செய்திகள்

குழந்தைகளுக்கு பான் கார்டு எப்படி எடுப்பது என்ன ஆவணங்கள் தேவை..! How to apply PAN Card online for minor

How to apply PAN Card online for minor

How to apply PAN Card online for minor

குழந்தைகளுக்கு பான் கார்டு எப்படி எடுப்பது என்ன ஆவணங்கள் தேவை..!

18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பான் கார்டு வாங்க முடியும், பெற்றோர்களின் உதவியுடன் குழந்தைகளுக்கு பான் கார்டுகளை வாங்க முடியும்,இதற்கு சில முக்கியமான ஆவணங்கள் மட்டும் தேவைப்படுகிறது.

நம் நாட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பான் கார்டு ஒரு முக்கியமான அரசு ஆவணமாக கருதப்படுகிறது, இது நிதி பரிவர்த்தனைகளுக்கும் பிற ஆவணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

நீங்கள் வங்கி கணக்கு தொடங்க விரும்பினால் அல்லது வேறு வேலை செய்ய விரும்பினாலும் பான் கார்டு மிக அவசியம் கூடுதலாக டீமேட் கணக்கை திறக்கவும் இந்த அட்டை அவசியம்.

அடையாள சான்றாக பான் கார்டு மிக முக்கியம் பலர் பான் கார்டு பெறுவதற்கு 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் அது உண்மை இல்லை.

18 வயதுக்குட்பட்ட சிறார்கள் அல்லது குழந்தைகளுக்கு கூட பான் கார்டு வாங்க முடியும்.

குழந்தைகளுக்கு வெளிநாடு செல்ல அல்லது பள்ளிகளில் கிடைக்கும் பலன்களை பெறுவதற்கு பான் கார்டு மிக அவசியம்.

18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான பான் அட்டை எளிதாக பெறலாம்,இதை எப்படி பெறுவது என்ற எளிய வழிமுறைகளை குறித்து முழுவதும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மைனர் பான் கார்டு விண்ணப்பிக்கும் முறை

18 வயது உட்பட்ட குழந்தைகள் நேரடியாக பான் கார்டு விண்ணப்பிக்க முடியாது,18 வயது உட்பட்ட குழந்தைகளுக்கு பான் கார்டு பெறுவதற்கு தாய் தந்தை இருவரிடமும் கட்டாயம் இருப்பிடச் சான்றிதழ்.

அடையாள அட்டை, பெற்றோரின் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை,போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும்.

இந்த ஆவணங்களை பயன்படுத்தி பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் எப்படி விண்ணப்பிப்பது

பான் கார்டுக்கு விண்ணப்பிக்க நீங்கள் அதிகாரப்பூர்வை NSDL இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

பின்னர் குழந்தைகள் அல்லது சிறார்கள் விண்ணப்பத்திற்கான பிரிவில் உள்ள விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இப்போது தேவையான அனைத்தும் தகவல்களையும் பூர்த்தி செய்யவும் குழந்தைகளின் வயது தொடர்பான தகவல்கள் மற்றும் ஆவணங்களின் நகல்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

படிவத்தை பூர்த்தி செய்யும்போது பெற்றோர் இருவரும் தங்கள் சொந்த புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் செய்யப்பட்ட இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

இந்த செயல்முறைக்கு பிறகு நீங்கள் பான் கார்டு 107 ரூபாய் இணையதளத்தில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்தை இப்போது சமர்ப்பிக்கவும் சிறிது நேரம் கழித்து உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பான் கார்டு விண்ணப்பம் குறித்த தகவல் அடங்கிய குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

இதனைத் தொடர்ந்து சரி பார்த்தல் நடத்தப்படும் சரி பார்த்தல் 15 நாட்களுக்குப் பிறகு உங்கள் முகவரிக்கு பான் கார்டு அனுப்பப்படும்.

இந்த செயல்முறை பின்பற்றுவதன் மூலம் உங்கள் குழந்தையின் பான் கார்டு எளிதாக பெற முடியும்.

https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றால் பான் கார்டு சம்பந்தமான அனைத்து விதமான தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் பான் கார்டில் புகைப்படம் இருக்காது அதற்கு பதிலாக (MINOR) என்ற வார்த்தை அடங்கியிருக்கும்.

பிறகு உங்கள் குழந்தை 18 வயதை பூர்த்தி செய்த பிறகு இந்த பான் கார்டு மறுபடியும் நீங்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

How to apply pan card online 2023

Pan card aadhar card link Status 2023

How to change address in PAN card

How to check PAN card misuse

PAN card new rules full details

PAN Card Aadhar Card link last date 2023

What is your reaction?

Excited
0
Happy
2
In Love
1
Not Sure
1
Silly
0