTP) அனுப்பப்படும்.

அதனை கொடுத்து SUMIT கொடுத்தால் acknowledgement எண்கள் வரும் அதனை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியாக கொடுத்திருந்தால் உங்களுக்கு பான் கார்டு உங்களுடைய முகவரிக்கு ஒரு மாதத்திற்குள் அனுப்பப்படும்.

Pan card aadhar card link Status 2023

How to change address in PAN card

How to check PAN card misuse

PAN card new rules full details

PAN Card Aadhar Card link last date 2023

What is your reaction?

Excited
1
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0