செய்திகள்

கூட்டு பட்டாவை தனிப்பட்டவாக மாற்றுவது எப்படி..! How to change kootu patta thani patta 2023

How to change kootu patta thani patta 2023

How to change kootu patta thani patta 2023

கூட்டு பட்டாவை தனிப்பட்டவாக மாற்றுவது எப்படி..!

நம் அனைவருக்கும் நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் வாழ்க்கையில் இருந்து கொண்டே இருக்கும்,இப்பொழுது இந்திய அரசு பெண்களுக்கும் பூர்வீக சொத்தில் சமபங்கு இருக்கிறது என்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்த பிறகு.

அனைத்து குடும்பங்களிலும் நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் என்பது மிக அதிகமாக இருக்கிறது.

பட்டம் மாறுதல், புதிய பட்டா பெறுதல், கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்ட பெறுவது, பத்திர பதிவு செய்வது, என நிலம் சம்பந்தமான பல்வேறு சிக்கல்கள் அனைத்து குடும்பத்தினருக்கும் இருக்கும்.

இந்தக் கட்டுரை அதற்கான வழிமுறைகள் என்னென்ன தனிப்பட்டவாக மாற்றுவதற்கு நாம் எங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

கூட்டு பட்டா என்றால் என்ன

அதாவது கூட்டு பட்டாவில் உரிமையாளர் பெயர் என்று போட்டு எத்தனை நபர்கள் உரிமையாளர்கள் இருக்கிறார்கள், அவர்களுடைய பெயர்கள் பட்டியல் ஈடப்பட்டு இருக்கும்.

அவர்கள் தான் சம்பந்தப்பட்ட நிலத்திற்கு உரிமையாளராக இருப்பார்கள்.

அதுவே தனிப்பட்டவாக இருந்தால் அந்த தனிப்பட்ட நபருடைய பெயரில் தான் சம்பந்தப்பட்ட நிலத்திற்கு உரிமையாளர் இருப்பார்.

உதாரணத்திற்கு ஒரு கூட்டு பட்டாவில் உள்ள ஐந்து நபர்களில் ஒரு நபர் மட்டும் அவருடைய நிலத்திற்கு தனிப்பட்ட வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால் அவர்கள் தனிப்பட்ட முறையில் பட்டா வங்கிக் கொள்ள முடியும்.

ஆனால் இந்த கூட்டு பட்டாவை மட்டும் வைத்து அவர்கள் தனிப்பட்ட வாங்கி விட முடியாது.

அதற்கு ஒரு சில ஆவணங்கள் தேவைப்படும் அந்த ஆவணங்களுடன் இந்த கூட்டு பட்டாவையும் சேர்த்து விண்ணப்பிக்கும் போது தான் அவர்களுக்கு தனிப்பட்ட கிடைக்கும்.

எங்கு எப்படி விண்ணப்பிக்கலாம்

கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எங்கு விண்ணப்பிக்கலாம் என்றால் அதனை நீங்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க முடியும்.

அதேபோல் நேரடியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் என்றால் நாமே இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாது, இ-சேவை மையத்திற்கு சென்று கூட்டு பட்டாவை தனிப்பட்டவாக மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்ன

இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்றால்.

உங்கள் நிலத்தினுடைய பாகப்பிரிவினை பத்திரம் தேவைப்படும்.

உங்கள் நிலத்திற்கான வரைபடம் தேவைப்படும்.

அதாவது சர்வேயர் அழைத்து உங்கள் நிலத்தை மட்டும் அளந்து ஒரு நில வரைபடம் வரைந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அந்த நிலத்தினுடைய ஆவணங்கள்,

நிலத்தின் வரைபட நகல்,

ஆதார் அட்டை,

உங்களுடைய புகைப்படம்,

வாரிசு சான்றிதழ்.

ஒரு இடத்திற்கு ஐந்து நபர்கள் கூட்டப்பட்டாவாக வாங்கி அவற்றில் ஒருவர் உயிரிழந்து விட்டால் அவருடைய பிள்ளைகளுக்கான வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் போன்றவை தேவைப்படும்.

கூட்டு பட்டாவை தனிப்பட்ட வாக மாற்றுவதற்கான வழிகள்

நீங்கள் இணையதளத்தில் விண்ணப்பிப்பது இருந்தால் உங்களுடைய கூட்டு பட்டா மற்றும் பாகப்பிரிவினை பத்திரத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.

அவர்கள் உங்களுக்கு விண்ணப்பித்து தருவார்கள் பிறகு அந்த விண்ணப்பம் நேரடியாக உங்கள் ஊரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு செல்லும்.

அவர்கள் அந்த ஆவணங்கள் அனைத்தையும் சரியான இருக்கிறதா என சரி பார்ப்பார்கள்.

பிறகு அவர் அந்த கூட்டு பட்டாவில் யாருக்கெல்லாம் உரிமை இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் ஒரு கடிதம் அனுப்புவார்கள், அந்த கடிதம் மற்றவர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டால்.

அதன் பிறகு நேரடியாக கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள, சர்வேயருக்கு அந்த விண்ணப்பத்தை கொடுப்பார்கள்.

அதன்பிறகு சர்வேயர் வைத்து நீங்கள் எந்த இடத்திற்கு தனி பட்டா விண்ணப்பம் கேட்கிறீர்களோ அந்த நிலத்தை மட்டும் அளந்து FMB ஒரு வரைபடம் போடுவார்கள், அது போக உங்கள் நிலத்திருக்கும் ஒரு விண்ணப்பம் எண் ஒன்று கொடுத்து விடுவார்கள்.

அதன் பிறகு உங்களுடைய விண்ணப்பங்கள் தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

தாசில்தார் என்ன செய்வார் என்றால் உங்கள் ஆவணங்களை ஒரு முறை சரி பார்த்து விட்டு உங்களுக்கு தனிப்பட்ட கொடுத்து விடுவார்கள்.

Pan card aadhar card link Status 2023

How to change address in PAN card

How to check PAN card misuse

PAN card new rules full details

PAN Card Aadhar Card link last date 2023

What is your reaction?

Excited
4
Happy
5
In Love
4
Not Sure
5
Silly
4